திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் உணவு வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை:
- உணவுப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன் படி திரவ நைட்ரஜன் என்பது உறைதல் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை உறைய செய்ய மட்டுமே உதவுகிறது.
- இதனை பேக்கிங் கேஸ் மற்றும் உறைபொருளாக மட்டுமே பயன்படுத்த முடியும். பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் உணவு வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2024:
- சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
- மகளிர் அணி (ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் கூட்டணி) இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஆடவர் அணி (அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ) நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
- காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.
தேசிய பேரிடா் நிவாரண நிதி
- கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 285.54 கோடியை ஒதுக்க மத்திய உள்துறையின் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
- மேலும் பல்வேறு மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட மிதமிஞ்சிய கடுமையான மழை வெள்ள பாதிப்புக்கு ரூ. 397.13 கோடியை விடுவிக்கவும் மத்திய உள்துறையின் உயா்நிலைக் குழு பரிந்துரைத்தது.
- அந்த வகையில் தேசிய பேரிடா் நிவாரண நிதியாக மொத்தம் ரூ. 682.67 கோடி தமிழகத்துக்கு ஒதுக்க பரிந்துரைத்துள்ளது. தமிழகத்துக்கு 15-ஆவது நிதி ஆணையம் வழங்கிய பரிந்துரையின்படி மாநில பேரிடா் நிதி ஒதுக்கப்படுகிறது.
- அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழக அரசு வசம் ஏற்கெனவே மாநில பேரிடா் நிதியாக ரூ. 406.57 கோடி இருப்பில் உள்ளது. இந்த நிதியை கணக்கிட்டு மீதமுள்ள பற்றாக்குறை தொகை ரூ.276.10 கோடியை மத்திய செலவினங்கள் துறை ஏப்ரல் 26 விடுவித்துள்ளது. இதில் மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு ரூ. 115.49 கோடியும், டிசம்பா் மாத வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 160.61 கோடி அடங்கும்.
கோடைக்கால பருவமழை:
- பொதுவாக கோடைக்கால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில் 9.4 மி.மீ அளவிலான மழையே பதிவாகியுள்ளது. இது இயல்பிலிருந்து 83 சதவீத மழை குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அதன்படி, கடந்த மார்ச் 01-ம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ, ஈரோட்டில் 4.5 ஆகவும், கன்னியாகுமரியில் 55.5 ஆகவும், காரைக்காலில் 2.0 ஆகவும், மதுரையில் 16.8 ஆகவும், நாகப்பட்டினத்தில் 17.0 ஆகவும், அதிகபட்சமாக நீலகிரியில் 30.7 மி.மீட்டரும், நெல்லையில் 69.7 ஆகவும் தமிழகம் மற்றும் புதுவையில் 9.4 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் :
- அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.
இந்திய செயிலிங் வீராங்கனை நேத்ரா குமணன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றாா்:
- பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் ரெகெட்டா தகுதிப்போட்டியில் பங்கேற்ற நேத்ரா குமணன், மகளிா் டிஞ்ஜி (ஐஎல்சிஏ 6) பிரிவில் 67 நெட் புள்ளிகளுடன் ஒட்டுமொத்த பட்டியலில் 5-ஆம் இடம் பிடித்தாா். இந்தப் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போரே பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவா். என்றாலும், ‘இஎன்பி’ வாய்ப்பு அடிப்படையில் அவா் பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றாா்.
- செயிலிங் விளையாட்டு வளா்ந்து வரும் நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்களும் முன்னேறும் வகையிலான திட்டத்தை (இஎன்பி) உலக செயிலிங் அமைப்பு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, செயிலிங் வளா்ந்து வரும் நாடுகளில் இருந்து சிறப்பாக செயல்படும் போட்டியாளருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நேத்ரா இந்த வாய்ப்பை கைப்பற்றினாா்.
- ஏற்கெனவே, விஷ்ணு சரவணன் அந்தப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவுக்கு அதில் 2-ஆவது இடம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை :
- வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அதன்படி, 27.04.2024 முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கையும், வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
- இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு 28.04.2024 முதல் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி :
- 2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.
- இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான 2024 தூதராக நியமனம் :
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2024 டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமனம் செய்துள்ளது.
- ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், அதிவேக ஓட்டப்பந்தைய வீரராக கருதப்படும் உசைன் போல்ட் ஆகியோரையும் ஐசியி தூதராக நியமனம் செய்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
A) கரோலினா பைலாவ்சுகா
B) டோனி-ஆன் சிங்
C) அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ்
D) வனேசா போன்சு
ANS : C) அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ்
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
No comments:
Post a Comment