மாதவ்பூர் மேளா :
- மாதவ்பூர் மேளா or மாதவ்பூர் கெட் கண்காட்சி என்பது ஒவ்வொரு வருடமும் ராம நவமியன்று குஜராத்தில் தொடங்கும் ஒரு கலாச்சார விழாவாகும்.
- போர்பந்தரின் மாதவ்பூர் கிராமத்தில் 5 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியை குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத் தொடங்கி வைத்தார்.
- ஏழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மக்கள் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து குஜராத்திற்கு வருகை புரியும் பகவான் கிருஷ்ணர் மற்றும் ருக்மிணியின் சிறப்புகள் குறித்து கொண்டாடுகின்றனர்.
- இந்த விழாவில் எட்டு வடகிழக்கு மாநில மக்கள் பங்கேற்கின்றனர்.
- இந்தத் திருவிழாவானது அருணாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற மன்னர் பீஷ்மக்கின் வம்சாவளியான மிஷ்மி பழங்குடியினருடனான தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றது.
- இது குஜராத் மாநிலத்தின் கலாச்சார ஒருங்கிணைப்பை "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரங்களுடன் இணைக்கின்றது