இந்திய விமானப் படைக்காக ரூ.65,000 கோடிக்கு 97 தேஜஸ் போர் விமானங்கள்:
- இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களை வாங்க ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை வழங்கி உள்ளது.
- இந்திய விமானப் படையில் மிக் 21, மிக் 23, மிக் 27 ரகங்களை சேர்ந்த பழைய போர் விமானங்களுக்குப் பதிலாக புதிய போர் விமானங்களை சேர்க்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவுசெய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸிடம் (எச்ஏஎல்) இருந்து 97 தேஜஸ் எம்.கே.1 ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.
- இந்திய விமானப் படையில் தேஜஸ் மார்க் 1 ரக விமானம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடர்ந்து தேஜஸ் எம்.கே.1 ரக விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப் பட உள்ளன. இந்த போர் விமானங்களில் டிஜிட்டல் ரேடார், வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், ஜாமர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள், ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் சோதனை ஓட்டம் அண் மையில் பெங்களூருவில் வெற்றி கரமாக நடத்தப்பட்டது.
ஆசியாவிலேயே பாகிஸ்தானில்தான் விலைவாசி அதிகம்
- 25 சதவீத பணவீக்கத்துடன், ஆசியாவிலேயே அன்றாட வாழ்வுக்கு அதிக பிடிக்கும் நாடாகவும், 1.9 சதவீதத்துடன் பிராந்தியத்தின் நான்காவது குறைவான பொருளாரா வளர்ச்சியுடைய நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
- குறிப்பாக, ‘பாகிஸ்தானில் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 15 சதவீதமாக இருக்கும். பிராந்தியத்தில் உள்ள 46 நாடுகளைக் காட்டிலும் இது மிகவும் அதிகம். நாட்டின் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 2.8 சதவீதமாக இருக்கும். இது 2024-25 நிதியாண்டின் ஐந்தாவது மிகவும் குறைவான விகிதமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-மாலத்தீவு வர்த்தக பரிவர்த்தனை:
- இந்தியாவிடமிருந்து மாலத்தீவு ஆண்டுக்கு 780 மில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்கிறது. இதுவரையில், இதற்கான தொகையை மாலத்தீவு டாலரில் வழங்கி வந்தது.
- இந்நிலையில், இனி இந்தியாவுடனான வர்த்தக பரிவர்த்தனையை மாலத்தீவின் நாணயமான ரூபியாவில் மேற்கொள்வது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகம்மது சயித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக:
- இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் வேறு தூதரக பணிக்கு மாற்றப்பட்டிருப்பதால், புதிய தூதராக லிண்டி கேமரூனை பிரிட்டன் அரசு நியமித்துள்ளது. அவா் இந்திய தூதராக இந்த மாதத்தில் பதவியேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கான அறிவிப்பை இந்தியாவிலுள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டது.
- லிண்டி கேமரூன், பிரிட்டனின் தேசிய இணைய பாதுகாப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளாா். அதற்கு முன்பாக அவா் பிரிட்டனின் வடக்கு அயா்லாந்து அலுவலக இயக்குநராக பணியாற்றியுள்ளாா்.
LUPEX என்னும் சந்திரதுருவ ஆய்வுப்பணி
- நிலவின் துருவப் பகுதிகளில் வாழ்வியலுக்கு சாத்தியமான செயல்பாடுகள் மற்றும் நீர்-பனி சார் வளங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய LUPEX (Lunar Polar Exploration Mission) என்ற பெயரில் இஸ்ரோ மற்றும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன.
‘ட்ரீ ஆம்புலன்ஸ்’வசதி
- மரங்களை நோயிலிருந்து பாதுகாக்கவும், தனது ஆளுகைப் பகுதி பசுமைச் சொத்துக்களை மேம்படுத்தவும், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதன் பகுதியில் உள்ள நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்காக ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- என்டிஎம்சி பகுதியில், தோராயமாக 1.80 லட்சம் மரங்கள் உட்பட பசுமையான சொத்துக்கள் உள்ளன. நோய்கள், பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு சிகிச்சை அளிக்க ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ பயன்படுத்தப்படும்.
- TNPSC GK குறிப்புகள் தமிழ் APRIL– 2024
கோல்டன் பாம் / தங்கப்பனை ’ (Palme d’Or) விருது
- கேன்ஸ் திரைப்பட விழாவின் உச்ச அங்கீகாரமான ‘கோல்டன் பாம் / தங்கப்பனை ’ (Palme d’Or) விருதுக்கான போட்டி பிரிவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய இயக்குநா் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ (All we imagine as light ) எனும் திரைப்படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இத்திரைப்படமானது கடற்கரை நகரை நோக்கிய சாலைப் பயணத்தில் ஒரு மாய வனப்பகுதியை எதிா்கொள்ளும் 2 செவிலியா்கள், தங்களின் கனவை நனவாக்கிக் கொள்கின்றனா் என்று கற்பனைக் களத்துடன் கூடிய பயணக் கதையாகும்.
- APRIL AWARDS HONOURS 2024 IN TAMIL
குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை 2024:
- 2024 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 79.1/100 மதிப்பெண்களுடன் IIT பம்பாய் 45வது இடத்திற்கு உயர்ந்தது.
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் / National Safe Motherhood Day 2024:
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கான முறையான சுகாதார பராமரிப்பு சிகிச்சை மற்றும் மகப்பேறு வசதிகள் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Empowering Families, Strengthening Communities for Optimal Maternal Health
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்காக ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியுள் அமைப்பு ?
A) சென்னை முனிசிபல் கவுன்சில்
B) மும்பை முனிசிபல் கவுன்சில்
C) புதுடெல்லி முனிசிபல் கவுன்சில்
D) பெங்களூரு முனிசிபல் கவுன்சில்
- ANS: C) புதுடெல்லி முனிசிபல் கவுன்சில்