Tuesday, August 8, 2023

TNPSC TAMIL NOTES MUDIYARASAN மரபுக்கவிதை-கவிஞர் முடியரசன்



மரபுக்கவிதை-கவிஞர் முடியரசன்
  • கவிஞர் முடியரசன் அவர்களின் இயற்பெயர்: துரைராசு
  • பிறந்த ஆண்டு: 1920 அக்டோபர் 7
  • சொந்த ஊர்: பெரிய குளம், மதுரை மாவட்டம்
  • பெற்றோர்கள்: சுப்பராயலு, சீதா லட்சுமி அம்மையார்.
TNPSC TAMIL NOTES MUDIYARASAN PDF: கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியர்களுடன் நெருங்கி பழகியவர். பாரதிதாசனுடன் கொண்ட நட்பால் முற்போக்கு எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, அதை தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்.
அதை வலியுறுத்தும் விதமாக தன்னுடைய மறைவின்பொழுது சடங்குகள், சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று கூறி, அதன்படியே நிறைவேற செய்தவர். காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்த இவர் தன்னுடைய இயற்பெயரான துரைராசு என்பதை மாற்றி முடியரசன் என்று வைத்துக்கொண்டார்.

கவியரசு முடியரசன் அவர்கள் எழுதிய நூல்கள்:
1. பூங்கொடி 1964-பூங்கொடி என்ற காவிய நூல் 1966 -ல் தமிழக அரசின் பரிசைப்பெற்று புகழடைந்தது.
2. காவியப்பாவை 1960
3. வீரகாவியம் (காப்பிய நூல்) 1966
4. முடியரசன் கவிதைகள் (கவிதை நூல்) 1954

பட்டங்கள்: TNPSC TAMIL NOTES MUDIYARASAN PDF: திரு குன்றக்குடி அடிகளார் பறம்பமலையில் நடந்த விழாவில் இவருக்கு "கவியரசு" என்ற பட்டத்தை வழங்கினார்.
பேறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு "திராவிட நாட்டின் வானம்பாடி" என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார்.

முடியரசன் எழுதி மற்ற நூல்களும் - ஆண்டுகளும்:
  • அன்புள்ள பாண்டியனுக்கு – 1968
  • பாடுங்குயில் - 1986
  • நெஞ்சுபொறுக்கவில்லையே – 1985
  • மனிதனைத் தேடுகிறேன் - 1986
  • தமிழ் முழக்கம் - 1999
  • நெஞ்சிற் பூத்தவை – 1999
  • ஞாயிறும் திங்களும் - 1999
  • வள்ளுவர் கோட்டம் - 1999
  • புதியதொரு விதி செய்வோம் - 1999
  • தாய்மொழி காப்போம் - 2001
  • மனிதரைக் கண்டுகொண்டேன் - 2005
  • எக்கோவின் காதல்
  • எப்படி வளரும் தமிழ் - 2001
காவியங்கள்:
  • பூங்கொடி - 1964
  • கவியரங்கில் முடியரசன் - 1964
  • வீரகாவியம் - 1966
  • ஊன்றுகோல் - 1983
கவிதைத் தொகுப்புகள்:
  • காவியப்பாவை – 1960
  • முடியரசன் கவிதைகள் - 1954
  • கவியரங்கில் முடியரசன் - 1960
  • பாடுங்குயில் - 1986
பட்டமும், விருதுகளும்:
  • அழகின் சிரிப்பு என்ற கவிதை – முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது - 1950
  • தமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம் - 1966
  • மாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள் - 1954
  • கவியரசு என்ற பட்டம் - பறம்பு மலை விழாவில் மாநில அரசு வழங்கியது.
  • 'திராவிட நாட்டின் வானம்பாடி' என்ற பட்டம் - அறிஞர் அண்ணா வழங்கினார் - 1957
  • 'கவியரசு' என்ற பட்டம் - குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966
  • கலைஞர் விருது – 1988
  • பாவேந்தர் விருது – 1987
  • கலைமாமணி விருது – 1998
  • அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு – 1993
TNPSC EXAM IMPORTANT POINTS:TNPSC TAMIL NOTES MUDIYARASAN
  1. இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
  2. அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு- பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950
  3. 'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
  4. பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
  5. முடியரசன் கவிதைகள் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1966
  6. வீரகாவியம் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1973
  7. மாநில நல்லாசிரியர் விருது- 1974
  8. சங்கப்புலவர் பட்டம்-குன்றக்குடி அடிகளார் (1974)
  9. பாவரசர் பட்டம்,பொற்பேழை- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ்க்கழகம், பெங்களூரு- 1979
  10. பொற்கிழி-பாவாணர் தமிழ்க்குடும்பம்,நெய்வேலி-1979
  11. பொற்குவை உரூ.10,000-மணிவிழா எடுப்பு- கவிஞரின் மாணவர்கள், காரைக்குடி-1979
  12. பொற்கிழி- பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, கவிஞர் மீரா,சிவகங்கை-1979
  13. கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி- கலைஞர், தி.மு.க மாநில இலக்கிய அணி-1980
  14. தமிழ்ச்சான்றோர் விருது,பதக்கம்- தமிழகப்புலவர்குழு, சேலம்-1983
  15. கலைஞர் விருது- என்.டி.இராமராவ்,ஆந்திர முதல்வர்,தி.மு.க முப்பெரும் விழா-1988
  16. பாவேந்தர் விருது(1987க்கு உரியது) (தமிழ்நாடு அரசு) -1989
  17. பூங்கொடி என்ற வீறுகவியரசர் இயற்றிய மொழிப்போர்க்காப்பியம் 1993-இல் இந்திராணி இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது. இந்நூலைப்பற்றிப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள். மூன்றனுள் ஒன்றாகக் கருதப்பெறும் சிறப்புடையது 'பூங்கொடி' என்று வாழ்த்தினார்.
  18. பொற்கிழி- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்-1993
  19. சிறந்த தமிழ்த்தொண்டிற்கான 'அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்',வெள்ளிப்பேழை, பொற்குவை உரூ.50,000-அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை-1993
  20. கல்வி உலகக் கவியரசு விருது- அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம்-1996
  21. பொற்கிழி- பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி-1997
  22. கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998
  23. வீறுகவியரசரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - 2000
முடியரசனார் பற்றிய புகழ்மொழிகள்:
  • 'கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன் -  தந்தை பெரியார்
  • 'திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர் முடியரசன்'       -- பேரறிஞர் அண்ணா
  • இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம். - கலைஞர் மு. கருணாநிதி
  • 'கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.' -   மக்கள் திலகம் எம். ஜி. இராமச்சந்திரன்
  • தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார். - பேராசிரியர் க. அன்பழகன்
  • 'என் மூத்த வழிதோன்றல் முடியரசனே.. எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்'  - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
  • 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்' - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
  • 'சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை..'  -தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

மரபுக்கவிதை: தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: