ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரய்சி மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது:
- ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா்.
- நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தனா். அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டா் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இப்ராஹிம் ரய்சி மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரய்சி பலியான சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நேபாள அரசு மீது இன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா வெற்றி பெற்றார்:
- நேபாளத்தில் பிரதமா் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் வகித்து வந்த ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) தனது ஆதரவை கடந்த வாரம் திரும்பப் பெற்றது.
- நேபாள பிரதமராக 18 மாதங்களில் இன்று 4வது முறையாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை உறுதி செய்திரக்கிறார் பிரசண்டா.
GPT-4o” (GPT-4 omni) அறிமுகம் :
- ஓபன் ஏஐ நிறுவனம் அதன் ஜிபிடி லாங்குவேஜ் மாடலின் ‘ஜிபிடி-4o’ மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ChatGPT-யின் டெக்ஸ்ட், விஷுவல், ஆடியோ திறன் விரைந்து செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- இது அந்த நிறுவனத்தின் ப்ளேக்ஷிப் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஜிபிடி-4 ஆம்னி’ என சொல்லப்படுகிறது. அதையே சுருக்கமாக ‘ஜிபிடி-4o’ என ஓபன் ஏஐ டேக் செய்துள்ளது. முந்தையை மாடல்களை காட்டிலும் ஆடியோ மற்றும் விஷுவல் சார்ந்த தெளிவான புரிதலை மிக வேகமாக பெறுகின்ற திறனை இந்த புதிய வெர்ஷன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை :
- தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
- இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், காவல் துறையினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பிட்ட இடைவெளியில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை நடத்தப்படுகிறது.
- கடந்த ஆண்டு ‘சாகர் கவாச்’ ஒத்திகை தமிழக கடலோரப்பகுதிகளில் நடத்தப்பட்டது. மிக நீண்ட கடலோரப் பகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமம், தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள காவல்துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், காவல்துறையினரே பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:
Current Affairs Question and Answers in Tamil -April-2024:
------------- நிறுவனம் ஜிபிடி லாங்குவேஜ் மாடலின் ‘ஜிபிடி-4o’ மாடலை அறிமுகம் செய்தது?
A) கூகிள்
B) மைக்ரோசாப்ட்
C) டெஸ்லா
D) ஓபன் ஏஐ
ANS : D) ஓபன் ஏஐ
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
- MARCH 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மார்ச் 2024
- APRIL 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஏப்ரல் 2024
- MAY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / மே 2024
No comments:
Post a Comment