இந்திர தனுஷ் (Mission Indra Dhanush)
இந்திர தனுஷ் (Mission Indra Dhanush): சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆகஸ்ட் 7முதல் 3தவணைகளில் இந்திராதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் – நடத்தப்பட உள்ளது.இந்திர தனுஷ் திட்டம் 25.12.2014-ல் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டது.தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய கொடி நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துதலே இதன் நோக்கமாகும்.
மத்திய அரசின் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த மாவட்டங்களில் தடுப்பு மருந்துகள் வழங்காமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விடுபட்ட தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் இந்தத் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.