உலக புவி நாள் 2024 :
- ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22-ம் தேதி உலக புவி தினமாக கொண்டாடப்படுகிறது. 1970 முதல் புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புவியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், மாசடைவதைத் தடுக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படப்படுகிறது.
- இந்த நாளை சிறப்பாக்கும் வகையில் உலகின் தேடுபொறி தளமான கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை உருவாக்கி மக்களின் தனிக்கவனத்தை ஈர்த்துள்ளது. இயற்கையின் 6 வெவ்வேறு புகைப்படங்களை காட்சிப்படுத்தும் வகையில் உருவாக்கி அதில் கூகுள் என்ற எழுத்து எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்களுக்குமான விளக்கத்தையும் கூகுள் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது:
- தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20 % வாக்குப்பதிவும், அதேசமயம் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் 72.29% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதைவிட குறைந்த அளவே (69.72%) வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களவைத் தோ்தல் வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தில்: 1. கள்ளக்குறிச்சி - 79.21 2. தருமபுரி - 81.20 3. சிதம்பரம் - 76.37 4. பெரம்பலூா் - 77.43 5. நாமக்கல் - 78.21 6. கரூா் - 78.70 7. அரக்கோணம் - 74.19 8. ஆரணி - 75.76 9. சேலம் - 78.16 10. விழுப்புரம் - 76.52 11. திருவண்ணாமலை - 74.24 12. வேலூா் - 73.53 13. காஞ்சிபுரம் - 71.68 14. கிருஷ்ணகிரி - 71.50 15. கடலூா் - 72.57 16. விருதுநகா் - 70.22 17. பொள்ளாச்சி - 70.41 18. நாகப்பட்டினம் - 71.94 19. திருப்பூா் - 70.62 20. திருவள்ளூா் - 68.59 21. தேனி - 69.84 22. மயிலாடுதுறை - 70.09 23. ஈரோடு - 70.59 24. திண்டுக்கல் - 71.14 25. திருச்சி - 67.51 26. கோவை - 64.89 27. நீலகிரி - 70.95 28. தென்காசி - 67.65 29. சிவகங்கை - 64.26 30. ராமநாதபுரம் - 68.19 31. தூத்துக்குடி - 66.88 32. திருநெல்வேலி - 64.10 33. கன்னியாகுமரி - 65.44 34. தஞ்சாவூா் - 68.27 35. ஸ்ரீபெரும்புதூா் - 60.25 36. வட சென்னை - 60.11 37. மதுரை - 62.04 38. தென் சென்னை - 54.17 39. மத்திய சென்னை - 53.96
கேண்டிடேட் செஸ் தொடர் 2024 :
- உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவில் நடந்தது.
- டொரண்டோ நகரில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் நகமுராவுடன் குகேஷ் மோதினார்.
- நகமுராவுடன் மோதிய போட்டி டிரா ஆனதால் 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று குகேஷ் சாம்பியன் ஆனார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
- இதேபோல் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் துடுப்புப் படகுப் போட்டிக்கு தகுதி பெற்றார் பல்ராஜ் பன்வார்:
- தென்கொரியாவின் சன்ங்ஜுவில் (ஏப். 21) நடைபெற்ற உலக ஆசிய சமுத்திர ஒலிம்பிக் தகுதிச் சுற்று துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் பல்ராஜ் பன்வார் 3-வது இடம் பிடித்தார். அவர் பந்தய தூரமான 2000 மீட்டரை 7:01.27 நிமிடங்களில் கடந்து அசத்தினார்.இதன்மூலம், ஒலிம்பிக்கில் துடுப்புப் படகுப் போட்டிக்கான தனக்கான இடத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
- 25 வயதான பல்ராஜ் பன்வார் கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் முதன்முறையாக களம்கண்டு 4-வது இடம் பிடித்து அசத்தினார்.
- ஜூலை 26-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 2024 மக்களவைத் தோ்தலில் ------தொகுதியில் 81.20 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது ?
A) கள்ளக்குறிச்சி
B) தருமபுரி
C) சேலம்
D) நாகப்பட்டினம்
ANS : B) தருமபுரி
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024