Thursday, January 18, 2024

9th India International Science Festival (IISF) / 9-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா:

 


9th India International Science Festival (IISF)  

9-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா:


  • ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 9-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 நடைபெறுகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 9-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 
  • ஃபரிதாபாதில் (ஹரியானா) அமைந்துள்ள உயிரி தொழில்நுட்பத் துறையின் பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் - சுகாதார அறிவியல், தொழில்நுட்ப மாற்ற நிறுவனம் ஆகியவை இந்த மாபெரும் நிகழ்வை நடத்துகின்றன.
  • அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் சாதனைகளைக் கொண்டாடுவதே இந்த அறிவியல் திருவிழாவின் நோக்கமாகும். அறிவியல் ஆர்வலர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதும், இளம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும், அதை இந்திய மக்களிடையே பரப்புவதும் இந்த விழாவின் நோக்கமாகும். 
  • இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023-ன் மைய கருப்பொருள் "அமிர்த காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு செல்லுதல்" என்பதாகும்.
  • இந்தத் திருவிழாவில் அர்ஜென்டினா, அர்மீனியா, ஆஸ்திரேலியா, கம்போடியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், கென்யா, லாவோ, மலேசியா, மியான்மர், நமீபியா, பிலிப்பைன்ஸ், ருவாண்டா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், ஜிம்பாப்வே ஆகிய 22 நாடுகள் பங்கேற்கின்றன.
  • இந்த நிகழ்வில் 150 மீட்டர் உயரத்தில் பாரா-மோட்டார்களைப் பயன்படுத்தி வானிலை அவதானிப்புகளை மேற்கொள்ளும் மைக்ரோ செயற்கைக்கோளை பள்ளி மாணவர்கள் தயாரிக்க உள்ளனர் 

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (13.11.2024)

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு மத்திய அரசு அனுமதி : ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய...