Monday, May 6, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.05.2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.05.2024


PUCC 2.0 மென்பொருள் : 

  • வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கான PUCC 2.0 (Pollution under control certificate (PUCC)) என்ற புதிய மென்பொருளை மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் (State Transport and Road Safety Commissionerate)  அறிமுகப்படுத்தியுள்ளது
  • இதன் மூலம், இந்தியாவில் மாசுக் கட்டுபாடு சான்றிதழ் பெற PUCC 2.0செயலியை அறிமுகப்படுத்திய மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சுமாா் 534 மாசு உமிழ்வு பரிசோதனை மையங்கள் கொண்ட தமிழகத்தில் இந்த நடைமுறை மே 6 முதல் அமல்படுத்தப்படுகிறது.


கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் :

  • தமிழ்நாட்டில் முதல்முறையாக, இரண்டு கைகளையும் இழந்த சென்னையைச் சேர்ந்த தான்சென் என்ற இளைஞருக்கு கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ்  வழங்கப்பட்டுள்ளது. 


UPI  போன்ற கட்டண முறையை உருவாக்குவது தொடர்பாக இந்தியா - நபீபியா ஒப்பந்தம் : 

  • இந்தியாவின் தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் (National Payments Corporation of India (NPCI))  சர்வதேச பணபரிவர்த்தனை லிமிடெட்( International Payments Limited (NIPL))  மற்றும்  நமீபியா குடியரசின் மத்திய வங்கியான நமீபியா வங்கியுடன் (Bank of Namibia (BoN))  UPI  போன்ற ஒரு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.    
  • இந்த கூட்டாண்மை மூலம், நமீபியா வங்கி  அந்நாட்டில்  ஒரு வலுவான டிஜிட்டல் தளத்தை உருவாக்க, NIPL இலிருந்து தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவுக்கான அணுகலைப் பெறும்.


ZiG-புதிய நாணயம் 

  • ஜிம்பாப்வே நாட்டில் நீண்டகாலமாக நிலவும் கரன்சி நெருக்கடிக்கு மத்தியில் ZiG (ஜிம்பாப்வே தங்கத்தின் சுருக்கம்) என்ற புதிய நாணயத்தை ஜிம்பாப்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இது மின்னணு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்படுவது இது ஆறாவது முறையாகும்.


முதல் பல்நோக்கு (வெப்பம் மற்றும் சக்தி) பச்சை ஹைட்ரஜன் பைலட் திட்டம்

  • SJVN லிமிடெட் இந்தியாவின் முதல் பல்நோக்கு (வெப்பம் மற்றும் சக்தி) பச்சை ஹைட்ரஜன் பைலட் திட்டத்தை ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஜாக்ரியில் உள்ள 1,500 மெகாவாட் நாத்பா ஜாக்ரி நீர் மின் நிலையத்தில் துவக்கியுள்ளது. இத்திட்டம் பச்சை ஹைட்ரஜன் மற்றும் 25 kW எரிபொருள் செல் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்.    


நிலவின் தென் துருவ ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் “சாங்'இ-6” (Chang'e-6): 

  • நிலவின் இருண்ட பகுதிக்கு அதாவது நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்கான, “சாங்'இ-6” விண்கலம் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்வாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்8 என்ற ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
  • சந்திரனின் தென் துருவத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் இந்த திட்டம், நிலவு ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சி என்று சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மிதக்கும் சூரிய தொழில்நுட்பம்:

  • இந்திய நீர்மின் நிறுவனம் ( (National Hydroelectric Power Corporation Limited), ஒரு புதிய வகை மிதக்கும் சூரிய தொழில்நுட்பத்தை சோதிக்க நார்வே நிறுவனமான Ocean Sun AS உடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. 
  • இந்த தொழில்நுட்பம் நெகிழ்வான, மிதக்கும் தளங்களில் வைக்கப்படும் சோலார் பேனல்களைப் பயன்படுத்துகிறது. 
  • NHPC மற்றும் Ocean Sun ஆகியவை சூரிய சக்தியை உருவாக்க NHPC தேர்ந்தெடுத்த இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராயும்.


