IN-SPACe CANSAT India Student Competition 2024
- இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இந்திய விண்வெளி சங்கத்துடன் (ASI) இணைந்து இன்-ஸ்பேஸ் கேன்சாட் மாணவர் போட்டியை அகமதாபாத்தில் நடைபெற்றது.
- 28 அணிகள் பங்குபெற்ற இந்த போட்டியில் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் விஹங்கா(Vihanga) அணி போட்டியில் வெற்றி பெற்றது.
- IN-SPACe = Indian National Space Promotion and Authorisation Centre
- ASI = Astronautical Society of India
மாதவ்பூர் மேளா :
- மாதவ்பூர் மேளா or மாதவ்பூர் கெட் கண்காட்சி என்பது ஒவ்வொரு வருடமும் ராம நவமியன்று குஜராத்தில் தொடங்கும் ஒரு கலாச்சார விழாவாகும்.
- போர்பந்தரின் மாதவ்பூர் கிராமத்தில் 5 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியை குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத் தொடங்கி வைத்தார்.
- TNPSC KEY POINTS : மாதவ்பூர் மேளா
எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை
- பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024:
- சென்னையை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத் கமல் பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் இந்திய ஒலிம்பிக் குழுவின் கொடி ஏந்திச் செல்பவராக இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் தங்க தன்னார்வ சேவை விருது 2024:
- ஜெயின் ஆச்சார்யா லோகேஷ் முனி, அமெரிக்க ஜனாதிபதியின் தங்க தன்னார்வ சேவை விருதைப் (American President’s Volunteer Award 2024) பெற்ற முதல் இந்திய துறவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
- ஆச்சார்யா லோகேஷ் முனி ஹரியானாவின் குருகிராமில் அஹிம்சா விஸ்வ பாரதியை நிறுவினார்.மகாவீரரின் போதனைகள் மற்றும் இந்திய கலாச்சார விதிமுறைகளுக்கு ஏற்ப அகிம்சை, அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு உலகளாவிய தூண்களில் அஹிம்சா விஸ்வ பாரதி கவனம் செலுத்து
- அமெரிக்க ஜனாதிபதியின் தன்னார்வ சேவை விருது 2003 இல் ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது நிறுவப்பட்டது. அமெரிக்காவில் குறைந்தபட்சம் 500 மணிநேர தன்னார்வ சேவையை வழங்கிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது
சர்வதேச இலக்கிய விருது 2024:
- பெங்களூருவைச் சேர்ந்த கன்னடக் கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் ஆர்வலர் மம்தா ஜி. சாகர், இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சமீபத்தில் உலக எழுத்தாளர்களின் அமைப்பு (WOW) வழங்கும் உலக இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
“மாதவ்பூர் மேளா மாதவ்பூர் கெட் கண்காட்சி” பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்பானது?
A) குஜராத்
B) அருணாசல பிரதேசம்
C) நாகாலாந்து
D) அஸ்ஸாம்
ANS :A) குஜராத்
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024