CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 05.12.2024 )

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL DECEMBER 2024 ( 05.12.2024 )


விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக விருது:

  • இந்திய வர்த்தகம், தொழில் கூட்டமைப்பு (FICCI) சார்பில், டெல்லியில் நடைபெற்ற 14-வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் வழங்கப்பட்ட இந்திய விளையாட்டு விருதுகளில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை அங்கீகரித்து விருதை வழங்கியது.


மாநில திட்டக்குழு துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்:

  • மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன், மல்லிகா சீனிவாசன், ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோரும் உள்ளனர்.


ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம் -13,000 இதழ்களை உயர்க் கல்வி பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இலவசமாக படிக்க முடியும்:

  • ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபல ஆராய்ச்சி இதழ் களை இலவசமாகவே மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படிக்க முடியும். 
  • குறிப்பாக நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் ‘எல்ஸ்வீர்’, ஜெர்மனியில் இருந்து வெளிவரும் ‘ஸ்பிரின்ஜர் நேச்சர்’, விலே போன்ற 13,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை டிஜிட்டல் தளத்தில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், உயர்க் கல்வி நிறுவனங்கள் படிக்க முடியும். 
  • இதன் மூலம் 18 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


நம்பிக்கையில்லா தீர்மானம்: 

  • பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
  • இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார். 
  • இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர். 
  • நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் பதவியை பார்னியர் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்றுள்ளது:

  • 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
  • ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டம்  04.12.2024 நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரிட்சை நடத்தியது. 
  • இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் எதிரணியை அடுத்தடுத்து கோல் மழைப் பொழிந்து திணறடித்தனர். இந்திய அணியில் அரைஜித் சிங் ஜண்டல் 4 கோல்கள் அடித்து பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். தில்ராஜ் சிங் ஒரு கோல் அடித்தார். 
  • பாகிஸ்தான் அணியினர் மொத்தம் 3 கோல்கள் அடித்தனர். இதன் மூலம், இந்திய அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.


வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024:

  • வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 ஆகஸ்ட் 9, 2024 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • TNPSC EXAM KEY NOTES : The Banking Laws (Amendment) Bill, 2024- DETAILS IN TAMIL

த்ரிஷ்டி-10 ட்ரோன்:

  • இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை அதானி டிபென்ஸ் நிறுவனம் விநியோகித்துள்ளது.
  • ராணுவத் தளவாட தயாரிப்பில் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் திருஷ்டி-10 ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா விமான (ட்ரோன்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் ட்ரோன் இந்திய கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2-வது டிரோன் தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது.
  • இந்நிலையில் 3-வதாக தயாரித்த ட்ரோனை, கடற்படைக்கு இரண்டாவது முறையாக வழங்கியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன் 32 ஆயிரம் அடிக்கு மேல் தொடர்ந்து 48 மணி நேரம் வரை பறக்கும் திறனுடையது. இதில் 450 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். சவாலான இடங்கள், வானிலை ஆகியவற்றிலும், இந்த ட்ரோனை இயக்க முடியும். திருஷ்டி-10 டிரோன், இஸ்ரேலின் ஹெர்மெஸ் 900 ட்ரோனுக்கு நிகரானது. இது வானில் பறப்பதற்கான தரச் சான்றிதழை நேட்டோவின் ஸ்டாநாக் 4671 என்ற அமைப்பு வழங்கியுள்ளது.


ராணுவத்தில் ரூ.21,772 கோடி  நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ஒப்புதல் :

  • கடற்படை பயன்பாட்டுக்கு 31 வாட்டர் ஜெட் அதிவேக படகுகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சில் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. 
  • கடலோர பகுதிகளில் போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்ல 120 அதிவேக படகுகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • விமானப்படையில் உள்ள சுகோய் போர் விமானங்களில் ஜாமர் மற்றும் ரேடார் போன்ற எலக்ட்ரானிக் பாதுகாப்பு கருவிகளை பொருத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • கடலோர காவல் படைக்கு 6 நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • தரைப்படையில் உள்ள டி-72 மற்றும் டி-90 டேங்க்குகள், கவச வாகனங்கள் மற்றும் சுகோய் போர் விமானங்களின் இன்ஜின் ஓவர்ஹாலிங் பணிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!