இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம்
- அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே இரண்டு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- இதன்படி தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தனது ஆயுதக் குழுக்களை விலக்கிக் கொள்ளும். இதுபோல் இஸ்ரேலும் அங்கிருந்து தனது படைகளை திரும்பப் பெறும். தெற்கு லெபனானில் அந்நாட்டு ராணுவ வீரர்களும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள்.
- அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும். ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் 2023 போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்த நிலையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம்:
- என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.
- மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த வசதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
- கடல் மட்டத்திலிருந்து 3,400 மீட்டர் உயரத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபடும் நிலையில், நாள் ஒன்றுக்கு 80 கிலோ ஜிஹெச்-2 உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எரிபொருள் நிலைய திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளில் நிறைவடைந்தாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் லே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உமிழ்வு இல்லாத போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய இயற்கை பாதுகாப்புக் குறியீட்டெண்- 2024 :
- உலகளாவிய இயற்கை பாதுகாப்புக் குறியீட்டெண்- 2024 முதல் முறையாக, நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான கோல்ட்மேன் சோனென்ஃபெல்ட் பள்ளி, இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகம், பயோடிபி.காம் ஆகியவற்றால் அண்மையில் வெளியிடப்பட்டது.
- நில மேலாண்மை, பல்லுயிர் பெருக்கத்திற்கான அச்சுறுத்தல்கள், திறன் மற்றும் ஆளுமை, பருவநிலை மாற்ற தணிப்பு ஆகியவற்றில் இந்தியாவின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 176 வது இடத்தைப் பெற்றுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பயிற்சி :
- வன்கொடுமை தடுப்பு சட்டம், விதிகள் தொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ‘சமத்துவம் காண்போம்’ என்ற பெயரிலான இந்த பயிற்சியை சென்னை எழும்பூரில் அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், விதிகளை அனைத்து நிலை அலுவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விரிவான பயிற்சி அளிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை வழக்குகளை கையாள்வதில் அனுபவம் பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
கலாம் 4 ஏவுகணை சோதனை வெற்றி :
- அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை அழித்தது.
அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது :
- இந்திய கடற்படையை விரிவாக்கம் செய்வதற்காக, ‘திட்டம் 66’ என்ற பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுபோல ‘திட்டம் 77’ என்ற பெயரில் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வங்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.
- இந்த திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது. பாரம்பரிய உந்துவிசை அமைப்புகளுக்கு அதிநவீன மாற்றாக விளங்கும் பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் ஏற்கெனவை பிரான்ஸின் பாராகுடா வகை நீர்மூழ்கியில் செயல்பட்டு வருகிறது. இது நீர்மூழ்கிகள் எழுப்பும் ஒலியின் அளவைக் குறைக்கிறது. இதன்மூலம் கப்பலின் அமைதியான மற்றும் எதிரிகளின் கவனத்தை ஈர்க்காமல் செயல்படும் திறன் அதிகரிக்கும்.
- இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள நீர்மூழ்கிகள் மிகவும் சப்தமற்றவையாக மாறும். இதனால் எதிரிகளால் இதன் இருப்பிடத்தை அறிய முடியாது. மேலும் நீர்மூழ்கிகளுக்கான சூழ்ச்சித் திறனை அதிகரிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இது இந்திய கடற்படையின் நீருக்கடியிலான போர் திறனை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..