CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (24.11.2024 to 25.11.2024 )

TNPSC PAYILAGAM
By -
0



அரசியலமைப்பின் முகப்புரையில் 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்தது:

  • 1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் முகப்புரையில் 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் பின்னோக்கிய விண்ணப்பத்துடன் சேர்க்கப்பட்டதை எதிர்த்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, 25.11.2024 தனது தீர்ப்பினை வழங்கியது.
  • “அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 368-ன் கீழ், அரசியல் சாசன முன்னுரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற பதங்கள் சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அரசியல் சாசன முன்னுரையில் திருத்தம் மேற்கொள்ள பிரிவு 368 அதிகாரம் அளிக்கிறது. இந்த பிரிவின் கீழ் அரசியல் சாசனத்தின் முன்னுரையிலும்கூட திருத்தம் மேற்கொள்ள முடியும். எனவே, அரசியல் சாசன முன்னுரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் செல்லும்.” என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


ஜிஎஸ்டி வரி வசூல்:

  • சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.9% அதிகம். 
  • இந்நிலையில், சிஏஜி எனப்படும் இந்திய தணிக்கை மற்றும் கணக்குழு சார்பில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தமிழகத்தில் 2024-25ம் ஆண்டின் முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூல் கடந்தாண்டை விட 20.12 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோல், குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 14 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா 13.46 சதவீதமும், கர்நாடகா 10 சதவீதமும் மாநில ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.


சிஏஜி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியல்:

(மாநிலம் 2024-25ம் ஆண்டின் (முதல் பாதி) - 2023-24ம் ஆண்டின் (முதல் பாதி) -வளர்ச்சி)
  1. தமிழ்நாடு  35,414 கோடி  29,481 கோடி 20.12%
  2. மகாராஷ்டிரா 78,179 கோடி 68,899 கோடி 13.46%
  3. குஜராத் 31,903 கோடி 27,976 கோடி 14.03%
  4. உத்தரபிரதேசம் 74,230 கோடி 64,909 கோடி 14.35%
  5. கர்நாடகா 44,096 கோடி 39,840 கோடி 10.68%

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2022 :

  • அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2022 மதிப்பீட்டின்படி, நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதன்படி, 2014-ல் 2226 ஆகவும், 2018-ல் 2,967 ஆகவும் இருந்த புலிகள் எண்ணிக்கை 3,682 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 6% என்ற வீதத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • இந்த கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு 76 புலிகளும், 2010-ல் 163, 2014-ல் 229, 2018-ல் 264, 2022-ல் 306 ஆக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • வேட்டையாடுதல்,  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில், 2021 முதல் 2024 வரையிலான காலத்தில் 5 புலிகள் இறந்துள்ளதாக மக்களவையில் இன்று  கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.


சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ - ICA) பொதுச் சபைக் கூட்​டம் :  ( ICA Global Conference 2024):

  • 2024 நவம்பர் 25 முதல் 30 வரை டெல்​லி​யில், சர்வதேச கூட்டுறவு கூட்டணி (ஐசிஏ - ICA-International Cooperative Alliance ) பொதுச் சபைக் கூட்​டத்​தை​யும் உலகளாவிய கூட்டுறவு மாநாட்​டை​யும் இந்தியா நடத்த உள்ளது. 
  • ஐசிஏ-​வின் 130 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை​யாக, இந்தியா அதன் அமைப்​பாளராக செயல்பட உள்ளது. இந்த நிகழ்வு மிக முக்​கி​யத்துவம் வாய்ந்​தது. ஏனெனில் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ம் ஆண்டை ஐ.நா. அறிவித்​துள்ள நிலை​யில் இது நடைபெறுகிறது. 
  • ஐசிஏ பொதுச் சபைக் கூட்​டத்​தை​யும் உலகளாவிய மாநாட்​டை​யும் இந்தியா நடத்துவது கூட்டுறவு இயக்​கத்​தில் நமது தேசத்​தின் தலைமைக்​குக் கிடைத்த உலகளாவிய அங்கீ​காரம் ஆகும்.
  • அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி கடந்த நூற்​றாண்​டில் ரூ.100 கோடி லாபத்தை அடைந்​துள்ளது. அது மட்டுமல்​லாமல், ரூ.6,500 கோடிக்கு மேல் வைப்புத்​தொகை​யை​யும் இது கொண்​டுள்​ளது. கூட்டுறவு இயக்​கத்​தின் வெற்றிகரமான உதாரணமாக அமுல் திகழ்​கிறது. அமுல் நிறு​வனத்​தின் ஆண்டு வர்த்​தகம் ரூ.80,000 கோடியை எட்டி​யுள்​ளது.
  • கூட்டுறவு நிறுவனங்களை தற்சார்புடையதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவதே 'கூட்டுறவின் மூலம் வளம்' என்ற தொலைநோக்குப் பார்வையின் நோக்கமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

Centre for Human-Centric AI :

  • ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், ‘மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை’த் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள மனித ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது.
  • தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.
  • செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய கவலையாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.
  • இம்மையத்தின் நோக்கம் மூன்று பரிமாணங்களை மையமாகக் கொண்டிருக்கும். மனித ஆற்றலை மேம்படுத்துதல், மக்களைப் பாதுகாத்தல், கலாச்சாரம்- பாரம்பரியத்தின் மூலம் பொதிந்துள்ள சமூக மதிப்பைப் பெருக்குதல்.


ஏஐ தொழில்நுட்பத்துக்கு (Artificial Intelligence (AI) Readiness) மாறுவதில் இந்தியா முன்னிலை:

  • செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 73 பொருளாதாரங்களின் தரவுகளின் அடிப்படையில் பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (BCG-Boston Consulting Group) அறிக்கை,  AI specialists - இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தையும், AI தொடர்பான காப்புரிமைகளில் வலுவான தளத்துடன் ஆராய்ச்சி வெளியீடுகளில் (AI Research publications) மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
  • ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, பின்டெக், சாப்ட்வேர், வங்கி ஆகிய துறைகளின் செயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. சுமார் 30 சதவீத இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரி்த்துக் கொண்டுள்ளன.


குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள்:

  • குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனம் ஆஸ்தான் நான்கானா சாஹிப்பில் கடந்த நவம்பா் 14-ஆம் தேதி தொடங்கியது.
  • இந்த நிகழ்வை முன்னிட்டு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ. 55 சிறப்பு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. 
  • நாணயத்தின் ஒரு பக்கம் குருத்வாரா ஜனம் அஸ்தான் நான்கானா சாஹிப் கல்வெட்டுகளும், மறுபுறம் பிறை மற்றும் நட்சத்திரத்துடன் உருது மொழியில் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு எனப் பொறிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் முதல் 24மணி நேர ஆன்லைன் நீதிமன்றம்:

  • நாள் முழுவதும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில்  செயல்பாட்டுக்கு வந்தது.
  • நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர்நீதிமன்றம், கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கி வைத்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தின் இதர டிஜிட்டல் சேவைகளை தொடங்கிவைத்தனர். 
  • இந்த ஆன்லைன் நீதிமன்றம்  21.11.2024 செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நீதிமன்றத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். வழக்குப்பதிவு, வழக்கு அனுமதி, ஆஜராவது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.


AroTrack நீர் மாசு கண்டறிதல் கருவி:

  • நீர் மாதிரிகளில் உள்ள பீனால் அல்லது பென்சீன் போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுக்களைக் கண்டறிவதற்கான மலிவு மற்றும் கையடக்கக் கருவியை பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி பாம்பே) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 
  • இந்த சாதனத்திற்கு AroTrack என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் கழிவுகளை கட்டுப்பாடற்ற வெளியேற்றத்தின் காரணமாக அதிகரித்து வரும் நீர் மாசுபாட்டின் பின்னணியில் நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மை முயற்சிகளுக்கு உதவும்.


அபி கோய் பஹானா நஹி ("#AbKoiBahanaNahi")-பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழித்தல் தொடர்பான தேசிய இயக்கம் :

  • மத்திய பெண்கள்- குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி  (25.11.2024) புதுதில்லி ஆகாஷவாணி அலுவலகத்தில் உள்ள ரங் பவனில் அபி கோய் பஹானா நஹி ("#AbKoiBahanaNahi") என்ற தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் . 
  • பாலின அடிப்படையிலான வன்முறைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், அரசு, சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் இந்த இயக்கம், ஐநா ஆதரவுடன் நடத்தப்படுகிறது. 
  • இது பெண்கள்- குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையிலான 'நயி சேத்னா 3.0 இயக்கத்துடன்' இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது. 
  • பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பை பரவலாக பரப்புவதை உறுதி செய்வதற்காக, இது நடத்தப்படுகிறது.
  • உலகளவில், ஒவ்வொரு ஆண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 முதல் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை, பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 16 நாட்கள் செயல்பாட்டு இயக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு, நோ எக்ஸ்கியூஸ் (#NoExcuse) என்ற ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இது நடத்தப்படுகிறது.

சிறந்த கடல்சார் மாநில விருது 2024:

  • இந்தியாவில் சிறந்த மீன் பிடிப்பிற்காக வழங்கப்படும் விருதான சிறந்த கடல்சார் மாநில விருதினை கேரளா வென்றுள்ளார்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN OUR TELEGRAM CHANNEL :




FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!




Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!