APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -23.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -23.04.2024


இந்தியர்களுக்கான புதிய ஷெங்கன் விசா விதிகள்

  • ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஏதுவாக நீண்ட காலம் செல்லுபடியாகும் மல்டிபிள் என்ட்ரி ஷெங்கன் விசாவிற்கு இப்போது இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 
  • அதாவது இந்தியர்களுக்கு விசா வழங்க காஸ்கேட் என்ற புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறுகிய காலம் தங்க விசா வேண்டி விண்ணப்பிப்போருக்கு இந்த காஸ்கேட் ரூல்ஸ் கீழ் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ப்ராஜெக்ட் நிம்பஸ்

  • ப்ராஜெக்ட் நிம்பஸ் எனப்படும் இஸ்ரேலிய அரசாங்கத்துடனான 1.2 பில்லியன் டாலர் கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிராகப் போராடியதன் எதிரொலியாக 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
  • ப்ராஜெக்ட் நிம்பஸ் என்பது இஸ்ரேலுக்கும் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் அமேசானுக்கும் இடையேயான  $1.2 பில்லியன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) ஒப்பந்தமாகும்.
  • ப்ராஜெக்ட் நிம்பஸ், இஸ்ரேலிய நிதி அமைச்சகம் ஏப்ரல் 2021 அன்று அறிவித்தது.

ஒப்பந்தம்:

  • மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சி-டாட் மற்றும் ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஆகியவை "5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு, தொலைத்தொடர்பு தயாரிப்புகள், வணிகமயமாக்கல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் (டி.டி.டி.எஃப்) கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • 5ஜி போன்ற நெட்வொர்க்கில் உருவாக்கப்பட்ட தொடர்ச்சியான தகவல்களைப் பயன்படுத்தி தானியங்கி நெட்வொர்க் மேலாண்மை, தவறு கண்டறிதல் மற்றும் குறைபாடுகள் கண்டறியும் தொழில் நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

பத்ம விபூஷண் விருது:
  • கலைத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பத்ம விபூஷண் விருது வழங்கினார். 
  • திரு ஆர்.என்.ஜோ டி குரூஸ், திரு சேஷம்பட்டி தீர்த்தகிரி சிவலிங்கம் ஆகியோருக்கு முறையே இலக்கியம், கல்வி மற்றும் கலைத் துறைகளில் சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. 
  • விருது பெற்ற இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

குறை தீர்க்கும் மாதம் -வருமான வரித்துறை கடைப்பிடிக்கிறது:
  • 2024,ஏப்ரல் 22 முதல் மே 22 வரை “குறை தீர்க்கும் மாதமாக”  வருமான வரித்துறை கடைப்பிடிக்கிறது. இந்த மாதத்தில், சிபிகிராம் (CPGRAM) மற்றும் இ-நிவாரண் (E-Nivaran) மூலம் இணைய வழியாகவும் மற்றும் பிற முறைகளின் மூலமாகவும், வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
  • இது சம்பந்தமாக, இணையவழி மூலமாகக் குறை தீர்ப்பதைத் தவிர, வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் விரும்பினால், தங்கள் எல்லைக்குட்பட்ட மதிப்பீட்டு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
  • ஏப்ரல் 24, 2024 முதல் மே 22, 2024 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10:30 மணி முதல் மதியம் 01:30 மணி வரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைப் பெற்று, அவற்றுக்கு தீர்வுகாண வகை செய்யப்பட்டுள்ளது.  இந்த வசதியை தற்போதுள்ள ஆன்லைன் குறை தீர்க்கும் செயல்முறையுடன் கூடுதலாக 2024, ஏப்ரல் 24, மே 1,8,15,22 ஆகிய தேதிகளில் பெறலாம்.


ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் :

ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக மாறி யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார். 

  • ஐபிஎல் தொடரில் முதலில் 50 விக்கெட்டுகள் - ஆர்பி சிங் (12 ஏப்ரல் 2010) 
  • ஐபிஎல் தொடரில் முதலில்100 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா (18 மே 2013) 
  • ஐபிஎல் தொடரில் முதலில்150 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா (6 மே 2017) 
  • ஐபிஎல் தொடரில் முதலில் 200 விக்கெட்டுகள் - யுஸ்வேந்திர சஹால் (22 ஏப்ரல் 2024)

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

ப்ராஜெக்ட் நிம்பஸ் என்பது இஸ்ரேலுக்கும் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களான ------------- இடையேயான சர்ச்சைக்குரிய $1.2 பில்லியன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) ஒப்பந்தமாகும். ?

A) கூகுள் மற்றும் அமேசான்

B) மெட்டா மற்றும் அமேசான்

C)  மெட்டா மற்றும் கூகுள்  

D) மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள்  

ANS : A) கூகுள் மற்றும் அமேசான்


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!