55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024:முக்கிய சிறப்பம்சங்கள்:
- 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), கோவாவின் பொழுதுபோக்கு சங்கம் (ESG) ஆகியவை இணைந்து 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (IFFI) நடத்த உள்ளன.
- "நாளைய படைப்பு மனங்கள்" என்பதன் 4 வது பதிப்பு 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (The 55th edition of the International Film Festival of India (IFFI))று (21.11.2024) தொடங்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களை வளர்ப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
- இந்த ஆண்டு 101 நாடுகளில் இருந்து 1,676 சமர்ப்பிப்புகளை இந்த விழா பெற்றுள்ளது. இது இந்த விழாவின் வளர்ந்து வரும் சர்வதேச நிலைப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். 81 நாடுகளைச் சேர்ந்த 180 சர்வதேச திரைப்படங்கள் இதில் இடம்பெறும்.
- இந்திய மொழிகளில் இந்த ஆண்டு தேர்வில் 5 இந்தி படங்கள், 2 கன்னட படங்கள், 1 தமிழ் படம், 3 மராத்தி படங்கள், 2 தெலுங்கு படங்கள், 1 குஜராத்தி படம், 3 அசாமி, 4 மலையாளம், 3 பெங்காலி படம், ஒரு காலோ படம் என மொத்தம் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- அதேபோல், கதை அம்சம் அல்லாத பிரிவில் ஏழு இந்தி படங்கள், 2 தமிழ் படங்கள், ஒரு பெங்காலி படம், ஒரு ஹரியான்வி படம், ஒரு காரோ படம், ஒரு பஞ்சாபி படம், ஒரு லடாக்கி படம், ஒரு மராத்தி படம், ஒரு ஒரியா படம், ஒரு தமிழ் படம், ஒரு ஆங்கிலம், ஒரு ராஜஸ்தானி படம் மற்றும் ஒரு கொங்கனி படம் என 20 தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வு இந்தியாவில் உள்ள எண்ணற்ற மரபுகளுக்கு ஒரு சான்றாகும். இது அதன் மாறுபட்ட கலாச்சாரத்தின் நுண்ணுறிவை வழங்குகிறது.
- சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்த புகழ்பெற்ற விருது ஆஸ்திரேலிய இயக்குனர் பிலிப் நாய்ஸுக்கு வழங்கப்பட உள்ளது. அவர் வித்தியாசமான கதை சொல்லல் அம்சத்துடன் படங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர்.
- இந்தியன் பனோரமா: இது இந்தியாவின் சினிமா பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். இந்தியன் பனோரமா பிரிவில் இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதை அம்சம் அல்லாத படங்கள் திரையிடப்படும்.
- ஃபிலிம் பஜார் 2024: ஃபிலிம் பஜாரின் 18வது பதிப்பு இன்னும் மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது, 350+ திரைப்படத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 'மார்சே டு கேன்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் சந்தைத் தலைவர் திரு ஜெரோம் பில்லார்ட் பிலிம் பஜாரின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.
- இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 55வது பதிப்பின் கருப்பொருள் ' இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள்: எதிர்காலம் இப்போது (' Young Filmmakers: The Future is Now).
- இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 2024-ன் கருப்பொருள் 'இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள்' மீது கவனம் செலுத்துகிறது. இது படைப்பாற்றலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.
- Country of Focus for IFFI 2024: ஐஎஃப்எஃப்ஐ- 2024, ஆஸ்திரேலியாவை "கவனம் செலுத்தும் நாடு" என்று கௌரவிக்கிறது. இது திருவிழாவின் சர்வதேச தன்மையை மேம்படுத்துகிறது. அத்துடன் இந்தியா-ஆஸ்திரேலியா ஆடியோ விஷுவல் இணை தயாரிப்பு ஒப்பந்தத்தின் மூலம் பகிரப்பட்ட கதைசொல்லல் மரபுகளை எடுத்துக் காட்டுகிறது.இந்த விழா மைக்கேல் கிரேசியின் ஆஸ்திரேலிய திரைப்படமான பெட்டர் மேனுடன் தொடங்கும்.
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024:
இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது 2024:
- கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது.
- இந்திய சினிமாவில் அளப்பரிய பங்காற்றியதை அங்கீகரிக்கும் வகையில் கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-தங்கமயில் விருது:
- கோவாவில் முடிவடைந்த 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மிகச்சிறந்த திரைப்படத்துக்கான தங்கமயில் விருதை லித்துவேனியன் திரைப்படமான டாக்சிக் பெற்றுள்ளது.
- இந்த விருதுக்கான ரூ.40 லட்சம் ரொக்கப்பணம், சான்றிதழ் மற்றும் தங்கமயில் கோப்பையைத் திரைப்படத்தின் இயக்குநர் சையூல் ப்லியூவைத்தே, தயாரிப்பாளர் ஜியட்ரே புரோகைத்தேவுடன் பகிர்ந்து கொண்டார்.
- இந்தத் திரைப்படம் கருணை மற்றும் ஆழ்ந்த உணர்வுத்திறனை எடுத்துக்காட்டுவதாக நடுவர்கள் பாராட்டினர்.
- 13 வயது மரிஜா என்னும் சிறுமியின் கதையை இந்தத்திரைப்படம் சொல்கிறது. தனது பாட்டியுடன் வசித்துவரும் மரிஜா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை திரைப்படம் அழகாக சித்தரிக்கிறது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் (IFFI)ல் சிறந்த குறும்பட விருது :
- கோவாவில் நடக்கும், இந்திய - சர்வதேச திரைப்பட விழாவில், 48 மணி நேர குறும்பட சவாலில், குள்ளு என்ற குறும்படம், 'ஐ.எப்.எப்.ஐ' என்ற, 'இபி' விருதை வென்றது.
- இதில், 'குள்ளு' குறும்படம் சிறந்த படமாக தேர்வானது. அதே படத்தின் பெண் இயக்குநர் அர்ஷிலி ஜோஸ், சிறந்த இயக்குநராகவும், சிறந்த கதாசிரியருக்கான விருதை ஆதிராஜ் போசும் வென்றனர்.
- அதில், நடித்த புஷ்பேந்திர குமார், சிறந்த நடிகராகவும், 'லவ் பிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன்' படத்தில் நடித்த விஷாகா நாயர் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- இரண்டாம் பரிசுக்கு, வி ஹியர் தி சேம் மியூசிக்' படம் தேர்வானது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2024:
- சிறந்த வெப் சீரியஸ் விருது – Lampan வெப் சீரியஸ்
- சிறந்த நடிகர் விருது – கிளெமென்ட் ஃபேவ்
- சிறந்த நடிகை விருது – வெஸ்டா மட்டுலயுதா, லேவா ரூபேகைட்
- சிறந்த இயக்குநர் – போக்டன் முரேசானு