தமிழ் புத்தாண்டு 2024:
- தமிழர்களின் புத்தாண்டான சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு 2024 ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழ் ஆண்டுகளில் 38வது ஆண்டாக உள்ள குரோதி ஆண்டு பிறந்துள்ளது.
- ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.
- சூரிய மேச இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை:
- செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 2002 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சத்து ஹெக்டோ் பரப்பளவிலான ஈரமான முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
- கடந்த 2001 முதல் 2022 வரை இந்தியாவில் உள்ள காடுகள் ஆண்டுக்கு 5.1 கோடி டன் அளவிலான கரியமில வாயுவை உமிழ்ந்துள்ளன. இதே காலகட்டத்தில் 14.1 கோடி டன் அளவிலான கரியமில வாயு நீக்கப்பட்டது. இதன்மூலம் ஆண்டுக்கு மொத்தம் 8.9 கோடி டன் அளவிலான கரியமில வாயு சேமிக்கப்பட்டுள்ளது.
- உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எஃப்ஏஓ) வெளியிட்ட தரவுகளில், ‘ கடந்த 2015 முதல் 2020 வரை இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
- நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே 2.மிஸோரம், 3.அருணாசல பிரதேசம், 4.நாகாலாந்து, 5.மணிப்பூா் ஆகிய மாநிலங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் - ஈரான் போர்:
- இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என எச்சரித்த நிலையில் இன்று(ஏப்.,14) காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது.
- சரக்கு கப்பல் சிறைபிடிப்பு: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், வளைகுடா பகுதியில் சென்ற, இஸ்ரேலுக்கு சொந்தமான 'எம்.சி.எஸ்.ஏரிஸ்' என்ற சரக்கு கப்பலை, ஈரான் படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பலில் இருப்பவர்களில், 17 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. 'இந்த பிராந்தியத்தில் தேவையில்லாத பதற்றத்தை ஈரான் உருவாக்கி வருகிறது. நிலைமை மோசமடைந்தால், அதற்காக ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
- ஈரானை தவிர்த்த விமானங்கள் :மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், ஈரான் வான்வழியை, 'ஏர் இந்தியா' உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் தவிர்த்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் விமானங்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால், பயண நேரம் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் வரை அதிகமாவதாக கூறப்படுகிறது. பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும், மேற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.
'ஆப்பரேஷன் மேக்துாத்'-40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன:
- உலகின் மிகவும் உயர மான போர்க்களம் என அறியப்படும் சியாச்சினில், நம் ராணுவம் முகாம் அமைத்து, 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இமயமலைத் தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரம் உலகின் மிக உயர்ந்த ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலம் ஆகும்.
- 'ஆப்பரேஷன் மேக்துாத்' கடல் மட்டத்தில் இருந்து, 18,875 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதியை, 1984 ஏப்., 13ல், 'ஆப்பரேஷன் மேக்துாத்' என்ற பெயரில், நம் ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர்:
- ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த கோபி தொடக்குரா விண்வெளிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். இதன் மூலம் விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து உள்ளது.
- 30 வயதாகும் கோபி தொடக்குரா, விஜயவாடாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
- அட்லாண்டா நகரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் -25 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளார். அவருடன் 5 பேர் சுற்றுலா செல்ல உள்ளனர்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கையின் படி நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் ------------- முதலிடத்தில் உள்ளது?
A) மிஸோரம்
B) அருணாசல பிரதேசம்
C) நாகாலாந்து
D) அஸ்ஸாம்
ANS: D) அஸ்ஸாம்