கலைச்செம்மல் விருதுகள்:மூன்று ஆண்டுகளுக்கான கலைச்செம்மல் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது2021-2022 முதல் 2023-2024 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான 18 கலைஞர்களை தேர்வு செய்தனர். . ஓவியர் ராமு (எ) எஸ்.எஸ்.ராமதாஸ் உள்பட 18 கலைஞர்கள் விருதுகளைப் பெறவுள்ளனா்.
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர்:இந்திய-இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவதாக ஸ்டோக்ஸ் அறிவித்தார்.இப்படி ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிதான ஒரு சாதனையையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர் (41 வருடம் 187 நாள்கள்) என்ற உலக சாதனையை படைத்துள்ளார் ஆண்டர்சன். இதற்கு முன்பாக இந்தியாவை சேர்ந்த லால அமர்நாத் (41 வருடங்கள் 92 நாள்கள்) இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2 - உலக சதுப்பு நில தினம்/ உலக ஈர நில தினம் (World Wetlands Day)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதி, உலக சதுப்பு நில தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. ஈரானின் ராம்சார் நகரில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி ஈரநிலங்கள் தொடர்பான மாநாட்டை ஏற்றுக்கொண்ட தேதியை இந்த நாள் குறிக்கிறது. இது முதன்முதலில் 1997 இல் கொண்டாடப்பட்டது. உலக ஈரநிலங்கள் தினம் 2024 தீம் ' Wetlands and Human Wellbeing
பிப்ரவரி 2 - முடக்கு வாதம் விழிப்புணர்வு தினம் (Rheumatoid Arthritis Awareness Day
RA விழிப்புணர்வு தினம் என்பது முடக்கு வாதம் விழிப்புணர்வு தினம் மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 2 - சூரஜ்குண்ட் கைவினை மேளா
சூரஜ்குண்ட் கிராஃப்ட்ஸ் மேளா, ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத் மாவட்டம் சூரஜ்குண்டில் 2024 பிப்ரவரி 2 முதல் 18 பிப்ரவரி வரை கொண்டாடப்படுகிறது. இது இந்திய நாட்டுப்புற மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும். இந்த மேளாவில், இந்தியாவின் கைவினைப் பொருட்கள், கைத்தறிகள் மற்றும் கலாச்சாரத் துணிகளின் செழுமையும் பன்முகத்தன்மையும் காணப்படுகின்றன. இது மிகவும் பிரபலமான கண்காட்சிகளில் ஒன்றாகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஹரியானாவின் சூரஜ்குண்ட், டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியானா சுற்றுலாத் துறையால் கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL -FEBRUARY 2024
2021-2022 முதல் 2023-2024 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான ------- கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுகளைப் பெறவுள்ளனா் ?A) 16B) 17C) 18D) 19CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- ஜனவரி 2024 நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024