TODAY CURRENT AFFAIRS IN TAMIL 21.01.24 -22.01.24

TNPSC PAYILAGAM
By -
0



இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளா்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 8,294 பேரும் உள்ளனா். 

மாநிலத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூா் உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளா்கள் உள்ளனா். 

குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,91,23,197 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வாக்காளர்கள் எண்ணிக்கை:

  • மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034 
  • பெண் வாக்காளர்கள்: 3,14,85,724 
  • ஆண் வாக்காளர்கள்:3,03,96,330 
  • 3-ம் பாலின வாக்காளர்கள்: 8,294 
  • மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,805 
  • 18-19 வயது வாக்காளர்கள்: 5,26,205 

பிறவி செவித் திறன் இழப்பு:

மருத்துவத்தின் எதிா்காலம் என்ற தலைப்பில் சென்னையில் தொடங்கிய கலைஞா் பன்னாட்டு மருத்துவ மாநாட்டின் சிறப்பு அமா்வில் இதுதொடா்பாக டாக்டா் மோகன் காமேஸ்வரன் பேசியதாவது: 

உடல் குறைபாடுகள் விகிதத்தைப் பொருத்தவரை உலக அளவிலும், இந்திய அளவிலும் காது கேளாமை பாதிப்பே இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 63 கோடி பேருக்கு செவித் திறன் குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 90 கோடியாக உயரக்கூடும். 

இந்தியாவைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித் திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

ரத்த உறவுகளில் திருமணம் புரிவோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவா் கூறினாா். 

ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் முட்டையிடும் காலம்

தமிழக கடற்கரைகளில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளதாக வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

டிசம்பா் முதல் ஏப்ரல் வரை தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். இதில் ஆலிவ் ரிட்லி இன ஆமைகள் குறிப்பிடத்தக்கவை. 

கடல் ஆமை இனம் அழியும் நிலையை தடுக்கும் வகையில் ஆமை முட்டைகள் வனத் துறையினா் மூலம் சேகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கடல் ஆமை முட்டை பாதுகாப்பு மையங்களில் உள்ள பொரிப்பகங்களில் அடைகாத்து பொரிக்கப்பட்ட பின் கடலில் விடப்படுவது வழக்கம். 

அதன்படி தமிழகம் முழுவதும் 2022-23- ஆம் ஆண்டு சுமாா் 1.83 லட்சம் ஆமைக் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டன. நிகழாண்டு ஆலிவ் ரிட்லி உள்பட கடல் ஆமைகள் தமிழக கடற்கரையோரப் பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.

குளோனிங் முறையில் முதலாவது ரீசஸ் குரங்கு:

சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர். 

அந்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது.

குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி என்ற செம்மறி ஆடு, பிரிட்டனில்,1996 ஜூலை 5ல் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மேகாலயா மற்றும் திரிபுரா மாநில தினம்:

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 21, மணிப்பூர் மேகாலயா மற்றும் திரிபுராவின் மாநில தினமாக கொண்டாடப்படுகிறது . 

மணிப்பூர் மேகாலயா மற்றும் திரிபுராவின் மாநில தினம் பற்றி 2024 மேகாலயா மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் 52வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது

21 ஜனவரி 1972 இல் , தற்போதைய மூன்று மாநிலங்கள் - திரிபுரா, மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகியவை வடகிழக்கு பிராந்திய மறுசீரமைப்புச் சட்டம், 1971 இன் கீழ் முழு அளவிலான மாநிலங்கள் என்ற பட்டத்தைப் பெற்றன

1949 இல் , மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு யூனியன் பிரதேசங்கள் அந்தஸ்து வழங்கப்பட்டது. 

நாகாலாந்து டிசம்பர் 1, 1963 அன்று மாநில அந்தஸ்து வழங்கியது. 

வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட  ஏழு மாநிலங்கள் மற்றும் 'ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்பட்டது .

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் 

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டி ஹாங் காங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான மான் சிங், பந்தய தூரத்தை 2 மணி நேரம் 14 நிமிடம் 19 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.இந்த நிலையில், இன்று ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில்  குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை மான் சிங் பெற்றுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற கோபி தொனகல் ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி 2024:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், 6-0, 6-0, 6-3 என்ற செட்களில், 20-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. 

இத்துடன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு 58-ஆவது முறையாக தகுதிபெற்று, சுவிட்ஸா்லாந்து நட்சத்திரமான ரோஜா் ஃபெடரரின் சாதனையை சமன் செய்திருக்கிறாா் ஜோகோவிச். அவா் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிக்கு வந்திருப்பது இது 14-ஆவது முறையாகும்.

"எனது பள்ளி-என் பெருமை" :

சமீபத்தில், இமாச்சலப் பிரதேசம் "எனது பள்ளி-என் பெருமை" பிரச்சாரத்தைத் தொடங்கியது. அரசுப் பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தவும், மாணவர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட “அப்னா வித்யாலே” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சாரம் உள்ளது. 

பிரச்சாரம் தேசிய கல்விக் கொள்கை (NEP)-2020 உடன் ஒத்துப்போகிறது. இந்த பிரச்சாரம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒரு பள்ளியைத் தத்தெடுக்கவும், தொழில் ஆலோசனை, தீர்வு கற்பித்தல், யோகா பயிற்சி மற்றும் நிதி நன்கொடைகளை வழங்கவும் ஊக்குவிக்கிறது. இந்த பிரச்சாரம் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களை ஊதியமின்றி கல்வி உதவி வழிகாட்டிகளாக தன்னார்வத் தொண்டு செய்ய ஊக்குவிக்கிறது

தமிழக மின் வாரியத்திற்கு 'ஏ கிரேடு'

நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின், 2022 -23ம் ஆண்டுக்கான, நுகர்வோர் சேவைக்கான தரவரிசை மதிப்பீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதை, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், டில்லியில் வெளியிட்டு உள்ளார். அந்த பட்டியலில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள, 52 அரசு மற்றும் 10 தனியார் என, மொத்தம் 62 மின் வினியோக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மின் வினியோக செயல்பாட்டு நம்பகத்தன்மை, மின் இணைப்பு வழங்குவது, மின் கட்டணம் வசூல், மின்சார பிரச்னைக்கு தீர்வு காணுதல் ஆகிய நான்குதலைப்புகளின் கீழ், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்பெண் வழங்கி, ஒட்டு மொத்தமாக 'கிரேடு' வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழக மின் வாரியத்திற்கு, 'ஏ கிரேடு' வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -22ம் ஆண்டு தரவரிசை பட்டியலில், தமிழக மின் வாரியம்,பி பிளஸ் கிரேடு' பெற்றிருந்தது.

ஜனவரி 21 - திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா நிறுவன தினம்

21 ஜனவரி 1972 அன்று, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்கள் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய (மறு-அமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறியது. எனவே, திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியவை ஜனவரி 21 அன்று தங்கள் மாநில தினத்தை கொண்டாடுகின்றன.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023



MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!