TODAY CURRENT AFFAIRS IN TAMIL 08.01.24
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6, 64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (08/01/2024) தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் 2 நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- பல தொழிற்சாலைகளை திறந்துவைத்து, பல தொழிற்சாலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (08/01/2024) தொடங்கியது.
KEY POINTS : Tamil Nadu Global Investors Meet 2024 / உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
நாட்டின் நிலக்கரி இறக்குமதி:
- நாட்டின் நிலக்கரி இறக்குமதி நவம்பர் மாதத்தில் 11.7 சதவிகிதம் அதிகரித்து 20.95 லட்சம் டன்னாக உள்ளது.
- அதே வேளையில் 2022 நவம்பரில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 187.5 லட்சம் டன்னாக இருந்தது என்று பி2பி இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்க்ஷன் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
- இருப்பினும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 1,734.7 லட்சம் டன்னிலிருந்து 1,690.800 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
81-வது ‘கோல்டன் குளோப் விருது 2024:
- 2023-ஆம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதும் இந்த படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், ஓப்பன்ஹெய்மர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதையும்,
- கதாநாயகன் சிலியன் மர்ஃபிக்கு சிறந்த நடிகருக்கான விருதையும்,
- நடிகர் ராபர்ட் டவுனிக்கு சிறந்த துணை நடிருக்கான விருதையும் வென்றுள்ளனர்.
- சிறந்த நடிகைக்கான விருது லில்லி கிலேட்ஸ்டோனுக்கு ‘கில்லர்ஸ் ஆஃப் தி மூன்’ திரைப்படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல்:
- வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
- 299 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அதன் கூட்டணிக் கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆளும் அவமி லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஷசன் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து, வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக முதல்முறையாக ஷகிப் அல் ஹசன் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்திய விமானப் படையின் ‘சி-130ஜே’ போக்குவரத்து விமானம்
- லடாக் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தானுடான ‘எல்லைக் கட்டுப்பாடு கோடு’ (எல்ஓசி) அருகே, உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள காா்கில் ஓடுதளத்தில் இந்திய விமானப் படையின் ‘சி-130ஜே’ போக்குவரத்து விமானம் முதல் முறையாக இரவில் தரையிறக்கப்பட்டது.
- காா்கில் ஓடுதளம், கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 10,500 அடி உயரத்தில் இருக்கிறது.
நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்:
- மத்திய பிரதேச மாநிலம், நா்மதை நதியில் ஓம்காரேஷ்வா்பகுதியில் 278 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நிலையம் வரும் மாா்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
- உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் திட்டம்: ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீரில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன; எனினும், மத்திய பிரதேசம் நா்மதை நதியின் நீா்த்தேக்கத்தில் ஓம்காரேஷ்வா்பகுதியில் தண்ணீா் மீது மொத்தம் 600 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் உலகிலேயே மிகப் பெரிய நிலையம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நீரில் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலைய திட்டம் மூலம் முதல் கட்டமாக 278 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது கட்டத்தில் 322 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படும்.
ஜனவரி 8 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்
தென்னாப்பிரிக்க நேட்டிவ் நேஷனல் காங்கிரஸ் (SANNC) 1912 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி ஜான் லங்காலிபலே டூப் என்பவரால் ப்ளூம்ஃபோன்டைனில் நிறுவப்பட்டது.
இதற்குப் பின்னால், கறுப்பின மற்றும் கலப்பு இன ஆப்பிரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது அல்லது ஆப்பிரிக்க மக்களை ஒன்றிணைத்து அடிப்படை அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பது முதன்மை நோக்கமாக இருந்தது.
ஜனவரி 8 - பூமியின் சுழற்சி நாள்
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 8 ஆம் தேதி புவி சுழற்சி தினமாக அங்கீகரிக்கப்படுகிறது.
ஜனவரி 8 பூமியின் சுழற்சி நாள். 1851 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோ பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்பதை நிரூபித்ததை நினைவுகூரும் நாள்.
1851 ஆம் ஆண்டு நடந்த உலக கண்காட்சியில், பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோ ('ஃபூ கோ' என்று உச்சரிக்கப்படுகிறார்) பாரிஸில் உள்ள பாந்தியோன் உச்சியில் இருந்து ஈயம் நிரப்பப்பட்ட பித்தளை பந்தை இடைநிறுத்தி பூமி எவ்வாறு சுழல்கிறது என்பதை விளக்கினார்.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment