சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஆர்மீனியாவுக்கு முழுநேர உறுப்பினராக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது:
- சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் 104-ஆவது முழுநேர உறுப்பினராக அர்மேனியா இணைந்துள்ளதாக இந்தியாவிலுள்ள ஆர்மீனியா தூதரகம் அதிகாரப்பூர்வமாக 21.11.2024 அறிவித்துள்ளது. முன்னதாக, இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 16.11.2024 தேதி ஆர்மீனியா கையெழுத்திட்டது.
- சர்வதேச சூரியசக்தி கூட்டமை : பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்திகளை பெருக்கவும் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கின. இதற்கான முன்மொழிவை கடந்த 2015-ஆம் ஆண்டு முதன்முதலாக கொண்டுவந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து அதே ஆண்டில் நவம்பர் மாத இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைந்துள்ளது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் 2024:
- மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது.
- இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
- மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது.
- சீன அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து தொடரை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இந்தியா-கரிகாம் (கரீபியன் சமுதாயம் மற்றும் பொதுச்சந்தை) உச்சி மாநாடு:
- கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற இரண்டாவது இந்தியா-கரிகாம் (கரீபியன் சமுதாயம் மற்றும் பொதுச்சந்தை) உச்சிமாநாட்டில் நிறைவுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவை என தெரிவித்துள்ளார்.
- டொமினிகாவின் உயரிய தேசிய விருது: இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான "டொமினிகா கௌரவ விருதை" வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
- கயானாவின் ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது: கயானாவின் ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. அரசு மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" விருதை வழங்கினார்.
ஆடுஜீவிதம் திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவில் ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது:
- மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்த இப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியிருந்தார்.
- இந்த நிலையில், ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுக்கு (HMMA) ஆடுஜீவிதம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்டிபென்டென்ட் ஃபிலிம் (Foreign Language) பிரிவில் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டுள்
தொழிலதிபர் கெளதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் :
- இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொழிலதிபர் கெளதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது.
புஹு-நீா்’ (நிலத்தடி நீா்) இணையதளம்:
- நிலத்தடி நீா் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீா் பயன்பாட்டுக்கான அனுமதி விண்ணப்பங்களை நிா்வகிப்பதற்கு, மையப்படுத்தப்பட்ட ‘புஹு-நீா்’ (நிலத்தடி நீா்) இணையதளத்தை மத்திய அரசு அறிவித்தது.
- தில்லியில் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற ‘இந்திய நீா் வாரம் 2024’ மாநாட்டின் போது இந்த ‘புஹு-நீா்’ இணையதளத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் முன்மொழிந்தாா்.
சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி 2024:
- சிமெண்ட், கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்த 18வது சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலின் (என்சிபி) சர்வதேச மாநாடு & கண்காட்சி, 2024 நவம்பர் 27 முதல் 29 வரை துவாரகாவில் உள்ள யஷோபூமி, இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும்.
- இதனை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (டிபிஐஐடி) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகமும் இணைந்து நடத்துகிறது.
55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024:
- 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2024 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), கோவாவின் பொழுதுபோக்கு சங்கம் (ESG) ஆகியவை இணைந்து 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (IFFI) நடத்த உள்ளன.
- "நாளைய படைப்பு மனங்கள்" என்பதன் 4 வது பதிப்பு 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (The 55th edition of the International Film Festival of India (IFFI))இன்று (21.11.2024) தொடங்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களை வளர்ப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் இந்தியாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
"Viksit Bharat Initiative for Student Innovation and Outreach Network" (VISION)
- பின்தங்கிய குழந்தைகளிடையே கல்வி, திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விஷன் (VISION) ("மாணவர் கண்டுபிடிப்பு மற்றும் தொடர்பு வலைப்பின்னலுக்கான வளர்ச்சியடைந்த இந்தியா முன்முயற்சி") போர்ட்டலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
- 2014-ல் வெறும் 350 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்று 1.67 லட்சமாக விரிவடைந்துள்ளன
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!