TNPSC TAMIL NOTES VANIDASAN
வாழ்க்கை குறிப்புகள்:
- கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு
- இவர்தம் புனைப்பெயர் ரமி என்பதாகும்.
- புதுவை மாவட்டம் வில்லியனூரைச் சேர்ந்தவர்.
- இவர்தம் பெற்றோர்: அரங்க திருக்காமு, துளசியம்மாள்.
- இவர்தம் காலம்: 22.7.1915 - 7.8.1974
- கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்வொர்த், தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
வேறு பெயர்கள்:
- புதுமைக் கவிஞர்
- பாவலரேறு
- பாவலர்மணி
- தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்:ரமி
TNPSC TAMIL NOTES VANIDASAN: வாணிதாசன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் உருசியம், ஆங்கில மொழிகளிலும் புலமைப்பெற்றர். பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். இவருடைய பாடல்கள் 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம் வெளியிட்ட 'புதுத்தமிழ்க் கவிமலர்கள்" என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.
பிரெஞ்சு மொழியாற்றலைப் பயன்படுத்தி, "தமிழ் - பிரெஞ்சு கையரக முதலி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
"செவாலியர்" என்ற பட்டத்தை பிரெஞ்சு குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். பிரெஞ்சு மொழியில் வல்லவர். இவருக்கு "கவிஞரேறு", "பாவலர் மணி" என்ற பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான கவிஞர்களில் இவரும் ஒருவர்.
இவருடைய பாடல்களில் இயற்கை புனைவு இயற்கையாவே வந்தமைந்திருக்கும். இக்காரணத்தாலேயே இவரை "தமிழகத்தின் வேர்ட்வொர்த்" என பாராட்டுகின்றனர்.
வாணிதாசனின் கவிதை வளத்தை உணர்ந்து திரு.வி.க. அவர்கள் திரு. வாணிதாசன் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று கூறினார். மயிலை சிவமுத்து "தமிழ்நாட்டுக் தாகூர்" என்று புகழ்ந்துரைத்தார். தமிழ்நாடு அரசுக் கவிஞரான இவரின் நூல்கள் அனைத்தும் தற்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.
கவிஞர் ஏறு வாணிதாசன் அவர்களின் படைப்புகள்:
- இரவு வரவில்லை
- இன்ப இலக்கியம்
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம்
- எழிலோவியம்
- குழந்தை இலக்கியம்
- கொடி முல்லை
- சிரித்த நுணா
- தமிழச்சி
- தீர்த்த யாத்திரை
- தொடுவானம்
- பாட்டரங்கப் பாடல்கள்
- பாட்டு பிறக்குமடா
- பெரிய இடத்துச் செய்தி
- பொங்கற்பரிசு
- வாசிதாசன் கவிதைகள்
TNPSC EXAM POINTS :TNPSC TAMIL NOTES VANIDASAN
- இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
- இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
- இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
- பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
- இவரின் முதல் பாடல் = பாரதி நாள்
No comments:
Post a Comment