Wednesday, May 1, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.05.2024

TODAY CURRENT AFFAIRS IN TAMIL -01.05.2024


சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது:

  • கடந்த ஏப்ரல்-2024 மாதத்தில் மட்டும் ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல்-2023 மாதத்தைவிட 12.4 சதவிகிதம் அதிகமாகும். 
  • மேலும், மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிக்கப்பட்ட பிறகு நிகர லாபமாக ரூ. 1.92 லட்சம் கோடி இருக்கும் எனவும், இது கடந்தாண்டைவிட 17.1 சதவிகிதம் வளர்ச்சி என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 
  • மத்திய சரக்கு மற்றும் சேவை வரி - ரூ. 43,846 கோடி 
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி- ரூ. 53,538 கோடி 
  • ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி - ரூ. 99,623 கோடி 
  • செஸ் வரி - ரூ. 13,260 கோடி 
  • சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில், அதிக வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையகள் 2024:

  • உலகில் மிகப்பெரிய ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள இந்தியாவில், அதிக வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.
  • ரயில்வே துறையில் 2023-24 நிதியாண்டின் வருவாய் குறித்த தகவலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரயில்வே மண்டலும் தங்களது ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
  • இதில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில், ஐந்து ரயில் நிலையங்களுடன் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக நான்கு ரயில் நிலையங்களுடன் கேரளம் உள்ளது, அதே நேரத்தில் கர்நாடகத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் வருவாய் ஈட்டும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,216 கோடி வருவாயுடன் முதலிடத்திலும், ரூ.564 கோடியுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. கோயம்புத்தூர் ரயில் நிலையம் மூன்றாவது அதிக வருவாய் ஈட்டும் நிலையமாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் ரூ.324.99 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் தரவுகள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம் ரூ.262.67 கோடி வருவாய் ஈட்டி நான்காவது இடத்திலும், தாம்பரம் ரூ.233.67 கோடி, எர்ணாகுளம் ரூ.227.59 கோடி வருவாய் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. மதுரை ரூ.208.74 கோடி, கோழிக்கோடு ரூ.178.95 கோடி, மங்களூரு ரூ.166.89 கோடி மற்றும் திருச்சூர் ரூ. 155.70 கோடி. இந்த பட்டியலில் திருச்சி பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
  • தெற்கு ரயில்வே 2023-24 நிதியாண்டில், தெற்கு ரயில்வேயின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.12,020 கோடி. பயணிகளிடம் இருந்து ரயில் பயண கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரயில் கட்டணம் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடி மற்றும் மற்றும் ரூ. 570 கோடி மற்றும் ரூ. 624 கோடி மற்ற பயிற்சி வருவாய் மற்றும் பல்வேறு வருவாய்கள் ரூ.570 கோடி மற்றும் ரூ. 624 கோடி பல்வேறு வருவாய்கள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அளவுக்கு முந்தைய நிதியாண்டை விட 10 சதவிகிதம் அதிகம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபை கூட்டம்

  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சார்பில் மே 3-ம் தேதி “நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மையமாக்குதல்: இந்திய வளர்ச்சிக்கு வழிகாட்டும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பெண்கள்” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக மூன்று பெண்களை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
  • இதில் திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சுப்ரியா தாஸ் தத்தாவும் ஒருவர் ஆவார்.

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு :

  • இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அண்மையில் எட்டியது. இருந்தும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலமான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் தங்க முதலீடு மற்றும் ஆபரணம் என நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் தங்கத்தின் தேவை 136.6 டன்களை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 126.3 டன்களாக தங்கத்தின் தேவை நாட்டில் இருந்துள்ளது. நகர பகுதிகளுக்கு நிகராக கிராமங்களிலும் தங்கத்தின் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில்,முதல் இடத்தை பிடித்துள்ளது

A) சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

B) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

C) கோயம்புத்தூர் ரயில் நிலையம்

D) திருவனந்தபுரம் ரயில் நிலையம்

ANS : B) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: