APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -03.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -03.04.2024
TODAY CURRENT AFFAIRS IN TAMIL -03.04.2024


மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா் ( ‘Myth Vs Reality Register )

  • மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபாா்க்க ‘மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியது. 
  • மக்களவைத் தோ்தல் குறித்து தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

SKOCH ESG விருது 2024:

  • மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மகாரத்னா பொதுத்துறை நிறுவனமும் (REC Limited), வங்கி சாராத நிதிக்கழக முன்னணி நிறுவனமுமான ஊரக மின்மய கழகம் (a Maharatna Central Public Sector Enterprise under the Ministry of Power and a leading NBFC), 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதிப்' பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ வென்றுள்ளது. 
  • இந்த விருது நிலையான நிதியுதவிக்கான ஊரக மின்மய கழகத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. ஊரக மின்மய கழகத்தின் செயல் இயக்குநர் திரு டி.எஸ்.சி. போஷ் புது தில்லியில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.
  • ஸ்கோச் இஎஸ்ஜி  விருதுகள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG) நடைமுறைகளில் சிறந்த செயல்திறனை நிரூபிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. இது நீடித்த மற்றும் வளர்ந்து வரும் வணிக எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிலையான முதலீடுகள் மற்றும் செயல்முறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது.

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024

  • 2024 ஆம் ஆண்டு இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை ஆனது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில்லாத மக்கள் தொகையில் 83% பேர் இளைனர்கள் ஆவர்.
  • மொத்த வேலைவாய்ப்பில்லாத மக்கள் எண்ணிக்கையில் 2000 ஆம் ஆண்டில் 54.2% ஆக இருந்த கல்வி கற்ற இளைஞர்களின் பங்கு ஆனது 2022 ஆம் ஆண்டில் 65.7% ஆக அதிகரித்துள்ளது.
  • இளைஞர்களின் வேலையின்மை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, இது 2000 இல் 5.7% ஆக இருந்து 2019 இல் 17.5% ஆக உயர்ந்துள்ளது, ஆனால் 2022 இல் 12.1% ஆக குறைகிறது.
  • மேலும், தற்போது கல்வி கற்ற ஆனால் வேலை வாய்ப்பு என்று எதுவும் இல்லாத இளைஞர்களில் ஆண்களை விட (62.2%) பெண்களின் (76.7%) பங்கு அதிகமாக உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில், மொத்த வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள் எண்ணிக்கையில் பாதி பேர் சுயதொழில் செய்பவர்கள். 136 தினசரி வேலைகள் செய்பவர்கள் மீதமுள்ள 37% பேர் பகுதி நேர வேலை செய்பவர்கள் என்ற வகையில் இருந்தனர்.
  • ஏறக்குறைய 90% தொழிலாளர்கள் முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் 2000 ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து அதிகரித்த தினசரி வேலைவாய்ப்புகளின் பங்கானது 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு சரிந்துள்ளது.
  • இளைஞர் மக்கள்தொகையில் சரிவு : இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 27% ஆக இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை 2036 க்குள் 23% ஆக குறையும் .
  • 75% இளைஞர்கள் ஆவண இணைப்புகளுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப இயலாதவர்களாகவும்: 60% பேர் கோப்புகளை நகலெடுத்து இணைக்க இயலாமலும், 90% பேர் கணித சூத்திரத்தை விரிதாள் எனப்படும் அட்டவணை முறை கணித செயல் முறையில் (spreadsheet) சேர்க்க இயலாமலும் இருந்தனர்.
  • அடுத்தப் பத்தாண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர் வளத்தில் 7-8 மில்லியன் (70-80 லட்சம்) இளைஞர்கள் இணைவர்.

டோர்னியர் 228 விமானம்

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) சமீபத்தில் இரண்டு டோர்னியர் 228 விமானங்களை லைன் ஆஃப் கிரெடிட்டின் ஒப்பந்தத்தின் கீழ் கயானாவிற்கு இந்தியா வழங்கியுள்ளது.
  • டோர்னியர் 228 என்பது இரட்டை டர்போபிராப் STOL பயன்பாட்டு விமானமாகும் , இது 1981 முதல் 1998 வரை Dornier GmbH (பின்னர் DASA Dornier, Fairchild-Dornier ) ஆல் வடிவமைக்கப்பட்டு முதலில் தயாரிக்கப்பட்டது .  
  • 1983 ஆம் ஆண்டில் , ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உற்பத்தி உரிமத்தை வாங்கி மேலும் 125 விமானங்களை இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் தயாரித்தது

புவிசார் குறியீடு இந்தியா மார்ச் 2024: 

  • மார்ச் 2024 இல், இந்தியாவின் புவியியல் குறியீடு (ஜிஐ) பதிவேட்டில் அசாம், உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இருந்து 22 புதிய தயாரிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த தயாரிப்புகள் இப்போது GI குறிச்சொல்லின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
  • TPSC GK NOTES : 22 புதிய புவிசார் குறியீடு இந்தியா மார்ச் 2024

கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் :

  • கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
  • தமிழக அரசு 1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணக்கர்களுக்கு காலையில் உணவு வழங்க முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை  15.09.2022  அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

“ககன் சக்தி”2024: 

  • இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவப்பயிற்சியான “ககன் சக்தி” ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் ஏப்ரல் 1 அன்று தொடங்கியுள்ளதுஇந்த பயிற்சி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும்.
  • இப்பயிற்சியில் விமானப்படையின் அனைத்து முக்கிய போர் விமானங்களும், நவீன ஹெலிகாப்டர்களும் தங்களது தாக்கும் திறனை வெளிப்படுத்தி வருகின்றன.
  • கடைசியாக இந்த “ககன் சக்தி” போர் பயிற்சி 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய காசநோய் அறிக்கை 2024:

  • இந்திய அரசின் முயற்சிகளால் 2015 ஆம் ஆண்டு முதல் காசநோய் பாதிப்பு சுமார் 16% சதவீதமும் (ஒவ்வோர் ஆண்டும் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன) மற்றும் காச நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சுமார் 18% சதவீதமும் குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சுமார் 2.3 லட்சம் கண்டறியப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத பதிவுகள் இருந்தன என்ற நிலையில், இது அதற்கு முந்தைய ஆண்டில் 3.2 லட்சமாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.
  • அரசாங்கத்தின் Ni-kshay என்ற இணைய தளமானது அனைத்து வகை காசநோய் நோயாளிகளையும் கண்காணித்து வருவதையடுத்து இந்த இடைவெளியானது பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 25.5 லட்சம் பாதிப்புகளில் 33% அல்லது 8.4 லட்சம் பாதிப்புகள் தனியார் துறையினால் பதிவு செய்யப்பட்டவை.
  • இதனை ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டில் தனியார் துறையில் சுமார் 1.9 லட்சம் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • முந்தைய ஆண்டில் 27.4 லட்சமாக இருந்த காசநோய்ப் பாதிப்பு ஆனது, 2023 ஆம் ஆண்டில் 27.8 லட்சமாக சற்று அதிகரித்துள்ளது.
  • சமீபத்தியத் தரவுகளின்படி, நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆனது 3.2 லட்சமாக இருந்தது.
  • இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த காசநோய் உயிரிழப்பு ஆனது, 2022 ஆம் ஆண்டில் 3.31 லட்சமாகக் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் முந்தைய மதிப்பீட்டு முறையின் படி மேற்கொள்ளப்பட்ட பல தரவுகளின் படி சுமார் 29.4 லட்சமாக இருந்த ஓராண்டில்
  • பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 27.4 லட்சமாகக் குறைந்துள்ளது.
  • காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் மார்ச் 24 அன்று கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபாா்க்க  ‘------------’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியது ?

A) நான் அல்ல நாம்” என்ற வலைதளம்

B) நிதி கண்காணிப்பு முறைமை வலைதளம்.
C) மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்
D) இந்தியாவின் தேசிய போர்டல்

ANS : C) மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!