APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -24.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -24.04.2024


பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டில் (2023) அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடுகளின் பட்டியல்:

  • பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடுகளின் பட்டியலில் 4-ஆவது இடத்தில் இந்தியா இருப்பதாக ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
  • பாதுகாப்புத் துறைக்காக கடந்த ஆண்டில் 8,360 கோடி டாலா் இந்தியா செலவிட்டுள்ளது. இது 2022 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் செலவிட்ட நிதியை விட முறையே 4.2 மற்றும் 44 சதவீதம் அதிகம் என அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கான மொத்த பட்ஜெட்டில் அவற்றின் பங்கு 80 சதவீதமாகும். 
  • பாதுகாப்புத் தளவாடங்களுக்கான கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 22 சதவீதமாகத் தொடா்ந்தது. அவற்றில் 75 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் கொள்முதலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது முன்னெப்போதும் இல்லாத நிதி ஒதுக்கீடாகும். கடந்த 2022-இல் அதற்கான நிதி 68 சதவீமாக இருந்தது. தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியாவின் இலக்கை இது பிரதிபலிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ‘தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக உலக அளவில் பாதுகாப்புத் துறைக்கான செலவினம் அதிகரித்து 2.44 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டில் அமெரிக்கா செலவிட்ட நிதி 91,600 கோடி டாலராகும். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 2.3 சதவீதம் அதிகம். பாதுகாப்புத் துறைக்கான செலவில் 29,600 கோடி டாலருடன் சீனா இரண்டாவது இடத்திலும், 10,900 கோடி டாலருடன் ரஷியா மூன்றவாது இடத்திலும் உள்ளன

மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டி :
  • விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டி  (22.04.2024) நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படும். 
  • ழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ்கூவாகம் அழகி போட்டி நடைபெற்றது.
  • மிஸ் கூவாகம் அழகி போட்டியில் உதவி மருத்துவரான ரியா முதல் இடத்தை தட்டிச் சென்றார்.

வன விலங்குகளின் தாகம் தீர்க்க “பொது மக்களின் பங்களிப்பு” 
  • விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஓசூர் வனக்கோட்டத்தில் வனத் துறை சார்பில் 70 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. இத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி நிரப்பி வருகின்றனர்.
  • மேலும், பொதுமக்கள் பங்களிப்புடன் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிறந்த நாள் கொண்டாடுவோர் மற்றும் குடும்ப விழா நடத்துவோர், வன உயிரினங்களுக்குத் தண்ணீர் வழங்கி உதவிட வேண்டும் என வன உயிரின பாதுகாவலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, ரூ.1,500 செலுத்தி ஒரு டிராக்டர் தண்ணீரை ( 5 ஆயிரம் லிட்டர் ) வன உயிரினங்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் துணைவேந்தராக:
  • 100 ஆண்டுகளுக்குப் பிறகு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU)  முதல் பெண் துணைவேந்தராக நைமா கட்டூன் (Naima Khatoon) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னதாக 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேகம் சுல்தான் ஜஹான் என்ற பெண் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவா் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வரையாடு கணக்கெடுப்பு 2024 :
  • நீலகிரி வரையாடு திட்டத்தின் கீழ் தமிழகம், கேரள வனப்பகுதிகளில் 4 புலிகள் காப்பகங்கள், 14 வனக் கோட்டங்களில் முதல்முறையாக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய 3 நாட்கள் வரையாடு கணக்கெடுப்பு நடக்கிறது.
  • வரையாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிய வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள், கடந்த 2023-ம் ஆண்டுமுதல் நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Gaia BH3: பால்வீதியில் உள்ள மிகப் பெரிய நட்சத்திர கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது:
  • நமது விண்மீன் மண்டலமான பால்வீதியில் மிகப் பெரிய நட்சத்திர நிறை கருந்துளையை பாரிஸில் உள்ள Observatoire de Paris இல் உள்ள தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (CNRS) வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
  • Gaia BH3 என்று பெயரிடப்பட்ட இந்த கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அக்விலா விண்மீன் தொகுப்பில் உள்ளது.இது சூரியனை விட 33 மடங்கு நிறை கொண்ட பால்வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது நமது கிரகத்திற்கு இரண்டாவது மிக அருகில் உள்ள கருந்துளை ஆகும். 
  • ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கியா விண்கலத்தின் தரவுகளை ஆய்வு செய்த பின்னர் இந்த கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கருந்துளைக்கு அருகில் "wobbling" நட்சத்திரத்தை கண்டறிந்து அதன் இருப்பை உறுதிப்படுத்தியது.

புவிசார் குறியீடு:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களால் ஒரு கருத்தை நிரூபிக்க விற்கப்பட்ட காசியின் புகழ்பெற்ற ‘திரங்கி பர்ஃபி’ என்ற மூவர்ண இனிப்பு வகைக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது, மேலும் உத்தரப் பிரதேசத்தை சார்ந்த ஐந்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  1. பனாரஸ் உலோக வார்ப்பு கைவினைப் பொருள்,
  2. லக்கிம்பூர் கெரி தாரு பூவேலைப்பாடுகள்,
  3. பரேலி கரும்பு மற்றும் மூங்கில் கைவினைப் பொருள்,
  4. பரேலி சர்தோசி கைவினைப் பொருள், மற்றும்
  5. பில்குவா கை அச்சு வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் துணிகள்.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஆறு பொருள்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 75 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளது உத்தரப் பிரதேசம். இதன்மூலம் அதிக புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது.

இரண்டாவது இடத்தில் 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்த நாடுகளின் பட்டியலில் ------------ இடத்தில் இந்தியா இருப்பதாக ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது ?

A) 1-ஆவது

B) 2-ஆவது

C) 3-ஆவது  

D) 4-ஆவது  

ANS : D) 4-ஆவது  



நடப்பு நிகழ்வுகள் 2024


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!