2022ஆம் ஆண்டுக்கான ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியல் / States Startup Ranking List 2022:
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) என்பது இந்தியாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துறை ஆகும்.
இது தேசிய முன்னுரிமைகள் மற்றும் சமூக-பொருளாதார நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, தொழில்துறையின் வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஸ்டார்ட் அப் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜனவரி 16) இந்தியாவில் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2022ஆம் ஆண்டுக்கான ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலை மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார்.
அதில் 'சிறந்த செயல்திறன்' கொண்ட 5 மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் இதில் குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 7,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிகச் சிறந்த மாநிலங்கள் - குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்
சிறந்த மாநிலங்கள் - மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா
முதன்மை மாநிலங்கள் - ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா
ஆர்வம் காட்டும் மாநிலங்கள் - பீகார், அரியானா. அந்தமான் நிகோபார் தீவுகள், நாகாலாந்து
முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் - சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்
No comments:
Post a Comment