81st Golden Globe Awards / கோல்டன் குளோப் விருதுகள் 2024:
உலக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. கோல்டன் குளோப் விருதானது சிறந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 81-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் அமெரிக்காவில் இருக்கும் பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் கோலாகலமாக 07.01.2024 நடந்தது.
கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலான விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.
கோல்டன் குளோப் விருது வெற்றியாளர்கள் முழு பட்டியல்:2024
- சிறந்த திரைப்படம் (டிராமா) – ஒப்பன்ஹெய்மர்
- சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)-இதில் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்றார். அவர் வென்ற முதல் கோல்டன் குளோப் விருது இதுவாகும்.
- சிறந்த நடிகை (ட்ராமா) லில்லி கிளாட்ஸ்டோன் (ஒப்பன்ஹெய்மர்)
- சிறந்த நடிகர் (டிராமா) – சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
- சிறந்த திரைக்கதை – ஜஸ்டின் டிரைட் மற்றும் ஆர்த்தர் ஹராரி
- சிறந்த துணை நடிகை – டாவின் ஜாய் ராண்டால்ஃப் – (தி ஹோல்டோவர்ஸ்)
- சிறந்த தொலைக்காட்சி தொடர் – தி பியர்
- சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் – ரிக்கி கெர்விஸ்
- சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) – புவர் திங்ஸ்
- சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) அனாடமி ஆஃப் எ ஃபால்
- சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
- சிறந்த ஆந்தாலஜி சீரிஸ் – தி பீஃப்
- சிறந்த பின்னணி இசை – லுட்விக் கோரன்சன் (ஓப்பன் ஹெய்மர்)
- சிறந்த பாடல் – What Was I Made For? (பார்பி)
- சிறந்த தொலைக்காட்சி நடிகர் – கீரன் குல்கின் (Succession)
- சிறந்த தொலைக்காட்சி நடிகை – அயோ எடெப்ரி (The Bear)
- சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) – பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
- சிறந்த துணை நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
- சிறந்த அனிமேஷன் படம் – ‘தி பாய் அண்ட் தி ஹெரோன்
- சிறந்த வசூல் சாதனை படம் – பார்பி