இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024 -2025:
- 2024-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். ஆனாலும், 2025-ம் நிதியாண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வளர்ச்சி 6.6 சதவீதம் என்ற அளவில் மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
- கடந்த நிதியாண்டு 2023 -இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது:
- குழந்தையை தத்தெடுப்பதற்கு பெற்றோரின் மதத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி இது அமலுக்கு வருகிறது.
- இந்த விதிகளை மாநில அரசுகள் முன்பு முறையாக ஏற்றுக்கொண்டு அது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- அதன்படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் பதிவு செய்துவந்த நிலையில், தற்போது பிறப்பு பதிவுக்கான படிவம் 1 இல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதில் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதற்கு நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் குழந்தைக்கு வழங்கப்படும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023 கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர்:
- இந்திய உணவுக்கழகத்தின் மண்டல பொது மேலாளரும், முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையுமான கேரளாவை சேர்ந்த ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த நியமனம் 2024 முதல் 2028 வரை நான்கு ஆண்டு காலத்திற்கு உரியதாகும்
‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதி:
- தவறான தகவலைப் பரப்பும் பதிவுகளில் அதன் உண்மைத் தன்மை குறித்து பயனா்களுக்குத் தெரியப்படுத்த சரியான தகவல்களை உள்ளிடும் ‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதியை பிரபல சமூக ஊடகமான ‘எக்ஸ்’ வலைதளம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தியாவில் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் சூழலில், தோ்தல் பிரசாரங்களுக்கு சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ‘கம்யூனிட்டி நோட்ஸ்’ வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘டிஜி யாத்ரா’ திட்டம்:
- கோவை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது
- விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் பொருட்டு ‘டிஜி யாத்ரா’ திட்டம் கடந்த 2022 ஆண்டு தொடங்கப்பட்டது.
- டிஜி யாத்திரை திட்டத்தின் கீழ், விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், அடையாள அட்டை மற்றும் விமான நிலைய நுழைவுச் சீட்டு (போர்டிங் பாஸ்) ஆகிய காகித ஆவணங்களைக் கொண்டுவரத் தேவையில்லை. மாறாக, விமான நிலையத்துக்குள் நுழையும்போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் அங்குள்ள பயணிகளை அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தைக் காட்டினால் போதும். ஆனால் டிஜி யாத்திரை செயலியில் தங்கள் படம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.
முதலாவது ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப் போட்டி 2024:
- நேபாளம் அட்யா பாட்யா கூட்டமைப்பு சார்பில் முதலாவது ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 28 முதல் 31-ம் தேதி வரை காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன.
- இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி பூடான் அணியை வீழ்த்தியும்.
- மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
2025-ம் நிதியாண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு வளர்ச்சி -------- சதவீதம் என்ற அளவில் மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது ?
A) 5.6 சதவீதம்
B) 8.6 சதவீதம்
C) 7.6 சதவீதம்
D) 6.6 சதவீதம்
ANS : D) 6.6 சதவீதம்