TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.01.24

TNPSC PAYILAGAM
By -
0


 

 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12.01.24


அயலகத் தமிழர் தின விழா:2024

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடத்தி வருகிறது. 

KEY POINTS : அயலகத் தமிழர் தின விழா

நெய்தல் மீட்சி இயக்கம்:

கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ தமிழக அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், 1076 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டுகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும். 

KEY POINTS : நெய்தல் மீட்சி இயக்கம்  /  Neithal Recovery Movement

“தந்தை பெரியார் விருது” 2023

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கௌரவித்து வருகிறது. 

அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது”-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், 

தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். 

அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.

சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

“டாக்டர் அம்பேத்கர் விருது’’ 2023

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது’’ வழங்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி. சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார். 

மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார்.

டீல்ஸ் திட்டம் / TEALS – Technology Education and Learning Support

நம் நாட்டிலேயே முதல்முறையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘டீல்ஸ்’ எனும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி கற்றலுக்கு துணை நிற்றல் திட்டத்தின் (Technology Education and Learning Support - TEALS) கீழ் 14 அரசுப் பள்ளிகளில் முன்னோட்டமாக நவீன கற்பித்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்தாண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

KEY POINTS :  டீல்ஸ் திட்டம் / TEALS – Technology Education and Learning Support

நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்:

மகாராஷ்டிரத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

உலகின் மிக நீளமான கடல் பாலம் :

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, தற்போது அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவா ஷேவா அடல் சேது என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும். 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. கடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் சேது கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீ. இதில் கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தொலைவிற்கு பாலம் அடைந்துள்ளது. 

உலகின் மிக நீளமான கடல் பாலமாகவும், இந்தியாவின் மிக நீளமான பாலமாகவும் இது கருதப்படுகிறது

இது மும்பை சர்வதேச விமான நிலையம், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். மும்பையிலிருந்து புணே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்குப் பயண நேரத்தைக் குறைக்கும். மேலும், மும்பை துறைமுகத்திற்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும்.

கனிம உற்பத்தி 2023 

இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த அக்டோபரில் 13.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இது குறித்து இந்திய சுரங்கங்கள் அமைப்பு (ஐபிஎம்) வெளியிட்டுள்ள பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: 

கடந்த 2023 அக்டோபரில் நாட்டின் கனிம உற்பத்திக் குறியீட்டு எண் 127.4-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாத்தோடு ஒப்பிடுகையில் இது 13.1 சதவீதம் அதிகமாகும். 2022 ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான 7 மாதங்களோடு ஒப்பிடுகையில், கடந்த ஆண்டின் அதே மாதங்களில் நாட்டின் கனிம உற்பத்தி 9.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. 

கடந்த அக்டோபரில் இரும்புத் தாது, மாங்கனீஸ் தாது, தங்கம், நிலக்கரி ஆகிய கனிமப் பொருள்களின் உற்பத்தி நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது

லிக்னைட், அடா் செம்பு, பாக்ஸைட் போன்ற முக்கிய கனிமங்களின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது


ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று கொண்டாடப்படுகிறது. 

அவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பிறந்தார். சுவாமிஜியின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த மற்றும் உழைத்த இலட்சியங்கள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பெரும் ஆதாரமாக இருப்பதால், அதை ராஷ்ட்ரிய யுவ திவாஸ் என்று கடைப்பிடிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அவர் சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தி இந்தியாவின் பெயரைப் போற்றினார்.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!