Thursday, May 23, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 22.05.2024 - 23.05.2024


MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 22.05.2024 - 23.05.2024

வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது: தமிழக அரசு:

  • ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ரூ.270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், ரூ.139 கோடியில் பயறு பெருக்கத் திட்டம் போன்றவற்றால் இந்தியாவிலேயே தமிழகம், வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • பயிர்க் காபீட்டுத் திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 24 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 4,366 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர்ப்பாசன வசதி அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண் பல்கலைக்கழகத்தின் மூன்று புதிய வேளாண் கல்லூரிகளும் , ஒரு தோட்டக்கலை கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் 3,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 இலட்சம் ரூபாய்ச் செலவில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.
  • 137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-இல் 4.90 இலட்சம் ஏக்கரிலும், 2022-இல் 5.36 இலட்சம் ஏக்கரிலும் 2023-ஆம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 இலட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.
  • மூன்றாண்டுகளில் 100 கோடியே 25 இலட்சம் செலவில் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • ரூ.138 கோடியே 82 இலட்சம் செலவில் பயறு பெருக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,76,507 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • தென்னை சாகுபடி பரப்பை அதிகரித்திடும் திட்டத்தின் கீழ் ரூ.40.59 கோடி செலவில் 19,922 தென்னை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட 12,525 கிராம ஊராட்சிகளிலும் நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றி ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்துடன் கலைஞரின்அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2021-22-ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த மூன்றாண்டுகளில் ரூ.613.82 கோடியில் 7,725 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு 22,306 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும் 3,536 ஏக்கர் பரப்பளவில் பழமரக் கன்றுகளும் நடவு செய்யப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தரச் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 28,27,373 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • 2023-ஆம் ஆண்டில் மக்காச்சோளம் உற்பத்தி வீழ்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட சிறந்த ஆராய்ச்சித் திட்டங்களுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட SKOCH ஆர்டர் ஆப் மெரிட் விருது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் இயங்கும் சிறுதானிய மகத்துவ மையம் 2023-ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வழங்கும் சிறந்த சிறுதானிய மையத்திற்கான விருது. உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறைக்குப் புகழ் சேர்த்துள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பு:
  • பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் அறிவித்தன.
  • பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய நாடுகளிலுள்ள தங்கள் நாட்டுத் தூதா்களை இஸ்ரேல் திரும்ப அழைத்துள்ளது.

மாலத்தீவின் இறக்குமதிக்கான விலை: இந்தியா, சீனா உள்நாட்டு கரன்சிகளில் ஒப்புதல்:
  • மாலத்தீவு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலையை அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக மாலத்தீவு  தெரிவித்துள்ளது. 
  • இதன் மூலம் அந்நாடு ஆண்டுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மிச்சப்படுத்தும் என தெரிவித்துள்ளது. 
  • மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் முகமது சயீத், இந்தியாவின் உயர் ஆணையர் முனு மஹாவரை இரு வாரங்களுக்கு முன்பு சந்தித்து இறக்குமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 
  • அதே போல சீனாவின் வர்த்தக அமைச்சகம் மாலத்தீவு அதிபரின் கோரிக்கையை ஏற்று இறக்குமதிக்கான பணத்தை யுவானில் செலுத்த இரு நாள்களுக்கு முன்பாக அனுமதி அளித்துள்ளது. 
  • ஆண்டுதோறும் மாலத்தீவு 600 முதல் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை இந்தியா மற்றும சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.

2024 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் ஈவுகள்

  • 2023 ஆம் நிதியாண்டினை விட 2024 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து (PSBs) சுமார் 30 சதவீதம் கூடுதல் ஈவுகளை அரசாங்கம் பெறும்.
  • முந்தைய நிதியாண்டில் 13,804 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் ஈவுப் பங்கானது 2024 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 18,013 கோடியாக இருக்கும்.
  • இந்தக் கணக்கீடு ஆனது 15 சதவீதப் பங்குப் பங்கீட்டு வரியை கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதோடு அதுவும் அரசாங்கத்திற்கேச் செல்லும்.
  • 12 பொதுத் துறை வங்கிகளில், 10 வங்கிகள் பங்குகளை அறிவித்துள்ளன.
  • 2024 ஆம் நிதியாண்டில் அதிகப் பங்குகளை (முக மதிப்புடன் ஒப்பிடும் போது) செலுத்தும் முதல் நான்கு பொதுத் துறை வங்கிகள் - பாரத ஸ்டேட் வங்கி (SBI), பரோடா வங்கி (BoB), கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியனவாகும்.
  • சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது ஈவுப் பங்குகளை அறிவிக்கவில்லை.



நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

எந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலையை அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது ?


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: