பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023

TNPSC  Payilagam
By -
0


பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023 


  1. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023 கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.
  2. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவை, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், லோக்சபாவில் தாக்கல் செய்தார். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, கடந்த 54 ஆண்டுகளாக ஒருமுறை கூட திருத்தப்படவில்லை.
  3. சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாறி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு இந்த திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  4. இந்த மசோதாவின்படி, பள்ளி, கல்லுாரிகளில் சேருவது, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் வாங்குவது, அரசு வேலைகளில் சேருவது போன்றவற்றுக்கு பிறந்த ஊர் மற்றும் தேதிக்கான ஒரே ஆவணமாக, பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.
  5. இந்த திருத்தத்தின் படி, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், இந்த பிறப்பு, இறப்பு தரவுகளை, சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
  6. மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுக்கு அரசு பயன்படுத்த முடியும். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையை இந்த மசோதா எளிதாக்குகிறது.
  7. மேலும், அனைத்து மருத்துவமனைகளும் இறப்பு குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை இந்த சட்ட திருத்தம் கட்டாயமாக்குகிறது. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.


பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது:

  • குழந்தையை தத்தெடுப்பதற்கு பெற்றோரின் மதத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி இது அமலுக்கு வருகிறது.
  • இந்த விதிகளை மாநில அரசுகள் முன்பு முறையாக ஏற்றுக்கொண்டு அது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
  • அதன்படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் பதிவு செய்துவந்த நிலையில், தற்போது பிறப்பு பதிவுக்கான படிவம் 1 இல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதில் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதற்கு நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் குழந்தைக்கு வழங்கப்படும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!