Monday, May 27, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 24.05.2024 - 27.05.2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 24.05.2024 - 27.05.2024


‘ரீமெல்’ புயல் 2024 :

  • வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே 26.05.24 நள்ளிரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்தபோது அடித்த சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் பலியாகினர்.
  • ஆண்டின் பருவமழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ரீமெல் உள்ளது. ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம். கடந்த மே 25-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் ‘ரீமெல்’ புயலாக வலுவடைந்தது.
  • இந்த புயலுக்கு ஓமன் நாடு அளித்த ரீமெல் என பெயரிடப்பட்டது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும்.


முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது:

  • அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. 
  • இது அகில இந்திய சராசரி சதவிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:

  • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, தேர்வு 2ஏ-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
  • குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 ஆம் தேதியும், குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதியும், குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
  • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ-இன் முதன்மைத் புதிய பாடத்திட்டமும் https://www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும், தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.


77 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா 2024:

  • கேன்ஸ் திரைப்பட விழாவில் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்திற்காக கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் இயக்குநர் பாயல் கபாடியா பெற்றுள்ளார்
  • ஒரு இந்திய பெண் இயக்குநரின் திரைப்படம் முக்கிய போட்டிப் பிரிவில் காட்சிப்படுத்தப்படுத்தப்படுவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஷாஜி என்.கருணின் "ஸ்வஹம்" என்ற திரைப்படம் தான் இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி இந்தியத் திரைப்படமாகும்.
  • கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, ’தி ஷேம்லெஸ்’ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான ’அன் செர்ட்டன் ரெகார்ட்’ பரிசை வென்றுள்ளார்
  • அனசுயா, தனது வெற்றியின் மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.


கோடை மழை :

  • தமிழகத்தில் கோடை மழை 26.05.2024 காலை வரை இயல்பை விட 28 % கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
  • தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் மே மாத முதல் வாரம் வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.


சூப்பர் பூமி

  • விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பூமியைப் போன்ற சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. 
  • சூரியக் குடும்பத்துக்கு அருகே, உயிர்கள் வாழ உகந்த வகையில் இந்த கிகம் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஓஐ-715பி என்று இந்த சூப்பர் பூமிக்கு அடையாளப் பெயர் சூட்டபப்ட்டுள்ளது. 
  • இது பூமியை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பதால் சூப்பர் பூமி என அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து 137 ஒலி ஆண்டுகள் தொலைவில்தான் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.


ஐபிஎல் 2024 :

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 26.05.2024 நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐபிஎல் 2024: விருதுகள்

  • சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 20 கோடி 
  • ரன்னர்(இரண்டாம் இடம்) - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 12.5 கோடி 
  • தொடர் நாயகன் - சுனில் நரைன்(கொல்கத்தா) - ரூ. 10 லட்சம் 
  • வளர்ந்து வரும் வீரர் - நிதீஷ் ரெட்டி(ஹைதராபாத்) - ரூ. 10 லட்சம் 
  • ஆரஞ்சு கேப் - விராட் கோலி(பெங்களூரு) - ரூ. 10 லட்சம் 
  • பர்பிள் கேப் - ஹர்ஷல் படேல்(பஞ்சாப்) - ரூ. 10 லட்சம் 
  • ஃபேண்டஸி வீரர் - சுனில் நரைன்(கொல்கத்தா) - ரூ. 10 லட்சம் 
  • அதிக சிக்ஸர்கள் - அபிஷேக் சர்வா(ஹைதராபாத்) - ரூ. 10 லட்சம் 
  • அதிக ஃபோர்கள் - டிராவிஸ் ஹெட்(ஹைதராபாத்) - ரூ. 10 லட்சம் 
  • அதிக ஸ்டிரைக் ரேட் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்(தில்லி) - ரூ. 10 லட்சம் 
  • சிறந்த கேட் - ரமந்தீப் சிங்(கொல்கத்தா) - ரூ. 10 லட்சம் 
  • ஃபேர் பிளே விருது - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 10 லட்சம் 
  • சிறந்த மைதானம் - ராஜீவ் காந்தி ஹைதராபாத் - ரூ. 50 லட்சம்

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயலுக்கு -------- நாடு அளித்த ரீமெல் என பெயரிடப்பட்டது.?


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: