சார்தீ 1.0 இயக்கம்:
- சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் தேசிய சட்டப் பணிகள் ஆணையமும் இணைந்து சார்தீ 1.0 (SARTHIE 1.0) இயக்கத்தைத் தொடங்கி உள்ளன.
சார்தீ 1.0 (SARTHIE 1.0) இயக்கத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
- ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கைகள், மூத்த குடிமக்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை எடுப்பவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் யாசகம் செய்யும் நபர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தமுயற்சியின் நோக்கமாகும்.
- சமூக நலச் சட்டங்கள், பிற சட்டங்கள் மற்றும் அரசின் நிர்வாக திட்டங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நன்மைகள் மற்றும் உரிமைகளைப் பெறுவது குறித்து தெரிந்து கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்துதல் மற்றும் சட்ட உதவிகள் வழங்குதல் இதன் நோக்கம் ஆகும்.
- தனிநபர்களின் உரிமைகள், பயன்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அவற்றைப் பெறுவதற்கான சட்ட உதவிகளை வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி இந்த குழுக்களிடையே அவர்களின் சட்ட உரிமைகள், நலன் சார்ந்த உரிமைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இடைவெளியை குறைக்க முயல்கிறது.
- மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் தற்போதுள்ள தேசிய சட்டசேவைகள் ஆணையத்தின் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்பு சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதற்கும், அவர்களின் உரிமைகள், நன்மைகள் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கும் உதவும்.
SOURCE : PIB