ஐக்கிய நாடுகள் சபையின் முதல் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure) மாநாடு, 'குடிமக்கள் ஸ்டாக்: 

  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, குடிமக்களுக்கான உருமாறும் தொழில்நுட்பம்'  (Citizen Stack: Digital Public Infrastructure, Transformative Technology for Citizens) என்ற தலைப்பில்  அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில்  இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது.  இந்த மாநாடு இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) கட்டமைப்பை உலகளாவிய தரநிலையாக அறிமுகப்படுத்தியது.
  • இந்த மாநாடு, இந்தியாவின் நிரந்தர மிஷன் (Permanent Mission of India) மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), iSPIRT அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.
  • இந்தக் கூடுகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ், G20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் காணொளி மூலமாகக் கலந்துகொண்டனர். 


உலகின் மிக ஆழமான நீல துளை:

  • உலகின் மிக ஆழமான நீல துளை ”Taam Ja’ Blue Hole (TJBH)” மெக்சிகோவில் யுகடன் தீபகற்பத்தில் உள்ள செட்டுமல் விரிகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய அளவீடுகள் TJBH குறைந்தது 1,380 அடி (420 மீட்டர்) கடல் மட்டத்திற்கு கீழே நீண்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் மிக ஆழமான நீல துளையாக தென் சீனக் கடலில் உள்ள சான்ஷா யோங்கிள் ப்ளூ ஹோல் (டிராகன் ஹோல் என்றும் அழைக்கப்படுகிறது) 390 அடி (119 மீட்டர்)  கருதப்பட்டது. 

நீல துளைகள் (Blue Holes) :

  • நீல ஓட்டைகள் (Blue Holes) நீர் நிரப்பப்பட்ட செங்குத்து குகைகள் அல்லது சுண்ணாம்பு, பளிங்கு அல்லது ஜிப்சம் போன்ற கரையக்கூடிய அடிபாறையுடன் கடலோரப் பகுதிகளில் காணப்படும் மூழ்கும் துளைகள் ஆகும்.
  • மேற்பரப்பு நீர் பாறை வழியாக ஊடுருவி, தாதுக்களைக் கரைத்து விரிசல்களை விரிவுபடுத்தும் போது அவை உருவாகின்றன, இறுதியில் பாறை இடிந்து விழும்.
  • நீல துளைகள் பொதுவாக புதிய, கடல் அல்லது கலப்பு வேதியியலின் அலை தாக்கம் கொண்ட நீரைக் கொண்டிருக்கின்றன மற்றும் நீரில் மூழ்கிய குகைப் பாதைகளுக்கு அணுகலை வழங்கலாம். 


நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் சந்திரயான்-3 ஆய்வில் கண்டுபிடிப்பு : 

  • இந்தியாவினால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களை இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வு செய்ததில் நிலவின்துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
  • மேலும், வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு, தென் துருவப் பகுதியை விட 2 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.  
  • நிலவின் தென் துருவப் பகுதிகளில் சுமார் 38,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட வாயுக்கள் வெளியேற்றம், இந்த பனிக்கட்டிகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையே இஸ்ரோவின் தற்போதைய ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.


மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு:

  • மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-ஐ இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority (IRDAI)) ரத்து செய்துள்ளது.
  • இந்த உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை 1 ஏப்ரல் 2024 முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது என்று IRDAI தெரிவித்துள்ளது.
  • முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை எடுக்க முடியும். ஆனால், புதிய நடைமுறைபடி, வயது வித்தியாசமின்றி யாா் வேண்டுமானாலும் புதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.


கிராண்ட் மாஸ்டர் 2024 :

  • இந்திய செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு கிராண்ட் மாஸ்டர் (GrandMaster(GM)) பட்டத்தை  சர்வதேச செஸ் கூட்டமைப்பு (International Chess Federation(FIDE)) அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
  • பிரக்னாநந்தாவின் சகோதரியான இவர், உலகின் முதல் கிராண்ட் மாஸ்டர் சகோதர-சகோதரி ஜோடி எனும் பெருமையைப் பெற்றுள்ளனர். 
  • 84வது இந்திய GM மற்றும் சர்வதேச அளவில் 42வது பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் இந்திய அளவில்  கோனேரு ஹம்பி (2002) மற்றும் ஹரிகா துரோணவல்லி (2011) ஆகியோருக்குப் பிறகு GM ஆன 3வது இந்தியப் பெண் வைஷாலி ரமேஷ்பாபு ஆவார்.

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கான PUCC 2.0 (Pollution under control certificate (PUCC)) என்ற புதிய மென்பொருளை  -------------- ஆணையரகம்  அறிமுகப்படுத்தியுள்ளது  ?

A) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையரகம்

B) மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்  

C) மத்திய போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்  

D) மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ANS : B) மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்  





No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: