Saturday, February 3, 2024

FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.02.24


உலக அளவில் அதிக வாகன நெரிசல் இருந்த நகரங்களின் பட்டியல் 2023:

2023ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வாகன நெரிசல் இருந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல் 10 இடங்களில் இந்தியாவின் இரு பெருநகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

  1. இதில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணம் 37 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றனவாம்.
  2. இதற்கு அடுத்தபடியாக அயர்லாந்தின் டப்லின் நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 29 நிமிடங்கள் 30 விநாடிகளாகின்றன. 
  3. 3வது இடத்தில் கடனாவின் ரொரன்டோ நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 29 நிமிடங்களாகின்றன. 
  4. 4வது இடத்தில் இத்தாலியின் மிலன் நகரமும், 
  5. 5வது இடத்தில் பெரு நாட்டின் லிம்பா நகரமும் உள்ளன. 
  6. 6வது இடத்தில் இந்தியாவின் பெங்களூரு நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 28 நிமிடங்கள் 10 விநாடிகள் தேவைப்படுகிறதாம். 
  7. 7வது இடத்தில் புணே நகரம் உள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் பயணிக்க 27 நிமிடங்கள் ஆகின்றன.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாம் டாம் (Tom Tom) என்னும் நிறுவனம் போக்குவரத்து நெரிசல் குறியீட்டை தரவரிசைப்படுத்தியுள்ளது. 

எல்.கே அத்வானிக்கு -பாரத ரத்னா விருது 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்ட கால தலைவராக இருந்தவருமான லால் கிருஷ்ண அத்வானி. கடந்த 1927 ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் பிறந்தார்

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் ஜன சங்கத்திற்காக வேலை செய்தார். கடந்த 1980 ஆம் ஆண்டு பாஜகவை உருவக்கிய தலைவர்களில் அத்வானியும் ஒருவர். அதனைத் தொடர்ந்து வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவின் முகமாக நீண்டகாலம் அறியப்பட்டார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990ல் அத்வானி நடத்திய "ரத யாத்திரை" தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

டிஜிட்டல் டிடாக்ஸ் / Digital Detox 

கர்நாடக அரசு, AIGDF மற்றும் NIMHANS உடன் இணைந்து, அதிகப்படியான தொழில்நுட்ப பயன்பாட்டினால் எழும் மனநல சவால்களை எதிர்கொள்ள டிஜிட்டல் டிடாக்ஸ் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது. 

பொறுப்பான கேமிங்கை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்குதல், டிஜிட்டல் டிடாக்ஸ் மையங்களில் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் பட்டறைகள் மூலம் சமூக இணைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

C- CARES இணையதள போர்டல்:

மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரல்ஹாத் ஜோஷி, நிலக்கரிச் சுரங்க வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கான (CMPFO) C-CARES இணையப் போர்ட்டலைத் தொடங்கினார். 

C-DAC ஆல் உருவாக்கப்பட்டது, இது நிலக்கரி துறையில் 3.3 லட்சம் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் மற்றும் 6.1 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதையும் செயல்முறைகளை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. போர்ட்டல் ஆன்லைன் மூலம் உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு உதவுகிறது, வெளிப்படைத்தன்மை, விரைவான செயலாக்கம் மற்றும் சிறந்த பதிவு மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது.

தமிழகத்தில் 'கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் 12,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச விளையாட்டு கருவிகள் வழங்கும் கலைஞர் விளையாட்டு கிட் திட்டத்தை தொடங்க உள்ளது.

கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிப்பதும், நகர்ப்புறம் மட்டுமின்றி அனைத்துப் பின்னணியிலிருந்தும் சாதனையாளர்கள் வருவதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கெலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, இது மாநில அரசின் வெற்றியைக் காட்டுகிறது.

EXERCISE VAYUSHAKTI- வாயுசக்தி பயிற்சி 2024

2024 பிப்ரவரி 17 அன்று ஜெய்சால்மருக்கு அருகிலுள்ள பொக்ரான் ஏர் டு கிரவுண்ட் ரேஞ்சில் வாயு சக்தி-24 பயிற்சியை இந்திய விமானப்படை நடத்த உள்ளது. ஏற்கனவே 2019 பிப்ரவரி 16-ம் தேதி இத்தகைய பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய ராணுவத்துடனான கூட்டு நடவடிக்கைகளும் காட்சிப்படுத்தப்படும்.

‘பாரத் அரிசி’ 

விலைவாசி உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் ரூ. 29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு 02.02.24 அறிவித்தது. இந்த அரிசி அடுத்த வாரம்முதல் கடைகளில் கிடைக்கும்; இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசி இருப்பு வைத்திருக்கும் அளவு விவரங்களை தெரியப்படுத்துமாறு வணிகா்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய இரண்டின் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) இந்த விற்பனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இணைய வழியில் இணைய-வணிக வலைதளங்கள்மூலம் ‘பாரத்’ அரிசி விற்பனை செய்யப்படும். அடுத்த வாரம்முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். ‘பாரத்’ அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

இந்தியாவில் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் அமைப்பான சா்வதேச புற்றுநோய் ஆராய்ச்சிக்கான முகமை (ஐஏஆா்சி) இதுதொடா்பாக 115 நாடுகளில் ஆய்வை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது: உலக அளவில் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 2 கோடியாகவும், உயிரிழப்போா் எண்ணிக்கை 97 லட்சமாகவும் உள்ளது. புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னா் 5 ஆண்டுகளே உயிருடன் இருப்பவா்களின் எண்ணிக்கை 5.3 கோடி போ் என்ற அளவில் உள்ளது. 

மேலும், உலக அளவில் ஐந்தில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதும், 9 ஆண்களுக்கு ஒருவரும், 12 பெண்களுக்கு ஒருவா் என்ற விகிதத்தில் உயிரிழப்பு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 14.1 லட்சமாகவும், உயிரிழப்போா் எண்ணிக்கை 9.1 லட்சமாகவும் உள்ளது. மேலும், 75 வயதை அடையும் முன் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைப் பொருத்தவரை இந்தியாவில் 10.6 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே வயதில் புற்றுநோய் பாதிப்புக்கு உயிரிழக்கும் ஆபத்து என்பது 7.2 சதவீதமாக உள்ளது. 

உலக அளவில் இந்த விகிதமானது பாதிப்பு உருவாகும் அபாயம் 20 சதவீதமாகவும், உயிரிழக்கும் ஆபத்து 9.6 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தைப் பொருத்தவரை ஓஷியானியா கண்டம் முதலிடத்தில் உள்ளது. 75 வயதை அடையும் முன் புற்றுநோய் உருவாகும் ஆபத்து இந்த நாட்டில் 38 சதவீதமாக உள்ளது. 34 சதவீதத்துடன் வட அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இதே வயதில் புற்றுநோய் பாதிப்புக்கு உயிரிழக்கும் ஆபத்தைப் பொருத்தவரை 11.5 சதவீதத்துடன் ஐரோப்பா முதலிடத்திலும், 9.3 சதவீதத்துடன் ஆசியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

பர்கூர் மலைகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் தாலுகாக்களில் 80,114.80 ஹெக்டேர் (801.148 சதுர கிமீ) காப்புக்காடுகளை தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக மாநில அரசு அறிவித்துள்ளது .


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:FEBRUARY 2024

'டிஜிட்டல் டிடாக்ஸ்' முயற்சி எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

A)  கேரளா
B) கர்நாடகா
C) ராஜஸ்தான்
D)  மகாராஷ்டிரா


பிப்ரவரி 3 - தேசிய கோல்டன் ரெட்ரீவர் தினம்

சில நாடுகளில், பிப்ரவரி 3 ஆம் தேதி தேசிய கோல்டன் ரெட்ரீவர் தினம். 

கோல்டன் ரெட்ரீவர் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான நாய் இனங்களில் ஒன்றாகும். அவர்களின் புத்திசாலித்தனம், விளையாட்டுத்தனமான இயல்பு மற்றும் அமைதியான குணம் ஆகியவை எந்தவொரு நாய் ஆர்வலருக்கும் அவர்களை சிறந்த தோழர்களாக ஆக்குகின்றன.



நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (13.11.2024)

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு மத்திய அரசு அனுமதி : ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய...