APRIL 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL -17.04.2024

TNPSC PAYILAGAM
By -
0

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -17.04.2024


திருவனந்தபுரம் விமான நிலையம் புதிய சாதனை:

  • கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் (மார்ச்) 2024 வரையிலான கால கட்டங்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 4.4 மில்லியன் (44 லட்சம்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். 
  • இதேபோல் விமான சேவையிலும் சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆயிரத்து 213 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

தூய்மை இருவாரவிழா 2024:

  • தூய்மை இருவாரவிழா 2024-ஐ, (2024 ஏப்ரல் 16 முதல் 30 வரை) நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமங் நருலா இன்று தொடங்கி வைத்தார். இந்த அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
  • இந்தக் காலகட்டத்தில், அமைச்சகத்தின் நிலுவையில் உள்ள அனைத்து கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை அகற்றப்படும். பழைய, காலாவதியான மின்னணு மற்றும் பிற பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஏலம் விடப்படும்.
  • மேலும், இந்த இருவாரவிழாவின் போது தில்லியில் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் ஒன்றில், பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் செயல்திறன் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்படுகிறது.
  • தூய்மை அளவுகோல்களில் சிறந்த இடத்தைப் பெறும் முதல் மூன்று பிரிவினருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் பரிசுகளை வழங்குவதுடன் இருவாரவிழா 2024 ஏப்ரல் 30 அன்று நிறைவடையும்.

51வது தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி 2024 :

  • மத்தியப் பிரதேச கேரம் சங்கம் நடத்தும் 51வது தேசிய கேரம் சாம்பியன்ஷிப் மகளிர் இறுதிப் போட்டியில் மூன்று முறை உலக சாம்பியனான ரஷ்மி குமாரி 25-8, 14-20, 25-20 என்ற செட் கணக்கில் கே நாகஜோதியை தோற்கடித்தார்
  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) தலைமை மேலாளராகப் பணிபுரிந்த ராஷ்மிக்கு இது 12வது தேசிய மகளிர் ஒற்றையர் பட்டமாகும்.
  • ஆடவர் இறுதிப் போட்டியில் எஸ் ஆதித்யாவை 25-0, 19-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆடவர் பட்டத்தை கே ஸ்ரீனிவாஸ் கைப்பற்றினார். ஏழு ஒயிட் ஸ்லாம்களை நிறைவேற்றி, போட்டியில் சிறந்து விளங்கிய ஸ்ரீனிவாஸுக்கு இது நான்காவது தேசிய ஆண்கள் ஒற்றையர் பட்டமாகும்.

இந்தியாவின் முதல் 'ஹைபிரிட் பிட்ச்' தரம்சாலா:

  • ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA)  பிசிசிஐ-அங்கீகரிக்கப்பட்ட முதல் அதிநவீன 'ஹைப்ரிட் ஆடுகளத்தை' நிறுவியுள்ளது 
  • 20 மற்றும் 50-ஓவர் போட்டிகளுக்கு ICC ஆல் அங்கீகரிக்கப்பட்ட 5% பாலிமர் ஃபைபருடன் இயற்கையான தரையை ஒருங்கிணைக்கிறது

மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு:

  • மூளைக்காய்ச்சலுக்கான உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த புதிய தடுப்பூசியை (Men5CV) அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக நைஜீரியா மாறியுள்ளது
  • புதிய Men5CV தடுப்பூசியானது மெனிங்கோகோகல் பாக்டீரியாவின் (A, C, W, Y மற்றும் X) ஐந்து முக்கிய விகாரங்களுக்கு எதிராக  பாதுகாக்கிறது.

இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பு

  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பினை (IndOOS) மீண்டும் செயல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளன.
  • இது வானிலை முன்னெச்சரிக்கைகளுக்காக உயர் தெளிவுத் திறன் கொண்ட கடல் சார் மற்றும் வளிமண்டலத் தரவுகளைச் சேகரிப்பதற்காக வேண்டி தொலைதூர கடல் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள 36 பிணைக்கப்பட்ட மிதவை சாதனங்களின் வலை அமைப்பாகும்.
  • இந்த மிதவைச் சாதனங்களானது, ஆப்பிரிக்க-ஆசிய-ஆஸ்திரேலியப் பருவமழைப் பகுப்பாய்வு மற்றும் கணிப்பு (RAMA) திட்டத்திற்கான ஆராய்ச்சிக்காக பிணைக்கப் பட்ட மிதவைச் சாதனங்களின் தொடரமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன.
  • பல்வேறு புயல் எச்சரிக்கைகள், பல்வேறு புயல் உருவாக்க எச்சரிக்கைகள், பருவமழை முன்னறிவிப்புகளுக்கான பல்வேறு கட்ட ஆரம்பச் சூழ்நிலைகள் மற்றும் பருவநிலை முன்னறிவிப்புகள், சுனாமி எச்சரிக்கைகள் மற்றும் மிக தீங்கு விளைவிக்கும் பாசிப் பெருக்கத்தினைக் கண்டறிதல் போன்ற செயல்பாடு சார்ந்தச் சேவைகளுக்கு இதன் கண்காணிப்பு முடிவுகள் அவசியமாகும்.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

எந்த இந்திய மைதானம் பிசிசிஐ-அங்கீகரிக்கப்பட்ட முதல் 'ஹைப்ரிட் பிட்ச்' மைதானமாக மாறியது?

A) இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) ஸ்டேடியம்

B) சென்னை சேப்பாக்கம் மைதானம்

C)வான்கடே மைதானம், மகாராஷ்டிரா

D) ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ

ANS : A) இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) ஸ்டேடியம்




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!