TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.01.24 :
தென்னை நார் கொள்கை 2024:
தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024”-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வரலாற்றில் மிக குறைந்த ஓவர் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி
- இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
- முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
- 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.
- இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
- இந்நிலையில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடாக இந்திய அணி திகழ்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதி:
- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் சோ்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, டெல்டா மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டமும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இதன்மூலம், அந்த மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த தொழில் திட்டங்களை மட்டுமே செயல்படுத்த முடியும்.
- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, திருவரன்குளம் ஆகிய ஊா்களுக்குப் பிறகு, மயிலாடுதுறை மாவட்டமும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினராக ஜனவரி 1, 2024 முதல் 4 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வுசெய்யப்பட்டுள்ளது:
இந்திய புள்ளியியல் முறைக்கு சரியான அங்கீகாரமாக, ஐநா புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினராக ஜனவரி 1, 2024 முதல் 4 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஐநா புள்ளியியல் ஆணையத்தின் மூலம், அலுவலக ரீதியான புள்ளியியல் விவரங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் வழிமுறைகளை வரையறுப்பதில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
- UN புள்ளியியல் ஆணையம் 1947 இல் நிறுவப்பட்டது மற்றும் உலகளாவிய புள்ளியியல் அமைப்பின் மிக உயர்ந்த அமைப்பாகும்.
- இது உலகெங்கிலும் உள்ள உறுப்பு நாடுகளின் தலைமை புள்ளியியல் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
- இது சர்வதேச புள்ளியியல் நடவடிக்கைகளுக்கான மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும், புள்ளிவிவர தரநிலைகளை அமைப்பதற்கும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் செயல்படுத்துவது உட்பட கருத்துக்கள் மற்றும் முறைகளின் வளர்ச்சிக்கும் பொறுப்பாகும்.
- புள்ளியியல் ஆணையம் ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் பிரிவின் (UNSD) பணியை மேற்பார்வை செய்கிறது, மேலும் இது UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் செயல்பாட்டு ஆணையமாகும்.
- ஆணைக்குழுவானது ஐக்கிய நாடுகள் சபையின் 24 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது, இது சமமான புவியியல் விநியோகத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- உறுப்பினர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள்.
ஜனவரி 4 - உலக பிரெய்லி தினம்
பிரெய்லியைக் கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஜனவரி 4ஆம் தேதி உலக பிரெய்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு ஒரு பிரகடனத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய இலூயிசு பிரெய்லின் பிறந்த நாளையும் இது குறிக்கிறது.முதல் உலக பிரெய்லி தினம் 2019 ஆம் ஆண்டு சனவர் மாதம் 4 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது
பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் மனித உரிமைகளுக்கான அணுகலை எல்லோரையும் போலவே பெற வேண்டும் என்பதையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: