தமிழ் நடப்பு விவகாரங்கள்- நவம்பர் 2024 :
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்
- 2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020-ம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்:
- தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- KEY NOTES : Tamil Nadu Artificial Intelligence Mission
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்:
- பாகிஸ்தானின் லாகூரில் ஏகியூஐ (Air Quality Index (AQI)) 1,900 ஆக உயர்ந்தது. இதுமுன்னெப்போதும் இல்லாத அளவாகும். 1.40 கோடி மக்கள் வசிக்கும் லாகூரில் காற்று தரக்குறியீடானது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்ட வரம்பை விட 6 மடங்கு அதிகமாக இருந்தது. இதன்மூலம் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் உள்ளது.
- காற்றின் தரக்குறியீடு ( Air Quality Index (AQI)) 0 முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. 51- 100 திருப்தி, 101- 200 பரவாயில்லை, 201-300 மோசம், 301-400 மிக மோசம், 401-450 தீவிரம், 450-க்கு மேல் மிக தீவிரம் எனவும் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது.
இந்திய விண்வெளி கருத்தரங்கம் 3.0
- இந்திய விண்வெளி கருத்தரங்கம் 3.0 புதுடெல்லியில் 05.11.2024 நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
- சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 (ESA PROBA-3 Mission) விண்கலத்தை, பிஎஸ்எல்வி -எக்ஸ்எல் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
- KEY NOTES : ESA PROBA-3 Mission
டிஜிட்டல் இந்தியா பொது சேவை மைய (DICSC) திட்டம்
- ரூ.3,160.88 லட்சம் பட்ஜெட்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- KEY NOTES : Digital India Common Service Center (DICSC)
"வின்பாக்ஸ் 2024" :
- வியட்நாம்-இந்தியா இருதரப்பு ராணுவப் பயிற்சியின் 5 வது பதிப்பான "வின்பாக்ஸ் 2024" அம்பாலாவில் தொடங்கியது.
- KEY NOTES : VINBAX 2024
உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோள்:
- உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோளான லிக்னோசாட்டை ஜப்பான் விண்ணில் செலுத்தியது .
- KEY NOTES : World's First Wooden Satellite
FOLLOWS ON:
Instagram : / tnpscpayilagam
Personal Twitter: / @TNPSCPayilagam) / X (twitter.com)
Facebook Page : / TNPSCPAYILAGAM
Email: tnpscpayilagam@gmail.com
Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
LinkedIN: TNPSC PAYILAGAM | LinkedIn
Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
No comments:
Post a Comment