TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.01.24

TNPSC PAYILAGAM
By -
0



தூர்தர்ஷன் பொதிகை’ தொலைக்காட்சியானது ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றம்

நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் ‘தூர்தர்ஷன் பொதிகை’ தொலைக்காட்சியானது ‘டிடி தமிழ்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியின்போது அறிமுகம் செய்து வைத்தார். தொலைக்காட்சி சேனல் லோகோவின் வண்ணமும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய அம்சங்களுடன் ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

அரசுத்துறை தொலைக்காட்சி நிறுவனமாகிய தூர்தர்சன் பல்வேறு மொழிகளுக்காகத் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தியபோது சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக ஏப்ரல் 15, 1993ஆம் ஆண்டு “டிடி-5" என்ற தொலைக்காட்சி பிணையத்தை நிறுவியது.

47-ஆவது சென்னை புத்தகக் காட்சி:

அறிவுத் திருவிழாவான 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 03/01/24 முதல் நடைபெற்று வருகிறது. 

இதுவரை 8.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புத்தகக் காட்சிக்கு வந்து நூல்களை வாங்கிச் சென்றுள்ளனா். இதற்கிடையில், சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் ஜன. 16, 17,18 ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த, மிகப் பெரிய புத்தகக் காட்சி ஜொ்மனியின் பிராங்பா்டில் நடைபெறும் பன்னாட்டு புத்தகக் காட்சியாகும். இந்தக் காட்சியைப்போல தமிழகத்திலும் நடத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இரண்டாம் முறையாக இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட ரூ. 6 கோடி செலவிடப்பட்டது.

கடந்த முறை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 360 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 100 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பூா்த்தியாகும் நிலையில் உள்ளன. இந்த முறை அதிலிருந்து இரு மடங்காக 752 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களில் தொடங்கி, பெரும்பாலான நவீன எழுத்தாளா்களின் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய புரிந்துணா்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைப்போல பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யவும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின:

ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் 19.01.24 தொடங்கின. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், பிகாரைத் தொடா்ந்து 2-ஆவது மாநிலமாக ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. 

மாநிலத்தின் 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிசி) மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மாநிலத்தின் பல்வேறு சமூகத் தலைவா்களிடம் மாநில அரசு கருத்துகளை கேட்டது. பின்னா், அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

ஆந்திரத்தில் வரும் மே மாதத்தில் மக்களவையுடன் சோ்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ள சூழலில், அதற்கு முன்னதாக ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் 19.01.24 தொடங்கப்பட்டன. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தன்னாா்வலா்களுடன் இணைந்து மாநில கிராமச் செயலக அமைப்பு மேற்கொள்ள உள்ளது.

நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-ஆவது நாடு

கடந்த 2023 செப்டம்பர் 7ஆம் தேதி நிலவை நோக்கி ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் 19/01/24 வெற்றிகரமாக தரையிறங்கியது. 

இதன்மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டா் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் ‘நிலவின் ஸ்னைப்பா் (தொலைவிலிருந்து துல்லியமாக சுடும் வீரா்)’ என்று அழைக்கப்படுகிறது.

சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிந்த மக்கள் தொகை:

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. இதனால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதம் உயர்ந்து வருகிறது

60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் சீன மக்கள் தொகை குறைந்தது. கடந்த ஆண்டிலும் (2023) மக்கள் தொகை 2 மில்லியன் (20 லட்சம் அளவிற்கு) அளவுக்கு குறைந்தது. சீனாவில் தற்போது 1.4 பில்லியன் (140.9 கோடி) மக்கள் உள்ளதாகவும் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இரண்டாவது ஆண்டாக இறப்பு விகிதம் உயர்ந்து, பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால், மொத்த மக்கள் தொகையில் 2 மில்லியன் குறைந்ததாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சென்றது. இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹ்தாரி வந்தனா யோஜனா 2024:

சத்தீஸ்கர் சமீபத்தில் மஹ்தாரி வந்தனா யோஜனா 2024 ஐ அறிமுகப்படுத்தியது.

அரசின் முன்முயற்சியானது பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் பொருளாதார உதவி வழங்குவதையும், தன்னம்பிக்கை மற்றும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் பெண்களுக்கு செலவினங்களை நிர்வகித்தல், சிறு தொழில்களை தொடங்குதல் மற்றும் அவர்களின் நிதி நிலைமைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் உதவுகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றங்கள் மூலம், மஹ்தாரி வந்தனா யோஜனா 2024 என்பது சத்தீஸ்கரில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாநில அளவிலான முயற்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய்-திட்டம்(பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்)

தமிழ்நாடு – கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (15.09.2023)

கிருஹ லட்சுமி – கர்நாடகம்

மகாலட்சுமி – தெலுங்கானா

இரண்டாம் தலைமுறை டிஸ்ட்ரஸ் அலர்ட் டிரான்ஸ்மிட்டரை (DAT) இஸ்ரோ உருவாக்கியுள்ளது:

கடலில் மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் இரண்டாம் தலைமுறை டிஸ்ட்ரஸ் அலர்ட் டிரான்ஸ்மிட்டரை (DAT) இஸ்ரோ உருவாக்கியுள்ளது.  

செயற்கைக்கோள் தொடர்பு மூலம் மீனவர்கள் அவசரச் செய்திகளை நிகழ்நேர ஒப்புதலுடன் அனுப்ப தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. DAT-SG, மேம்படுத்தப்பட்ட பதிப்பு, மேம்பட்ட திறன்கள் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்துகிறது. இந்திய மிஷன் கட்டுப்பாட்டு மையத்தில் டிகோட் செய்யப்பட்ட செய்திகள், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள், தகுந்த நேரத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட படகுகளைக் கண்டறிய உதவுகின்றன, மீனவர்களுக்கு வரவிருக்கும் உதவியை உறுதிப்படுத்துகின்றன.

இருதரப்பு தொடருக்கான முதல் பெண் நடுநிலை நடுவராக ஐசிசியால் நியமிக்கப்பட்டவர் :

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இருதரப்பு தொடரை நடுவராக பணியாற்றும் முதல் பெண் நடுநிலை நடுவராக சூ ரெட்ஃபெர்னை நியமித்தது. 

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரெட்ஃபெர்ன் நடுவராக இருப்பார்.


ஜனவரி 20 - பெங்குயின் விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 அன்று, பென்குயின் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. மனிதர்கள் பொதுவாக பெங்குவின்களின் இயற்கையான வாழ்விடங்களில் வாழாததால், இனங்களின் வருடாந்திர மக்கள்தொகைக் குறைவு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. 

இந்த முக்கியமான பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் ஒரு அற்புதமான முயற்சியாகும்.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023



MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!