விஸ்டன் விருது 2024 :
- விஸ்டனின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.2024 ஆம் ஆண்டில் விஸ்டனின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாக கௌரவிக்கப்படும் முதல் ஆங்கிலேயப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்
- விஸ்டனின் சிறந்த உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- APRIL AWARDS HONOURS 2024 IN TAMIL / விருதுகள் ( தமிழில்) ஏப்ரல் 2024
கந்துகுரி வீரேசலிங்கம் :
- கந்துகுரி வீரேசலிங்கம், ஏப்ரல் 16, 1848 இல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார், பிரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து ஒரு முக்கிய எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
- வீரேசலிங்கம் தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். தெலுங்கு மொழியில் முதல் நாவலை எழுதினார். சுயசரிதை மற்றும் கட்டுரையை தெலுங்கு இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும். நவீன அறிவியல் பற்றிய முதல் தெலுங்கு புத்தகத்தையும் எழுதியவர்
- 1881 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் முதல் விதவை மறுமணத்தையும் அவர் செய்தார்.
- 1887ல் ராஜமுந்திரியில் பிரம்மோ மந்திர் ஒன்றைத் தொடங்கினார்.
- 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வில் கலந்து கொண்ட சிலரில் வீரேசலிங்கமும் ஒருவர் .
- 1893ல் இந்திய அரசு அவருக்கு 'ராவ் பகதூர்' என்ற பட்டத்தை வழங்கியது.
- 1919 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி தனது 71 ஆவது வயதில் காலமானார் .
- வீரேசலிங்கம் - முக்கியமான படைப்புகள் : ராஜசேகர சரித்ரா (முதல் தெலுங்கு நாவல்) ,பிரம்ம விவாஹம் (நாடகம்) , கோபால சதகமு ,அபக்யோபாக்யானமு (சமூகம் பற்றிய நையாண்டி)
2024 மார்ச் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு (அடிப்படை ஆண்டு:2011-12):
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 மார்ச் மாதத்தின் (மார்ச், 2023 ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் 0.53% ஆக உள்ளது (தற்காலிகமானது). 2024 மார்ச் மாதத்தில் நேர்மறையான பணவீக்க விகிதம், முதன்மையாக உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகும்.
- மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 2024 மார்ச் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.40% ஆக இருந்தது.
- 2024 ஜனவரி மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 ஜனவரி மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்து பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.2% மற்றும் 0.33% ஆக இருந்தது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் 2023 -2024:
- 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 70.21 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச் மாதத்தை விட (-) 3.01 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.
- 2024 மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 73.12 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச் மாதத்தை விட (-) 6.11 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 776.68 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 0.04 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) ஒட்டுமொத்த இறக்குமதி 854.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது நிதியாண்டு 2022-23 (ஏப்ரல்-மார்ச்) ஐ விட (-) 4.81 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 437.06 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 451.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) வணிகப் பொருட்கள் இறக்குமதி 677.24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 715.97 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) வணிக வர்த்தகப் பற்றாக்குறை 240.17 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 264.90 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2024 மார்ச் மாதத்தில் பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 33.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2023 மார்ச் மாதத்தில் 30.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2024 மார்ச் மாதத்தில் 35.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2023 மார்ச் மாதத்தில் 36.51 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 320.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 315.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- பெட்ரோலியம் அல்லாத, நவரத்தினங்கள் அல்லாத நகைகள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 422.80 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 435.54 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
சேவைகள் மற்றும் வர்த்தகம் 2023-2024:
- 2023 மார்ச் மாதத்தில் 30.44 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது, 2024 மார்ச் மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
- 2023 மார்ச் மாதத்தில் 16.96 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2024 மார்ச் மாதத்துக்கான சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 15.84 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 325.33 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 339.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 182.05 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவைகள் இறக்குமதியின் மதிப்பு 177.56 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
- 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) சேவை வர்த்தக உபரி 162.05 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 143.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
செல்போன் டவருக்கு பதிலாக செயற்கைகோள் மூலம் செல்போன்களை இயக்கும் சோதனை வெற்றி- சீனா சாதனை:
- செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.
- இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.
- தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
7.37% அரசுப் பங்குப் பத்திரங்கள் 2028:
- பலவகை விலை முறையைப் பயன்படுத்தி, விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ.12,000 கோடிக்கு “7.37% அரசுப் பங்குப் பத்திரங்கள் 2028" ஐயும், ரூ.12,000 கோடிக்கு "புதிய அரசுப் பங்குப் பத்திரங்கள் 2064" ஐயும், விற்பனை செய்வதற்கான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
- மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிணையத்திற்கும் எதிராக ரூ.2,000 கோடி வரை கூடுதல் சந்தாவை மத்திய அரசு வைத்துக்கொள்ளலாம். இந்த ஏலம் மும்பயைில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தால் ஏப்ரல் 19, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்தப்படும்.
- பத்திரங்களின் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட தொகையில் 5% வரை அரசுப் பத்திரங்களின் ஏலத்தில் போட்டித்தன்மையற்ற ஏல வசதிக்கான திட்டத்தின்படி தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.
- போட்டி மற்றும் போட்டி அல்லாத ஏலங்கள் இரண்டும் ஏப்ரல் 19, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சொல்யூஷன் (இ-குபெர்) அமைப்பில் மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டி அல்லாத ஏலங்களை காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். போட்டி ஏலங்களை காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஏலத்தின் முடிவு ஏப்ரல் 19, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள் பணம் செலுத்துவது ஏப்ரல் 22, 2024 திங்கட்கிழமையாக இருக்கும்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
2024 மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) ------------- பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது?
A) 70.21 பில்லியன் அமெரிக்க டாலராக
B)72.21 பில்லியன் அமெரிக்க டாலராக
C) 75.21 பில்லியன் அமெரிக்க டாலராக
D) 80.21 பில்லியன் அமெரிக்க டாலராக
ANS : A) 70.21 பில்லியன் அமெரிக்க டாலராக
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024