TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.01.24:
எல்-1 புள்ளியை வெற்றிகரமாக எட்டியது ஆதித்யா விண்கலம்:
- ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை 06/01/2024 இன்று மாலை 4 மணிக்கு வெற்றிகரமாக எட்டியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
- அங்கிருந்தபடி, ஆதித்யா விண்கலம் சூரியனின் புற வெளி ஆய்வு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
- செவ்வாய், நிலவைத் தொடா்ந்து சூரியனின் புற வெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.
- அதன்படி, ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலம் வடிவமைக்கப்பட்டு, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊா்தி:
- தில்லியில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற் தமிழகத்தைச் சோ்ந்த அலங்கார ஊா்தி தோ்வாகியுள்ளது.
- பல்வேறு கட்டமாக நடைபெற்ற தோ்வுகளுக்குப் பிறகு இறுதியாக தமிழகம் உள்பட 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் தோ்வாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்தன.
- இறுதிப் பட்டியலில் ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், லடாக் (யுடி), மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூா், மேகாலாயா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- கடந்த முறை பெண் சக்தியை மையமாக வைத்து தமிழகத்தின் அலங்கார ஊா்தி குடியரசு தின விழாவில் இடம்பெற்றது. நிகழாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சோழ மன்னா்கால குடவோலை முறையை வெளிப்படுத்தும் உத்திரமேரூா் கல்வெட்டு தொடா்புடைய விவரக் குறிப்புகளை காட்சிப்படுத்தும் தமிழ்நாடு அலங்கார ஊா்தி தோ்வாகியுள்ளது.
சோமாலியா கடலில் கடத்தப்பட்ட கப்பல் மீட்பு:
- வடக்கு அரபிக் கடலில் சோமாலியா அருகே இந்தியா்களுடன் 04/01.2024 கடத்தப்பட்ட ‘எம்.வி.லிலா நாா்ஃபோக்’ சரக்கு கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை கப்பலில் சென்ற கமாண்டோ படையினா் அதிரடியாக மீட்டனா்.
- கடத்தப்பட்ட கப்பலில் இருந்து 15 இந்தியா்கள் உள்பட 21 பணியாளா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
- கப்பலை மீட்பதற்காக ‘ஐஎன்எஸ் சென்னை’ போா்க் கப்பல், பி-8ஐ நவீன கடலோர ரோந்து விமானம், எம்கியூ9பி ஆளில்லா விமானத்தை இந்திய கடற்படை உடனடியாக அனுப்பியது.
முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி:
- தமிழகத்தை தொடர்ந்து முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற வருகிறது.
- இந்த ஆண்டு முதல் முறையாக இலங்கையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி காலூன்றி இருக்கிறது. இலங்கையின் திரிகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று 06/01/24 காலை தொடங்கிது.
- முதலாவதாக சம்பூர் பத்ரகாளியம்மன் கோயில் மாடு களத்தில் இறக்கிவிடப்பட்டது. இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 300க்கும் மேற்கட்ட காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளன.
- இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில், இப்போட்டி நடைபெற்று வருகிறது. இவரது பூர்வீகம், தமிழகத்தின் சிவங்கை மாவட்டம் என்பதால், தமிழகத்தின் கலாசார பெருமையாக விளங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை இலங்கையிலும் கொண்டு வருவதற்காக அவர் பெரும் முயற்சிகளை எடுத்துள்ளார்.
அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயா்:
- உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு ‘மகரிஷி வால்மீகி சா்வதேச விமான நிலையம்’ எனப் பெயா் சூட்டும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை 05/01/24 ஒப்புதல் அளித்தது.
- இந்த விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி திறந்துவைத்த நிலையில், அதற்கு மகரிஷி வால்மீகியின் பெயரைச் சூட்டுவதற்கு மட்டுமின்றி, சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
‘உலக முதலீட்டாளர் மாநாடு’ :
- உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான ‘வின்ஃபாஸ்ட்’ (VinFast) தமிழகத்தில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் இவி கார் (EV Car) மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற உள்ளது.
ஜனவரி 6 - உலக போர் அனாதைகள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6 ஆம் தேதி, போர் அனாதைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகரமான நிலைமைகளை நிவர்த்தி செய்யவும் உலக போர் அனாதைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
யுனிசெஃப் கருத்துப்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்று அல்லது இருவரின் பெற்றோரையும் இழந்தால், அது அனாதையாகக் கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “Orphan Lives Matter”
ஜனவரி 6 - சர்வதேச வேட்டி தினம்
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அங்கீகரிக்கும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் ஜனவரி 6 ம் தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது. நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: