Sunday, May 12, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.05.2024 - 12.05.2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.05.2024 - 12.05.2024


இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநர் :

  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர். லட்சுமிகாந்த் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ராவ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிகளில் ஒழுங்குபடுத்துதல், வங்கிகளின் மேற்பார்வை, நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 
  • இவர் சென்னை ரிசர்வ் வங்கியில் வங்கி குறைதீர்ப்பாளராகவும், லக்னௌவில் உத்தரப் பிரதேசத்தின் மகானா இயக்குநராகவும் பணியாற்றினார். பல குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 
  • செயல் இயக்குநராக, ராவ் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன், தகவல் உரிமைச் சட்டம் (எஃப்ஏஏ), தகவல் தொடர்புத் துறை ஆகியவற்றைக் கவனிக்க உள்ளார்.


மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன:

  • தேர்தல் ஆணையத்தின் 07.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக் குறிப்பு மற்றும் 08.05.2024 தேதியிட்ட செய்திக் குறிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நடப்பு 2024 பொதுத் தேர்தலில் 93 தொகுதிகளில் நடந்த  மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • மூன்றாம் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.89  சதவீதத்தினரும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதத்தினரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 25.2 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
  • 3 ஆம் கட்டத்திற்கான மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும்  வாக்குப்பதிவு விவரங்கள்  கொடுக்கப்பட்டுள்ளன.  பீகாரில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், மத்திய பிரதேசத்தில் நான்கு வாக்குச்சாவடிகளிலும் மூன்றாம் கட்டத் தேர்தலின்  மறுவாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை:

  • 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 43.15 சதவீதமும், கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை 5.38 சதவீதமும் உயா்வைக் கண்டுள்ளதாகவும் ‘மக்கள்தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு: நாடு தழுவிய பகுப்பாய்வு (1950-2015)’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதன்படி, நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை, கடந்த 1950 - 2015 காலகட்டத்தில் 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது. 
  • அதேநேரம், கடந்த 1950-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் 9.84 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 14.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. அவா்களின் எண்ணிக்கையில் இது 43.15 சதவீத உயா்வாகும்.
  • மேற்கண்ட காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதமாகவும், சீக்கியா்களின் எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது. இவை முறையே 5.38%, 6.58% அதிகரிப்பாகும்.
  • சமண மதத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாகவும், பாா்சி மதத்தினரின் எண்ணிக்கை 0.03 சதவீதத்தில் இருந்து 0.004 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இவை முறையே 20, 85 சதவீத குறைவாகும்.

மேகாலய மாநிலத்தின் முதல் பெண் (காவல்துறைத் தலைவா்) டிஜிபி:
  • மேகாலய மாநிலத்தின் முதல் பெண் (காவல்துறைத் தலைவா்) டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி இடாஷிஷா நோங்ராங் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். 
  • மேகாலய மாநில முதல்வா் கான்ராட் கே சங்மா தலைமையிலான மேகாலய பாதுகாப்பு ஆணையம், நோங்ராங்கை காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதவிக்குத் தோ்வு செய்ததாக உள்துறை மூத்த அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா். மத்திய பணியாளா் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) கடந்த மாதம் பரிந்துரைக்கப்பட்ட மூன்று அதிகாரிகளில் நோங்ராங்கை தோ்வு செய்துள்ளனா்.

புற்றுநோயை உண்டாக்கும் இரசாயன எத்திலீன் ஆக்சைடு :
  • இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு (EtO) மாசுபடுவதைச் சமாளிக்க இந்திய மசாலா வாரியம் சமீபத்தில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 
  • MDH மற்றும் எவரெஸ்ட் போன்ற பிரபலமான இந்திய மசாலா பிராண்டுகளின் விற்பனைக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் விதித்த தடைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயன எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது.
  • எத்திலீன் ஆக்சைடு :இது முதன்மையாக மருத்துவ உபகரணங்களை கிருமி நீக்கம் செய்வதற்கும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படும் ஒரு நிறமற்ற வாயு.

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்:

  • பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்க வழிவகுக்கும் தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பொதுச் சபையின் அரபு நாடுகள் குழு ‘ஐ.நா. பொதுச் சபையில் புதிய உறுப்பினருக்கு அனுமதி’ என்ற தலைப்பில் தீா்மானத்தை தாக்கல் செய்தது. குழுவுக்கு தலைமை வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் அந்தத் தீா்மானத்தைக் கொண்டுவந்தது.
  • 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தீா்மானத்துக்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன.மிகப் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் தீா்மானத்தை ஆதரித்ததால் அது பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் மேற்கு ஆசியாவில்தான் பேசி முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதால் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்ததாக அமெரிக்கா கூறியது.
  • பாலஸ்தீனத்தை முழு ஐ.நா. உறுப்பினராக்கும் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. பாலஸ்தீன மக்களின் பிரதநிதியாக பிஎல்ஓ அமைப்பை கடந்த 1974-ஆம் ஆண்டு இந்தியா அங்கீகரித்து. அத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய முதல் அரபு அல்லாத நாடு இந்தியாவாகும். அதே போல், 1988-லும், 1996-இலும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகாரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.அந்தக் கொள்கையின் தொடா்ச்சியாகவே, இந்தத் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.


கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை:

  • கேரள மாநிலத்தில் அரளிப்பூவை மென்றுதின்ற இளம்பெண் சூர்யா சுரேந்தர் உயிரிழந்ததையடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளிப் பூக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து அரளி செடியின் தழைகளைத் தின்ற பசுவும், கன்றும் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. அரளி இலை மற்றும் பூ விஷத்தன்மை கொண்ட தாவரம் என்பதை மருத்துவ நிபுணர்களும் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளிப் பூக்களைப் பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது.


”PS4 engine” :

  • 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ”PS4 engine” எனப்படும் திரவ ராக்கெட் எஞ்சினை  (3D-printed liquid rocket engine) வெற்றிகரமாக சோதித்து இஸ்ரோ (Indian Space Research Organisation (ISRO))  சாதனை படைத்துள்ளது. 
  • பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle (PSLV))  ராக்கெட்டின் மேல் நிலையில் பிஎஸ்4 இன்ஜின் (PS4 engine)   பயன்படுத்தப்படுகிறது. 
  • நைட்ரஜன் டெட்ராக்சைடு மற்றும் மோனோ மெத்தில் ஹைட்ரேசின் கலவையை எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் இயந்திரம் செயல்படுகிறது, இது பூமியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும்போது இயந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரோவின் ஒரு பகுதியான லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டர் (எல்பிஎஸ்சி) உருவாக்கியுள்ளது.


திருஷ்டி 10 ஸ்டார்லைனர் : 

  • இந்திய கடற்படையின் உளவு பணிக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் தயாரிக்கும் ஆர்டர் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த முதல் ‘திருஷ்டி 10 ஸ்டார்லைனர்’ என்ற ஆளில்லா உளவு விமானத்தை கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள அதானி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில்  நடந்தது.
  • இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் கலந்துகொண்டு ‘திருஷ்டி’ உளவு விமானத்தை தொடங்கி வைத்தார். இந்த உளவு விமானம் போர்பந்தர் எடுத்துச் செல்லப்பட்டு கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த விமானத்தில் நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளன. 36 மணி நேரம் பறக்கும் திறனுள்ளது. 450 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும், அனைத்து கால நிலைகளிலும் வானில் பறக்கும் திறனுள்ளது என அதானி ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • பாகிஸ்தானுடனான கடல் எல்லை மற்றும் உயர் கடல் பகுதிகளை கண்காணிக்க இந்திய கடற்படை  போர்பந்தரில் நிலைநிறுத்த உள்ளது. .

  

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:


எந்த மாநில கோயில்களில் அரளிப் பூக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது ?

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: