நவம்பர் மாதம் 2024 ஜிஎஸ்டி வருவாய்
- ஜிஎஸ்டி வருவாய் கடந்த மாதம் 8.5 சதவிகிதம் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயாக ரூ. 1.82 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.
- இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.34,141 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.91,828 கோடி, செஸ் வரி ரூ.13,253 கோடியாகும்.
- முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.5 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மூன்றாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்.
- முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியும், கடந்த அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு:
- இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு மற்றும் பார்மா ஆகிய துறைகளில் உள்ள ஆரோக்கியமான வரவாகும்.
- நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் மொரீஷியஸ் (5.34 பில்லியன் டாலர்), சிங்கப்பூர் (7.53 பில்லியன் டாலர்), அமெரிக்கா (2.57 பில்லியன் டாலர்), நெதர்லாந்து (3.58 பில்லியன் டாலர்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (3.47 பில்லியன் டாலர்), கேமன் தீவுகள் (235 மில்லியன் டாலர்) மற்றும் சைப்ரஸ் (808 மில்லியன் டாலர்) நேரடி அந்நிய முதலீடு வரத்து அதிகரித்தது. இருப்பினும் ஜப்பான் மற்றும் இங்கிலாந்திலிருந்து நேரடி அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளது.
- 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 13.55 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
- இதனை தொடர்ந்து கர்நாடகாவில் 3.54 பில்லியன் டாலர், தெலுங்கானா 1.54 பில்லியன் டாலர் மற்றும் குஜராத்தில் 4 பில்லியன் டாலர் ஆக இருந்தது.
சையது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டி 2024:
- சையது மோடி இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிந்த் இணை சாம்பியன் பட்டம் வென்றனா்.
- இறுதிச்சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த சிந்து, 21-14, 21-16 என்ற நோ் கேம்களில், உலகின் 119-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வு லு யுவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 47 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
- இந்தப் போட்டியில் சிந்து கோப்பை வென்றது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன், 2017, 2022 ஆகிய ஆண்டுகளில் அவா் முதலிடம் பிடித்துள்ளாா்.
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-தங்கமயில் விருது
- கோவாவில் முடிவடைந்த 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மிகச்சிறந்த திரைப்படத்துக்கான தங்கமயில் விருதை லித்துவேனியன் திரைப்படமான டாக்சிக் பெற்றுள்ளது.
- இந்த விருதுக்கான ரூ.40 லட்சம் ரொக்கப்பணம், சான்றிதழ் மற்றும் தங்கமயில் கோப்பையைத் திரைப்படத்தின் இயக்குநர் சையூல் ப்லியூவைத்தே, தயாரிப்பாளர் ஜியட்ரே புரோகைத்தேவுடன் பகிர்ந்து கொண்டார்.
- இந்தத் திரைப்படம் கருணை மற்றும் ஆழ்ந்த உணர்வுத்திறனை எடுத்துக்காட்டுவதாக நடுவர்கள் பாராட்டினர்.
- 13 வயது மரிஜா என்னும் சிறுமியின் கதையை இந்தத்திரைப்படம் சொல்கிறது. தனது பாட்டியுடன் வசித்துவரும் மரிஜா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திரைப்படம் அழகாக சித்தரிக்கிறது.
- 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024:முக்கிய சிறப்பம்சங்கள்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..