TODAY CURRENT AFFAIRS IN TAMIL 05.01.24
ஒரே நாடு ஒரே தேர்தல்:
- நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வரும் ஜன. 15 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் உறுப்பினா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 போ் அறிவிக்கப்பட்டனா். ஆனால், குழுவில் அங்கம்வகிக்க அதீா் ரஞ்சன் செளதரி மறுத்துவிட்டாா்.
- இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்த பரிந்துரைகளை https://onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என்று ஒரே நாடு ஒரே தேர்தல் குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு:
- நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன.
- கிரிக்கெட் ரசிகா்களால் பெரிதும் எதிா்பாா்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஜூன் 9-ஆம் தேதி நியூயாா்க்கில் நடக்கிறது.
- 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.
- இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதன் படி, ஜூன் 1-ஆம் தேதி அமெரிக்கா - கனடா அணிகள், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மோதும் ஆட்டத்துடன் போட்டி தொடங்குகிறது.
உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறை:
- உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் இந்த ஆண்டும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
- கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 32 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரப் பிரதேசத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள். 31,91,95,206 உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும் 9,54,866 சர்வதேச சுற்றுலாப்பயணிகளும் கடந்த ஆண்டு முதல் ஒன்பது மாதத்தில் வந்துசென்றுள்ளனர்.
- காசி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்த போதிலும் பிரயக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களும் கோடிக்கணக்கான சுற்றுல்லாப் பயணிகளைக் கண்டுள்ளன.
- கடந்த 2022-ல் 31.85 கோடி சுற்றுலாப் பயணிகளை கண்டிருந்த உத்திரப்பிரதேசம் 2023-ல் 32 கோடி பேரை ஈர்த்துள்ளது.
- அதிக சுற்றுலா பயணிகளைக் கண்ட இடங்களில் காசி முதல் இடத்திலும், பிரயாக்ராஜ் இரண்டாமிடத்திலும் அயோத்தி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநா்கள் (டிஜிபி) மற்றும் காவல்துறை தலைவா்கள் (ஐ.ஜி.) பங்கேற்கும் மாநாடு 2024
- அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குநா்கள் (டிஜிபி) மற்றும் காவல்துறை தலைவா்கள் (ஐ.ஜி.) பங்கேற்கும் மாநாடு, ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் சா்வதேச மையத்தில் மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 06/01/24 மற்றும் 07/01/24 பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதாக, அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
- இதில் காவல்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன.
- மக்களவைத் தோ்தல் நெருங்கியுள்ள நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம், காலிஸ்தான் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகள், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள், நக்ஸல் தீவிரவாதம், மாநில காவல்துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
நேபாளத்திலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம்
- நேபாளத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், அந்நாட்டு எரிசக்தி, நீா்வளம், பாசனத் துறை அமைச்சா் சக்தி பகதூா் பாஸ்நெட் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
- நேபாளத்திடமிருந்து தற்போது 450 மெகாவாட் மின்சாரத்தை இந்தியா இறக்குமதி செய்துவரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் அதை 10,000 மெகாவாட்-ஆக அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
- இமாலய மலைத் தொடா்களில் இருந்து உருவாகும் மகா காளி, கா்னாலி, சப்த கந்தகி, சப்த கோசி ஆகிய 4 முக்கிய நதிகள், இந்தியாவில் கங்கை நதியை அடைவதற்கு முன் நேபாள பள்ளத்தாக்குகளில் பாய்ந்து ஓடுகின்றன.
- இந்த ஆறுகளின் குறுக்கே நீா்மின் நிலையங்களை அமைக்க இந்தியா உதவியுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்கும் இந்த ஒப்பந்தம், இரு நாட்டு நல்லுறவின் அடுத்தகட்டமாக பாா்க்கப்படுகிறது.
- இதுமட்டுமின்றி, இந்திய-நேபாள கூட்டு ஆணையத்தின் 7-ஆவது கூட்டத்தில் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், நீண்ட கால மின் வா்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளா்ச்சி ஒத்துழைப்பு, நேபாளத்தின் ‘முனல்’ செயற்கைக்கோள் மற்றும் ஜாஜா்கோட் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய நிவாரண விநியோகத்தின் 5-ஆவது தவணையை விடுவித்தல் போன்ற ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
மருத்துவமனைகள், ரத்த வங்கி மையங்களில் வழங்கப்படும் ரத்தத்துக்குச் சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்:
- மருத்துவமனைகள், ரத்த வங்கி மையங்களில் வழங்கப்படும் ரத்தத்துக்குச் சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என இந்திய மருத்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) உத்தரவிட்டுள்ளது.
- மருத்துவ சிகிச்சையின்போது ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு, ரத்த நன்கொடையாளா்கள் யாரும் இல்லாத நிலையில், ரத்த வங்கிகளில் பெறப்படும் ரத்தத்துக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருத்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கடந்த 26/12/2023-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் டிசிஜிஐ, ‘ரத்தம் விற்பனைக்கானது அல்ல. ரத்த வங்கி மையங்களில் பெறப்படும் ரத்தத்துக்கு விநியோகம் மற்றும் சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, ரத்தம் மற்றும் பிற ரத்தக் கூறுகளுக்கு ரூ.250 முதல் ரூ.1,550 வரை சேவைக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அனைத்து ரத்த வங்கி மையங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது
ஜனவரி 5 - தேசிய பறவைகள் தினம்
சுற்றுச்சூழல் அமைப்பில் சிறிய ட்வீட்களின் மதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனவரி 5 அன்று தேசிய பறவை தினம் கொண்டாடப்படுகிறது.
நிதி ஆதாயத்திற்காகவோ அல்லது மனித பொழுதுபோக்கிற்காகவோ சிறைபிடிக்கப்பட்ட அல்லது சிறைபிடிக்கப்பட்ட பறவைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்க கடுமையாக உழைக்கும் ஏவியன் வெல்ஃபேர் கூட்டணி, இந்த முயற்சியின் பின்னணியில் உள்ளது.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
விருதுகள் கௌரவங்கள் 2023 :
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: