CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 11.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 11.12.2024 )


உள்நாட்டு கோக்கிங் நிலக்கரி உற்பத்தி  இலக்கு 2024-25:

  • 2023-24-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி 66.821 மில்லியன் டன் ஆகும். 
  • 2024-25-ம் நிதியாண்டில் உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி இலக்கு 77 மில்லியன் டன் ஆகும்.
  • எஃகுத் துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கச்சா  நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும் வகையிலும் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் நிலக்கரி உற்பத்தித் திட்டத்தை  அந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இந்த இயக்கம் 2029-30-ம் நிதியாண்டில் உள்நாட்டிலேயே கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தியை 140 மெட்ரிக் டன் வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


சார்தீ 1.0 இயக்கம்:

  • சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் தேசிய சட்டப் பணிகள் ஆணையமும் இணைந்து சார்தீ 1.0 (SARTHIE 1.0) இயக்கத்தைத் தொடங்கி உள்ளன. 


பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முதுநிலை இரண்டாம் நிலை மாதிரி பள்ளி :

  • டேராடூனில் உள்ள பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம் (National Institute for the Empowerment of Persons with Visual Disabilities (NIEPVD)), பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ உடன் இணைந்த, முதுநிலை இரண்டாம் நிலை மாதிரி பள்ளியை (Senior Secondary Model School) நடத்தி வருகிறது.

(நமஸ்தே)' (‘NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME) திட்டம் :

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் 'இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)' (‘NATIONAL ACTION FOR MECHANISED SANITATION ECOSYSTEM (NAMASTE)” SCHEME) திட்டத்தை உருவாக்கியுள்ளது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..





    Post a Comment

    0Comments

    Post a Comment (0)

    #buttons=(Ok, Go it!) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn more
    Ok, Go it!