டெரகோட்டா கோயில்
ஜார்க்கண்ட் கும்லா மாவட்டத்தில் உள்ள டெரகோட்டா கோயிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்தார். தற்போது 3,697 பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கீழ் உள்ளன.கும்லா மாவட்டத்தில் உள்ள தோய்சா நகரில் உள்ள சுடுமண்(டெரகோட்டா) கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது என்றாலும், ஷாப்பூர் கோட்டை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியலில் வரவில்லை என்றார்.
நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
பாரத் பகிர்மான கல்வெட்டு களஞ்சியத் திட்டத்தை மத்திய அரசு 2023-ல் அறிவித்தது. இந்த திட்டத்தின்கீழ் டிஜிட்டல் முறையில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் மாற்றப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்திய தொல்லியல்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் கல்வெட்டுகளின் எழுத்து, உரை மற்றும் மொழி ஆகியவை பல்வகை ஊடகங்கள் மூலமாக காட்சிப்படுத்தப்படும்.
“நாட்டின் முதல் கல்வெட்டியல் அருங்காட்சியகம் ஹைதராபாத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது”.
66-வது விருதுகள் வழங்கும் விழா:
இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இதன், 66-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.
சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைனின் 'சக்தி பேண்ட்' இசை விருதுகளில் உயரிய விருதுக்கான கிராமி விருதை வென்றது. குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் கிராமி விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணப்படம்:
இந்திய திருநாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் சிங்கப்பூரில் இருந்துகொண்டு ஆங்கிலேயரை எதிர்க்கும் வல்லமை வாய்ந்த இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தியவர்.
இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த ’தாகூர் சங்கம்’, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. அதில், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக, நேதாஜி முன்னெடுத்த பிரசாரத்தில், சிங்கப்பூரின் பங்கு என்ன என்பதை விவரமாக விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பான யானைக்கான (ஆக்டிவ் எலிபன்ட்) விருது :
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் யானை மங்களத்துக்கு சுறுசுறுப்பான யானைக்கான விருது வழங்கப்பட்டது.
தில்லி தன்னார்வ தொண்டு நிறுவன லோத் சந்திரா அவுர் ஜனதா சார்பில் தமிழகத்தில் 38 யானைகள் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம் சிறந்த பராமரிப்புக்காக முதல் பரிசு பெற்றது.
கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு யானை மங்களத்தை காஞ்சி மகா பெரியவா் 1982 ஆம் ஆண்டு வழங்கினாா். தற்போது 56 வயதாகும் இந்த யானை மங்களத்துக்கு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடன் இருப்பதற்காகவும் இயற்கை மூலிகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
5 வகைப் பொருள்களுக்கு சா்வதேச அமைப்பான, ‘கோடெக்ஸ்’ குழு தர நிா்ணயம்:
சமையல் வகைகளுக்குத் தேவையான மசாலாப் பொருள்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட 5 வகைப் பொருள்களுக்கு சா்வதேச அமைப்பான, ‘கோடெக்ஸ்’ குழு தர நிா்ணயம் செய்துள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஏலக்காய்,
- மஞ்சள்,
- ஆராா் என்கிற ஜூனிபா் பொ்ரி,
- ஜமைக்கா மிளகு (ஆல்ஸ்பைஸ்),
- அன்னாசிப் பூ என்கிற நட்சத்திர சோம்பு
‘கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷன் (சிஏசி)’:
உணவுப் பொருள்களுக்கான வா்த்தகத்தில் நுகா்வோரின் ஆரோக்கிய பாதுகாப்பிற்கு உரிய தரங்களுக்கான நடைமுறைகளை உறுதி செய்ய பல்வேறு நாடுகளைச் சோ்ந்த உணவு மற்றும் வேளாண்மை அமைப்புகள் (எஃப்ஏஓ) உலக சுகாதார மையம் (டபிள்யு.ஹெச்.ஓ.) ஆகியவை இணைந்து உருவாக்கிய அமைப்புதான் ‘கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் கமிஷன் (சிஏசி)’. இதில் 194 நாடுகள் இடம் பெற்றுள்ளன.இதில் இந்தியாவும் 1964-இல் உறுப்பினராக இணைந்தது.
ரோம் நகரில் அமைந்துள்ள இந்த சிஏசி ஆணையம், உணவுப் பொருள்களில் சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த வகையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பெருமளவில் கிடைக்கும் ஏற்றுமதிப் பொருள்களான மசாலா மற்றும் மூலிகைப் பொருள்கள் மீதான தர நிா்ணயங்களுக்கு கோடெக்ஸில் சிசிஎஸ்சிஹெச் என்கிற தனிக் குழு ஒன்று கடந்த 2013-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
அமேசானில்-செய்யறிவு தொழில்நுட்பம்
அமேசானில் நாம் பொருள்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஃபஸ் (Rufus) என்ற பெயர் கொண்ட இந்த செய்யறிவு தொழில்நுட்பம், நம்மிடம் எழுத்து வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளக் கூடியது. அமேசானில் உள்ள பொருள்களின் தரவு மற்றும் பொதுவான வலைதளத் தரவுகளைக் கொண்டு பயிற்சி பெற்றிருக்கும் இந்த ரஃபஸ் உலகிற்கு அறிமுகமாகியுள்ளது.
காமன்வெல்த் அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் மாநாடு 2024:
பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார்.
"நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நீதித்துறை மாற்றம் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள் போன்ற சட்டம் மற்றும் நீதி, நிர்வாக பொறுப்பு; மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக பணியாளர்:கைது
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபரை, பயங்கரவாத தடுப்புப் படை(ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஷாமஹிதின்பூர் பகுதியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளரான சதேந்திர சிவால் என்ற நபர், மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பிடம் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்ந்த முக்கியமான உயர்மட்ட தகவல்களை அந்த நபர் பகிர்ந்துள்ளதாகவும், இந்திய ராணுவ தளவாடங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் ஐஎஸ்ஐ அமைப்பிடம் வழங்கியதாக உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ஆபரேஷன் ஸ்மைல்-எக்ஸ்:
காணாமல் போன மற்றும் கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து மீட்க தெலுங்கானா காவல்துறையால் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
ஜனவரி 2024 இல், ஆபரேஷன் ஸ்மைல்-எக்ஸ் தெலுங்கானா முழுவதும் மொத்தம் 3,479 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டது.
பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது மற்றும் WHO ஆல் புற்றுநோயைப் பற்றியும் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்றும் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இதன் கருப்பொருளாக Together, we challenge those in power அமைந்துள்ளது.
பிப்ரவரி 4 - இலங்கையின் தேசிய தினம்
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் தேசிய தினம் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்றது.
பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 12 வரை - சர்வதேச வளர்ச்சி வாரம்
சர்வதேச வளர்ச்சி வாரம் (IDW) பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை கொண்டாடப்படுகிறது மற்றும் இந்த ஆண்டு கனடாவில் சர்வதேச வளர்ச்சி வாரத்தின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. சர்வதேச வளர்ச்சித் துறையில் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் வாழ்க்கைப் பாதைகள் பற்றி இந்த நாள் தெரிவிக்கிறது.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி:2024
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024