Kalaichemmal Awards - கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு

TNPSC PAYILAGAM
By -
0

கலைச்செம்மல் விருது
கலைச்செம்மல் விருது


மூன்று ஆண்டுகளுக்கான கலைச்செம்மல் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது. இந்த விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வாளர் கூட்டம் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி தலைமையில் நடைபெற்றது.

கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு

  • 2021-2022 முதல் 2023-2024 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான 18 கலைஞர்களை தேர்வு செய்தனர். . ஓவியர் ராமு (எ) எஸ்.எஸ்.ராமதாஸ் உள்பட 18 கலைஞர்கள் விருதுகளைப் பெறவுள்ளனா்.
  • மரபுவழி ஓவியம் பிரிவில் ஓவியர் ராமு (எ) எஸ்.எஸ்.ராமதாஸ், மணியம் செல்வன், ஏ.ராஜமோகன், வாசுகி லஷ்மி நாராயணன், சோ.வேல்முருகன் (கோவில்பட்டி, தூத்துக்குடி) மரபுவழி சிற்பம் பிரிவில் இரா.செல்வநாதன் ஸ்தபதி, முனைவர் கி.ராஜேந்திரன், உலோக சிற்பக்கலைஞர் இரா.ரவீந்திரன், மர சிற்பக்கலைஞர் க.பால்ராஜ் (சிவகங்கை) நவீன ஓவியம் பிரிவில் அ.விஸ்வம், கோ.சுப்பிரமணியம், எஸ்.வி.பிரபுராம், எஸ்.அருணகிரி, கே.புகழேந்தி, அதிவீரராம பாண்டியன், நவீன சிற்பம் பிரிவில் ந.கருணாமூர்த்தி, டி.விஜயவேலு, ஹேமலதா ஆகிய கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SOURCE : DINAMANI

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!