CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 ( 30.11.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 ( 30.11.2024 )


இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது 2024:

  • கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில்  பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது. 
  • இந்திய சினிமாவில் அளப்பரிய பங்காற்றியதை அங்கீகரிக்கும் வகையில் கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் (IFFI)ல் சிறந்த குறும்பட விருது :

  • கோவாவில் நடக்கும், இந்திய - சர்வதேச திரைப்பட விழாவில், 48 மணி நேர குறும்பட சவாலில், குள்ளு என்ற குறும்படம், 'ஐ.எப்.எப்.ஐ' என்ற, 'இபி' விருதை வென்றது.
  • இளைஞர்களின் படைப்பாற்றலுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கோவாவில் நடக்கும், 55வது இந்திய - சர்வதேச திரைப்பட விழாவில், குறும்பட போட்டி நடத்தப்பட்டது.
  • இதில், 'குள்ளு' குறும்படம் சிறந்த படமாக தேர்வானது. அதே படத்தின் பெண் இயக்குநர் அர்ஷிலி ஜோஸ், சிறந்த இயக்குநராகவும்சிறந்த கதாசிரியருக்கான விருதை ஆதிராஜ் போசும் வென்றனர்.
  • அதில், நடித்த புஷ்பேந்திர குமார், சிறந்த நடிகராகவும், 'லவ் பிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன்' படத்தில் நடித்த விஷாகா நாயர் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
  • இரண்டாம் பரிசுக்கு, வி ஹியர் தி சேம் மியூசிக்' படம் தேர்வானது.

வலைப்பின்னல் தயார்நிலைக்கான குறியீட்டு எண் -2024:

  • 2024-ம் ஆண்டுக்கான வலைப்பின்னல் தயார்நிலைக்கான குறியீட்டு எண் தரவரிசையில் இந்தியா 49-வது இடத்தைப் பெற்றுள்ளது.  2023-ம் ஆண்டின் அறிக்கைபடி 61-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 11 இடங்கள் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பம், மக்கள் தொடர்பு, நிர்வாகம் மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய 4 முக்கிய அம்சங்களின் கீழ் 133 பொருளாதார அடிப்படை கூறுகளின்படி, இந்தியாவின் வலைப்பின்னல் தயார்நிலை குறியீட்டு எண்  மதிப்பீடு செய்யப்படுகிறது.
  • இந்தியாவின் வலைப்பின்னல் தயார் நிலைக்கான மதிப்பு 53.63 புள்ளிகளுடன் தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தனது திறன்களை மேம்படுத்திக் கொண்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகள், உத்திசார் நடவடிக்கைகள் ஆகியவை மக்கள் தொடர்பு, புதிய கண்டுபிடிப்புகள், மின்னணு சேவைகள் என பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான பரிமாற்ற ஒப்பந்தம்:

  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்நிலை கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (C-DAC), அதன் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் வயர்லெஸ் டெக்னாலஜிஸ்  நிறுவனத்துடன். 28.11.2024 அன்று கையெழுத்திட்டது.  
  • அதிநவீன தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவுகிறது. இந்தக் கூட்டாண்மையானது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வளர்ப்பதிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் பொது-தனியார் ஒத்துழைப்பின் மகத்தான திறனை எடுத்துக்காட்டுகிறது.

நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும்:

  • மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024-25-ம் நிதியாண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் செலவினங்கள் மதிப்பிடப்பட்டுள்ள. 
  • 2024-25-ம் நிதியாண்டுக்கான 2-வது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் 8.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. உற்பத்தித் துறையில் 2.2 சதவீதமும், சுரங்கம் மற்றும் குவாரி துறையில் -0.1 சதவீதம் என்ற நிலையில் இருந்தபோதிலும் அரையாண்டிற்கான மொத்த வருவாய் இனம் 6.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
  • வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  •  கட்டுமானத் துறையில் உள்நாட்டு எஃகு பயன்பாடு 7.7 சதவீதமாக உள்ளது.
  • 2024-25-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் விலைவாசி விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகையில் நிலையானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ சேவை மையம்:

  • தமிழகத்தில் முதன்முதலாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ சேவை மையத்தை சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் - பேச்சு பயிற்சி, இயன்முறை, செயல்முறை, உளவியல் ஆகிய 6 மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இதற்காக வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளது.
  • ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் முழுமையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ‘ஐஓடி’ தொழில் நுட்பம் முதல்முறையாக நாட்டிலேயே இந்த மையத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைவர்:

  • 2021ம் ஆண்டு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவராக அதுல் தினகரன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய தலைவராக பிரபல ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். 
  • பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவில் உள்ள மாஸ்க்வா நதியின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என்ற பெயர் உருவானது. 
  • நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 2.8 மாக் (ஒலியை விட 3 மடங்கு) வேகத்தில் செல்லக்கூடியது .

சிறந்த கூட்டுறவு வங்கி சேவைக்கான விருது 2024:

  • டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நடந்தது. இதில், இந்திய அளவில் சிறந்த வங்கி சேவைக்கான விருது, தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. 
  • இந்த விருதை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா வழங்க, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!