Tuesday, May 7, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.05.2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 07.05.2024


 இ பாஸ் :

  • நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, கோடை காலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
  • இதனால், சுற்றுலா வருவோரின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், அவர்களின் விபரங்கள், வருகை, புறப்பாடு, வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி, இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அதன்படி, இன்று முதல் epass.tnega.org என்ற இணைய முகவரியில் இ பாஸ் விண்ணப்பிக்கும் நடைமுறையை சுற்றுலா பயணியர் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நடைமுறை 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்


பாகிஸ்தான் - இலவச யோகா :

  • பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதை பராமரிக்கும் அமைப்பான, தலைநகர் வளர்ச்சி ஆணையம், அங்கு உள்ள பாத்திமா ஜின்னா பூங்காவில் இலவச யோகா வகுப்புகளை துவக்கிஉள்ளது.
  • இந்தியா உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக ஐ.நா. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி அங்கீகரித்தது. முன்னதாக, சா்வதேச யோகா தினத்தை நிறுவுவதற்கான வரைவு தீா்மானம் இந்தியவால் முன்மொழியப்பட்டு, 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.


இந்தியாவின் பொதுத் தேர்தலைக் காண உலகளாவிய பிரதிநிதிகள் குழு  வருகை : 

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியத்திற்கு இணங்க, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின்  ஒரு பகுதியாக,  நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024ன் அளவு மற்றும் அந்தஸ்துக்கு ஏற்ப, பூட்டான், மங்கோலியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஃபிஜி, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, மால்டோவா, துனிசியா, செஷெல்ஸ், கம்போடியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, ஜிம்பாப்வே, பங்களாதேஷ், கஜகஸ்தான், ஜார்ஜியா, சிலி, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் நமீபியா ஆகிய  23 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இந்தியாவின் பொதுத் தேர்தல்களைக் காண இந்தியா வந்துள்ளனர்.
  • தேர்தல் அமைப்புகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பூட்டான் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த ஊடகக் குழுக்களும் பங்கேற்கின்றன.
  • பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு தொகுதிகளில் தேர்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிடுவார்கள். இந்த நிகழ்ச்சி 2024 மே 9 ஆம் தேதி முடிவடையும். இந்தத் திட்டம் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் தேர்தல் முறையின் நுணுக்கங்களையும், இந்தியத் தேர்தலில் சிறந்த நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தும்.

'தாமினி' செயலி :

  • மின்னலின் சரியான இடம் மற்றும் இருக்கும் இடத்தின் அடிப்படையில், 40 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் மின்னல் வர வாய்ப்பு உள்ள பகுதிகளும், அதன் அசைவு மற்றும் திசையை இந்த செயலியில் அறியலாம்.
  • இருக்கும் இடத்தின், 20 கிலோமீட்டர் சுற்றளவில் மின்னலுக்கு வாய்ப்பிருந்தால், 45 நிமிடங்களுக்கு முன், இந்த செயலி எச்சரிக்கை செய்யும்.
  • இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் இந்த செயலியை வெளியிட்டு உள்ளன. புனேயில் உள்ள ஐ.ஐ.டி.எம்., மத்திய செயலாக்க அலகு உடன் இணைத்து, ஜி.பி.எஸ்., உதவியுடன், நாட்டில் 48க்கும் அதிகமான மையங்களில் உள்ள 'லைட்டனிங் லொகேஷன்' பயன்படுத்தி இந்த செயலி செயல்படுகிறது.
  • கடந்த, 2018 நவ., மாதம் இச்செயலி வெளியிடப்பட்டு இருந்தாலும், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டதால் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செயலியை, இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.


ஐ.நாவில் இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் : 

  • ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர அமைப்பு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை இணைந்து ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்துடன்  இணைந்து  மே 3 அன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையக செயலக கட்டிடத்தில் ஏற்பாடு செய்த சிபிடி57 துணை நிகழ்வில் ( CPD57 Side Event ) இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  
  • "நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்: இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகிறார்கள்" (Localizing the SDGs: Women in Local Governance in India Lead the Way)  என்ற தலைப்பில்  நடந்த இந்த  கூடுகையில், திரிபுராவைச் சேர்ந்த திருமதி சுப்ரியா தாஸ் தத்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி குனுகு ஹேமா குமாரி, ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி நீரு யாதவ் ஆகிய மூன்று புகழ்பெற்ற பெண் பிரதிநிதிகளின் பயனுள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. 
  • இவர்கள் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பல கருப்பொருள் பகுதிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதில் தங்களது அனுபவங்களையும் புதுமைகளையும் பகிர்ந்து கொண்டனர். குழந்தை திருமணங்களை எதிர்த்துப் போராடுவது முதல் சுகாதாரம், கல்வி, வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவது வரை, இந்த பெண்கள் அடித்தட்டு அளவில் தலைமையின் உருமாறும் சக்தியை எடுத்துக்காட்டினர். அவர்கள் தங்கள் தலைமைத்துவ பயணத்தில் எதிர்கொண்ட மற்றும் கடந்து வந்த சவால்கள் மற்றும் போராட்டங்களை வெளிப்படுத்தினர்.


‘KAVACH’-புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ‘KAVACH’  திட்டங்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்துவதற்காக, RailTel Corporation of India Limited (RailTel) மொஹாலியை (பஞ்சாப்) சார்ந்த Quadrant Future Tek Limited இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • ‘KAVACH’  என்பது இந்திய ரயில்வேயின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு / ரயில் பாதுகாப்பு (automatic train protection (ATP)) அமைப்பாகும். இது ஜூலை 2020 இல் ரயில்வே அமைச்சகத்தால் "தேசிய ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு முறையாக" (National ATP System) ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்தியாவின் முதல் உள்நாட்டு ராணுவ தர ஆளில்லா  குண்டுவீச்சு விமானம்:
  • Flying Wedge Defense 200B (FWD-200B) என்ற பெயரில் இந்தியாவின் முதல் உள்நாட்டு ராணுவ தர ஆளில்லா  குண்டுவீச்சு விமானத்தை (Unmanned Combat Aerial Vehicle (UCAV)) பெங்களூருவைச்  சார்ந்த Flying Wedge Defense and Aerospace Technologies Private Limited அறிமுகம் செய்துள்ளது. 

வைட்லி தங்க விருது 2024 (Whitley Gold Award 2024):
  • அஸ்ஸாமைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் பூர்ணிமா தேவி பர்மனுக்கு, வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சரால் (Whitley Fund for Nature (WFN)) வைட்லி தங்க விருது 2024 (Whitley Gold Award 2024) என்ற 'பசுமை ஆஸ்கார்' (Green Oscar) விருது லண்டனில் நடந்த ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டி விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது.
  • டாக்டர் பூர்ணிமா தேவி  அவர்களின், அழிந்து வரும் பெரிய நாரை (Greater Adjutant Stork ) (உள்ளூரில் அசாமிய மொழியில் 'ஹர்கிலா' (Hargila) என்று அழைக்கப்படுகிறது) மற்றும் அதன் ஈரநில வாழ்விடத்தை பாதுகாக்கும் முயற்சிகளை இந்த விருது அங்கீகரித்துள்ளது. . 'ஹர்கிலா பைடேயு (நாரைகளின் சகோதரி)' என்று அழைக்கப்படும் பூர்ணிமா தேவி, பெரிய நாரைகளைக் (Greater Adjutant Stork ) காப்பாற்றுவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக வடகிழக்கு இந்தியாவில்  பெரிய நாரைகளின் எண்ணிக்கை 40 லிருந்து 1800 ஆக பெருகியுள்ளது.  

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


‘KAVACH’  என்பது  ?

A)  தானியங்கி விமானம் மோதல் தவிர்ப்பு அமைப்பு

B)  தானியங்கி கப்பல் மோதல் தவிர்ப்பு அமைப்பு

C)  தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு

D)  தானியங்கி சாலை போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பு

ANS : C)  தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு







No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: