Saturday, May 18, 2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 18.05.2024

MAY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL - 18.05.2024


புதிய கரோனா வைரஸ்  -FLiRT variant of the Covid virus - "ஃபிலிர்ட்" :

  • புதிய கரோனா வைரஸின் ஒமிக்ரான் துணை வகை கேபி2 வைரஸால்  (FLiRT variant of the Covid virus) கிட்டத்தட்ட 100 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
  • அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் புதிய வகை வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மேலும்,"உலகளாவிய பாதுகாப்புகள் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க உதவும், கரோனா வைரஸ் புதிய மாறுபாடுகளுடன் பரவ ஆரம்பித்துள்ளது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
  • அதற்கு கே1, கே2 ,”ஃபிலிர்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு உலகளவில் பரவிய ஒமிக்ரான் ஜெஎன்1-ன் வழித்தோன்றல்கள் ஆகும். 
  • ஐக்கிய ராஜ்ஜியம், தென் கொரியா மற்றும் நியூசிலாந்திலும் ’ஃபிலிர்ட்’ எனப் பெயரிடப்பட்ட வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இது கரோனா தொற்றின் புதிய அலை பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
  • இந்தியாவில் மே 6 வரை, 238 பேர் கேபி-2 தொற்றாலும், 30 பேர் கேபி 1.1-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சார்ஸ் கோவி-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  • கேபி 1 மற்றும் கேபி 2 இந்த இரண்டு வைரஸ்களும் "ஃபிலிர்ட்" என அழைக்கப்படும் குழுவைச் சேர்ந்தவை.

2027 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பிரேசில் நடத்துகிறது:

  • 17 மே 2024 அன்று பாங்காக்கில் 74வது FIFA காங்கிரஸின் போது, ​​2027 மகளிர் உலகக் கோப்பையை பிரேசில் நடத்தும் என்று FIFA அறிவித்தது, இது தென் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும் முதல் FIFA மகளிர் உலகக் கோப்பையாகும்.
  • ஃபிஃபாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மகளிர் உலகக் கோப்பை 1991 இல் சீனாவில் நடந்தது.

இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைவர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்:

  • பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வரும் ஜூன் 6-ம் தேதி குவைத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகிறது. தகுதி சுற்று தொடரில் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் குவைத் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி  சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக அறிவித்துள்ளார்.
  •  39 வயதான சுனில் ஷேத்ரி கடந்த 2005-ம்ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். 19 ஆண்டுகளாக இந்தியகால்பந்து அணியில் வேரூன்றிய அவர், 150 போட்டிகளில் விளையாடி 94 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார் சுனில் ஷேத்ரி.
சோமி பாக் மணிமண்டபம்:
  • ஆக்ராவில் 102 ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த சோமி பாக் மணிமண்டபம் முழுமை பெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. 
  • உலக அதிசயமான தாஜ்மகால் போன்றே வெள்ளை பளிங்குக்கற்களால் அற்புத கலைநயத்துடன்சோமி பாக் கட்டியெழுப்பப்பட் டிருக் கிறது. தாஜ்மகால் வீற்றிருக்கும் பகுதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இது உள்ளது. ‘இறைவனின் தோட்டம்’ என்ற பொருள்படும் சோமி பாக் மணிமண்டபம் ராதாசோமி எனும் சமய மார்க்கத்தைத் தோற்றுவித்த தானி சுவாமிஜி மகராஜ் என்பவருக்கு வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கல்லறை மாடமாகும். 
  • 1922-ம் ஆண்டில் கட்டப்படத் தொடங்கிய இந்த மணிமண்டபத்தின் கட்டிடப் பணியில் கடந்த 102 ஆண்டுகளில் தலைமுறை தலைமுறையாகப் பலர் ஈடுபட்டுவந்துள்ளனர். உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் அயல் நாடுகளிலும் ராதாசோமி பற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிக உயரமான சுரங்கப்பாதை:
  • இந்தியாவின் மிக உயரமான சுரங்கப்பாதையாக அருணாச்சலப் பிரதேசத்தின் சேலா சுரங்கப்பாதை (Sela Tunnel)  இங்கிலாந்திலுள்ள இன்டர்நேஷனல் புக் ஆஃப் ஹானர் (International Book of Honour (IBH)) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  
  • அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அஸ்ஸாமின் தேஜ்பூரையும் தவாங்கையும் இணைக்கும் சாலையில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதை சேலா சுரங்கப்பாதை ஆகும்.  
  • எல்லை சாலை அமைப்பின் (Border Road Organisation (BRO)) கீழ்,  படேல் இன்ஜினியரிங் லிமிடெட் மூலம் VARTAK திட்டத்தின் மூலம் இந்த சுரங்கப்பாதை   13,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   
India – Australia – Indonesia Trilateral Maritime Security Workshop:
  • “இந்தியா - ஆஸ்திரேலியா - இந்தோனேசியா முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பட்டறை” (India – Australia – Indonesia Trilateral Maritime Security Workshop (TMSW)) இன் இரண்டாவது பதிப்பு, 15 - 17 மே 2024 வரை, ‘இந்தியப் பெருங்கடல் பகுதி: பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள்’ என்ற கருப்பொருளுடன்,  கொச்சியில் உள்ள INS துரோணாச்சார்யாவில் (INS Dronacharya) நடத்தப்பட்டது.  
சுத்தமான சமையல் குறித்த முதல் உச்சி மாநாடு 2024 :

