Introduction
- National Affairs
- State Affairs
- Global News
- International Relations
- Economic Trends
- Political News
- Environmental Issues
- Science and Technology
- Economy & Banking
- Health and Science
- Social Issues
- Sports News
- Entertainment News
- Monthly News Digest
- Daily News Update
- World Events
- National News
- Awards and Honors
APRIL AWARDS HONOURS 2024 IN TAMIL / விருதுகள் ( தமிழில்) ஏப்ரல் 2024:
விஸ்டன் விருது 2024 :
- விஸ்டனின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.2024 ஆம் ஆண்டில் விஸ்டனின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாக கௌரவிக்கப்படும் முதல் ஆங்கிலேயப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்
- விஸ்டனின் சிறந்த உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சாகர் சம்மான் வருணா விருது: ஸ்ரீ. திரேந்திர குமார் சன்யால்
- சிறந்த பங்களிப்பிற்கான சாகர் சம்மான் விருது: கேப்டன் கமல் காந்த் செளத்ரி
- துணிச்சல் மிகு பங்களிப்பிற்கான சாகர் சம்மான் விருது: கேப்டன் சுபிர்சாஹா, கேப்டன் O.M. தத்தா.
- இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம், டைடல் பார்க், திருவான்மியூர், சென்னை முதல் இடத்தைப் பிடித்தது.
- இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம், கீழ்ப்பாக்கம், சென்னை 2வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- FOSMA கடல்சார் கல்வி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கொல்கத்தா ஆனது 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய கடல்சார் நாள் : இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல், ஏப்ரல் 5ம் நாளானது தேசிய கடல்சார் நாளாகக் கொண்டாடப்படுகிறது
கோல்டன் பாம் / தங்கப்பனை ’ (Palme d’Or) விருது
- கேன்ஸ் திரைப்பட விழாவின் உச்ச அங்கீகாரமான ‘கோல்டன் பாம் / தங்கப்பனை ’ (Palme d’Or) விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய இயக்குநா் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ (All we imagine as light ) எனும் திரைப்படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இத்திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப்பகுதியை எதிா்கொள்ளும் 2 செவிலியா்கள், தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனா் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.
புனைவு கதை அல்லாத புத்தகத்திற்கான மகளிர் பரிசு 2024:
- இந்திய-பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் விமர்சகருமான மதுமிதா முர்கியா எழுதிய "Code Dependent: Living in the Shadow of Al" புனைவு கதை அல்லாத புத்தகத்திற்கான மகளிர் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
- இந்தப் புத்தகம் ஆனது மனித சமுதாயத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து ஆராய்கிறது.
SKOCH ESG விருது 2024:
- மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மகாரத்னா பொதுத்துறை நிறுவனமும் (REC Limited), வங்கி சாராத நிதிக்கழக முன்னணி நிறுவனமுமான ஊரக மின்மய கழகம் (a Maharatna Central Public Sector Enterprise under the Ministry of Power and a leading NBFC), 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதிப்' பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ வென்றுள்ளது.
- இந்த விருது நிலையான நிதியுதவிக்கான ஊரக மின்மய கழகத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. ஊரக மின்மய கழகத்தின் செயல் இயக்குநர் திரு டி.எஸ்.சி. போஷ் புது தில்லியில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
- ஸ்கோச் இஎஸ்ஜி விருதுகள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG) நடைமுறைகளில் சிறந்த செயல்திறனை நிரூபிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. இது நீடித்த மற்றும் வளர்ந்து வரும் வணிக எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிலையான முதலீடுகள் மற்றும் செயல்முறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது.
மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2024 :
- முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில், தெ.ஞானசுந்தரம், கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- TNPSC KEY POINTS : மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2024
ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழா விருது 2024 :
- ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹாய் நான்னா படத்திற்கு கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த 30-ஆவது படம் 'ஹாய் நான்னா'. ஹாய் நான்னா படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். மிருணாள் தாகூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
- MARCH AWARDS HONOURS 2024 IN TAMIL / மார்ச் விருதுகள் ( தமிழில்) 2024
- APRIL AWARDS HONOURS 2024 IN TAMIL / விருதுகள் ( தமிழில்) ஏப்ரல் 2024