உகாதி பண்டிகை:
- நாடு முழுவதும் தெலுங்கு மொழி பேசும் மக்களால் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் உகாதி பண்டிகை 09.04.2024 கொண்டாடப்படுகிறது.
- சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
- தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.
- மகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா என்று கொண்டாடப்படுகிறது.
- சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்.
- மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.
- பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை:
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) உலகளாவிய எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் நோக்கில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது.
- இதனை செயல்படுத்துவதற்காக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான திரு. திருமலை மாதவ் நாராயணை இக்கல்வி நிறுவனம் நியமித்துள்ளது.
- “ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை” (IIT Madras Research Foundation) என்பது ஐஐடி மெட்ராஸ்-ன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துதல், கண்டுபிடிப்பு- தொழில்முனைவு ஆகியவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்துதல், தொழில்- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மைகளின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தல் போன்ற நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
நோக்கம்:
- ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து உருவான ஸ்டார்ட்அப்கள், காப்புரிமைகள், தொழில்நுட்பங்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த உந்துசக்தியாக இருக்கும்
- ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், நிதி திரட்டல் போன்றவற்றுக்கு வழி ஏற்படுத்துதல்
- உத்திசார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள், தொழில் கூட்டாண்மைகள் மூலம் உலக அரங்கில் ஐஐடி மெட்ராஸ்-ன் கல்வித் திட்டங்களை இடம்பெறச் செய்தல்
அக்னி-பிரைம் ஏவுகணை:
- அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து 2024 ஏப்ரல் 03 இரவு 7.00 மணியளவில் அணு ஆயுதப்பிரிவு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது.
- இது 1,000-2,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு கேனிஸ்டரைஸ்டு செய்யப்பட்ட மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணையாகும் .
- அக்னி-பி என்பது IGMDP (ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம்) இன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட அக்னி வகுப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அக்னி-I மற்றும் அக்னி-II ஏவுகணைகளுக்குப் பதிலாக நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையாக அக்னி பிரைம், அக்னி பி என்றும் குறிப்பிடப்படுகிறது
- ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் (IGMDP) கீழ், அக்னி-I, இந்தத் தொடரின் முதல் ஏவுகணை, 1989 இல் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
மாற்றத்திற்கான முப்படைகளின் சிந்தனை மாநாடு 2024:
- மாற்றத்திற்கான முப்படைகளின் சிந்தனை மாநாடு புதுதில்லியில் 2024, ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது.
- முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப் படைகளுக்கான கூட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டி 'சிந்தனை மாநாட்டை' தொடங்கி வைத்தார். ஒவ்வொரு சேவையின் தனித்துவத்தையும் மதிக்கும் அதே வேளையில், பாரம்பரிய கருத்துக்களுக்கு ஒரு புதிய அணுகுமுறையை வழங்கவேண்டிய அவசியமும் உள்ளது என்றார். நமது செயல்திறனை அதிகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு சேவையின் திறன்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
'யோகா மகோத்சவம்' 2024:
- சர்வதேச யோகா தினம் 2024 க்கான 75 நாட்கள் கவுண்டவுனைக் கொண்டாடும் வகையில் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் இணைந்து மகாராஷ்டிராவின் புனேவின் வாடியா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்த 'யோகா மகோத்சவம்' நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் திரண்டனர்.
- 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பகிர்வு (பரிவர்த்தன் சிந்தன்) மாநாடு 2024:
- முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய யோசனைகள், முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்ட சிந்தனைப் பகிர்வு (பரிவர்த்தன் சிந்தன்) மாநாடு (08 ஏப்ரல் 2024) புதுதில்லியில் நடைபெறுகிறது. முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமையில் இந்த ஒரு நாள் மாநாடு நடைபெறும்.
- இந்த மாநாடு, முப்படைகள் தொடர்பான நிறுவனங்கள், ராணுவ விவகாரங்கள் துறை, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைமையகம் மற்றும் முப்படைப் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் மாநாடாக இந்த சிந்தனைப் பகிர்வு மாநாடு அமைந்துள்ளது.
இந்தியாவில் கடன் அட்டைகள் எண்ணிக்கை:
- இந்திய வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 100 மில்லியனைத் தாண்டியது.
- முந்தைய மாதத்தை விட 1.1 மில்லியன் கடன் அட்டைகள் அதிகரித்துள்ளது.
- பிப்ரவரி மாதம் வரையில், பயன்பாட்டுச் சுழற்சியில் நிலுவையில் உள்ள (திரும்பச் செலுத்தப் படாத) கடன் அட்டைகளின் எண்ணிக்கை 100.60 மில்லியனாக இருந்தது.
- 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், புழக்கத்தில் இருந்த மொத்த அட்டைகள் 99.5 மில்லியனாக இருந்தன.
- கடன் அட்டைகள் வழங்குவதில் 20.40 மில்லியன் அட்டைகளுடன் HDFC வங்கியானது முன்னணியில் உள்ளது
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
மாற்றத்திற்கான முப்படைகளின் சிந்தனை மாநாடு ------------ யில் 2024, ஏப்ரல் 8 அன்று நடைபெற்றது. ?
A) சண்டிகர்
B) புதுதில்லி
C) மத்தியப் பிரதேசம்
D)தமிழ்நாடு
ANS : B) புதுதில்லி