  • சுத்தமான சமையல் குறித்த முதல் உச்சி மாநாடு (Summit on Clean Cooking) மே 14, 2024 அன்று பாரிஸில் நடந்தது.
  • பாரம்பரிய சமையல் முறைகளால் ஏற்படும் முக்கிய உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதே ஆப்பிரிக்காவில் சுத்தமான சமையல் உச்சிமாநாட்டின் குறிக்கோள்.
  • ஆப்பிரிக்காவில் 900 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விறகுடன் சமைக்கிறார்கள்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருட்கள் மற்றும் சமையல் தொழில்நுட்பங்களை மாசுபடுத்துவதையும் மரங்களை வெட்டுவதையும் குறைக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
  • நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இணைந்து செயல்பட இது ஒரு முக்கியமான இடம்.
  • இந்த நிகழ்வானது சோலார் மற்றும் பயோகேஸ் அடுப்புகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறது 
  • 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, இந்த திட்டம் மிகவும் முக்கியமானது
கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவி:
  • கைப்பேசிக்கான கையடக்க சூரியஒளி மின்னூட்ட கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது.
  • திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி. நாகமணியின் மேற்பாா்வையில், பகுதி நேர முனைவா் பட்டம் பெற்ற சிடிஏசியின் மூத்த இயக்குநா் வி. சந்திரசேகா் இந்த மின்னூட்ட கருவியை கண்டுபிடித்துள்ளாா். மேலும், தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சூரியஒளி தகடு (சோலாா் பேனல்), மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான தீவிர மின்தேக்கி (அல்ட்ரா கேப்பாசிட்டா்) ஆகியவற்றையும் கண்டுபிடித்தாா். இதற்காக 3 காப்புரிமைகள் மற்றும் 3 பதிப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. 
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024:
  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அணிகள் பிரிவில் பங்கேற்கும் இந்திய அணிகளுக்கு சரத் கமல், மனிகா பத்ரா தலைமை தாங்குகின்றனா். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 26 ஜீலை 2024 முதல் 11 ஆகஸ்டு 2024 வரையில் நடைபெறவுள்ளன.  
ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது:

ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே  ஒப்பந்தம் 13.05.2024 அன்று கையெழுத்தாகி உள் ளது.

இந்த ஒப்பந்தத்தின் இராஜதந்திர முக்கியத்துவம் :
  • சீனாவின் 'ஒரே பாதை, ஒரேமண்டலம்' திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருகிறது. இதன்மூலம் வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடனான கடல் வழி சரக்கு போக்குவரத்தை சீனா அதிகரித்து வருகிறது.
  • சீனாவுக்கு போட்டியாக குவாதர் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ஈரானின் சபாகர் துறைமுகத்தை இந்தியா குத்தகைக்கு பெற்றிருக்கிறது.  
  • இதன் மூலம், ஈரானின் சபாகர் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு, அந்த நாடுகளில் இருந்துஇயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, 30 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது.
  • கூ.தக. ஈரானின் சபாகர் துறைமுகம் தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், அன்றைய ஈரான் அதிபர் கடாமியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளிடையே கடந்த 2016-ம் ஆண்டில் சபாகர் துறைமுக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் சபாகரின் சாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் இந்தியா நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நீண்ட கால அடிப்படையில் ஈரானின் சபாகரில் உள்ளசாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது.  
உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 (World Hydrogen Summit 2024):
  • உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 (World Hydrogen Summit 2024)-ல்  முதல் முறையாக  இந்திய அரங்கம் (India Pavilion), தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை (National Green Hydrogen Mission) காட்சிப்படுத்தியது.  
  • உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும்.  2024 மே 13 முதல் 15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 -ல் முதல் முறையாக இந்தியா தனது சொந்த அரங்கத்தை அமைத்துள்ளது. 
  • இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கு, உச்சிமாநாட்டின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும்.   
  • இந்த நிகழ்வில் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர், திரு பூபிந்தர் சிங் பல்லா 2024, மே 15, அன்று   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் இந்தியாவின் உத்திசார்ந்த பார்வை மற்றும் திறன்களை  எடுத்துரைத்து உரையாற்றினார். 

இந்தியாவின் ஹைட்ரஜன் முன்னெடுப்புகள் : 
  • இந்தியா தனது தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை (National Green Hydrogen Mission) 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.19,744 கோடி ஒட்டுமொத்த செலவில் தொடங்கியது . 
  • 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 எம்எம்டி (மில்லியன் மெட்ரிக் டன்) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை அடைய இந்தியா ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. 
  • எஃகு, போக்குவரத்து, கப்பல் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களையும் இந்தியா அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் புதுமைகளை வளர்ப்பதற்கும் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஹைட்ரஜன் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்பு தொகுப்பு இடங்களைத் தொடங்கியுள்ளது .

நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் ஏப்ரல்-2024:

Current Affairs Question and Answers in Tamil -April-2024:

புதிய கரோனா வைரஸ் ------ அதற்கு கே1, கே2 ,”ஃபிலிர்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு உலகளவில் பரவிய ஒமிக்ரான் ஜெஎன்1-ன் வழித்தோன்றல்கள் ஆகும்?


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: